Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-012 (ஒரு உணவு... ஒரு நினைவு)  (Read 274 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 01-ஜூலை-2026
13. நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தையும், தரத்தையும் தொடர்ந்து
பேணும் நோக்கில், இந்த வாரம் முதல் ஒரு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

வழங்கப்படும் தலைப்பிற்கு பொருந்தாத வகையிலோ, தலைப்பிலிருந்து விலகிச் செல்லும் வகையிலோ எழுதப்படும் பதிவுகள் FM பண்பலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படமாட்டாது.

மேலும், முன்பே அறிவித்தபடி, இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய சொந்த அனுபவங்களையோ அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களின் அனுபவங்களையோ, அவர்களுடைய முழு அனுமதியுடன் மட்டுமே பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிறரின் அனுமதியின்றி அவர்களது அனுபவங்களைப் பகிர்வதால் ஏற்படும் எந்தவொரு பொறுப்பும், பதிவிடும் நபரையே சாரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்திற்கும், அன்பான அர்ப்பணிப்பிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். அதே நேரத்தில், பங்கேற்பதற்காக மட்டுமே தலைப்பிலிருந்து விலகியோ
அல்லது கற்பனையான பதிவுகளையோ பகிர்வதைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சியின் நோக்கம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு, தகுதியற்ற பதிவுகளை FM நிகழ்ச்சியில் இணைக்காமல் இருப்பதற்கும், தலைப்பிற்கு பொருத்தமான பதிவுகளை மட்டும் ஒலிபரப்புவதற்கும் நெஞ்சம் மறப்பதில்லை குழுவிற்கு முழு உரிமையும் உள்ளது. இதற்கு உங்கள் புரிதலும் ஒத்துழைப்பும் எப்போதும் போல இருக்கும் என நம்புகிறோம்.

நிகழ்ச்சியின் தரத்தையும், சுவாரஸ்யத்தையும், அனைவருக்கும் சிறந்த அனுபவமாக மாற்றும் நோக்கிலும் மட்டுமே இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

என்றும் போல உங்கள் அழகான நினைவுகளையும், தலைப்பிற்கு ஏற்ற
அருமையான பதிவுகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-012

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

ஒரு உணவு... ஒரு நினைவு'

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline Rahmathulla


   
  அண்ணா செய்த செயல்


எனக்கு பூரணம்  ரொம்ப பிடிக்கும். அந்த நினைவு பகிர்ந்து  கொள்கிறேன்..

அப்பா இருக்கும் போது நடந்த விஷயம்.  ரமலான் மாதம்  30நாள் நோன்பு நோற்க்கும்  மாதம்.. அந்த மாதம் கடைசி 10நோண்பில்
வீட்ல  அம்மா & பாட்டி   & மாமி எல்லாம் சேர்ந்து பலகாரம் செய்வாங்க...

வருடத்தில் இரு முறை பலகாரம் எங்க வீட்டுல செய்வது  வழக்கம்.

ரமலான் மாதம் & ரமலான் முடிந்த பிறகு 4 மாதம் கழித்து  பூரணம்  பாத்திஹா னு  ஒரு மாதம் வரும் அப்போ ரெடி பண்ணுவாங்க.

முறுக்கு, எள்ளு சீடை, பூரணம் எல்லாம்  ரெடி பண்ணுவாங்க..

அந்த டைம் எங்க அண்ணா ரமலான் நோன்பு வைத்தால் 1month.  எங்க மட்டன் கடைக்கு  போக மாட்டான் ..

அப்பா ஏன் டா இன்னும் பொழப்ப பார்க்கனும் எண்ணம் வரைலயா னு கேட்ட உடனே இவனுக்கு கோபம் வந்து எங்க அம்மா  எல்லாம் ரெடி  பண்ணின
பூரணத்தை  கோபப்பட்டு மிதி மிதி மிதி னு  எல்லாத்தையும் மிதுச்சுட்டான்..

 அதுக்கு அவன் சொல்லறான் நான் என்ன இந்த   மாதம் மட்டும் தானே வரலை வருஷம்  முழுவதுமா வராமல் இருக்கேன் என்று சொல்லுறான்..

எங்க அக்கா  தான் அண்ணாவை சத்தம் போட்டு.. அம்மா அப்பா எல்லாம் அவனை திட்டி  விட்டாங்க..

எனக்கு அந்த நேரம்  ஒரே அழுகை ஏன்டா இப்படி பண்ணின   சாப்பிடும் பொருள் a
என்று சொல்லி எனக்கு பிடிச்ச snacks செய்யும் பொழுது தான் உங்க மகனுக்கு கோபம் வருமா.. என்று சொல்லி அவனை சத்தம் போட்டேன் அவன் அதை காதுல வாங்கல .. Room kulla போயிட்டான்..

இனி அம்மாவிடம் நான் எப்படி மறுபடியும் பூரணம் ரெடி  பண்ணுங்கனு  கேட்பேன்...

அதற்கும் இனி வாய்ப்பு இல்லை..
எனக்கு அந்த மிதி பட்ட பூரணத்தை பார்க்க பார்க்க எங்க அண்ணா மேல இன்னும் கோபம் தான் அதிகமானது.. ஆசை பட்ட snacks   பூரணம் சாப்பிட முடியலனு...

நான் அவனை திட்டினாள்.. இன்னும் வீட்ல சண்டை பெருசா தான் வரும்னு நெனச்சுட்டு
பொறுமையா இருந்தேன்..

மறுநாள் அம்மா முறுக்கு அதற்கு அடுத்த நாள் எள்ளு சீடை ரெடி பண்ணாங்க...

பகல் full ah நோன்பு இருக்கும்  நேரம் இரவில் அந்த முறுக்கு, எள்ளு சீடை சாப்பிடுவேன்...
கடையில் order செய்து வாங்கி சாப்பிட்டால் கூட ருசி இருக்காது..

வீட்ல அம்மா & பெரியவர்கள் கை பக்குவம் போல் எங்கும் வராது  அவ்ளோ சுவையா இருக்கும்.. பூரணம், எள்ளு சீடை, முறுக்கு..


எனக்கு ரொம்பவும் பிடித்த Snacks பூரணம் இல்லாத போது  ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது..
 
அம்மா ஆசையா ஆசையா ரெடி பண்ணின அம்மாக்கும் & மாமி, பாட்டி எல்லாம் வேதனை பட்டது தான் மிச்சம்..

அடுத்தடுத்து ரமலான் நோன்பு வரும் பொழுது எங்க அண்ணா செய்த செயல் தான் நியாபகம் வரும்..

இந்த வருடம் ரமலான் time la கூட வீட்ல பேசுவோம்  அண்ணா, அண்ணா wife ta அம்மா சொல்லவாங்க இந்த மாதிரி  அவன் செய்துட்டான் என்று... அண்ணா wife சொல்லும் என்னால நம்ப முடியலனு..
 இவரா இப்படி செய்தார் என்று...

பூரணம் snacks என்றும் மறக்க முடியாத ஒரு உணவு ஒரு நினைவு..

இப்போ அப்பாவும் இல்லை அப்பா இறந்து விட்டார்.. கடந்த கால நினைவுகள் என்றென்றும் என் மனதில்  நிலைத்திருக்கும் நினைவுகள்..

நன்றி

Offline Thenmozhi

இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்தது உணவு தான்.உணவை இரசித்து ருசித்து சாப்பிடுவேன்.ஆனால் அதிகமாக சாப்பிட மாட்டேன்.என் tasteக்கு cook பண்ணி சாப்பிடணும்னு எனக்கு ஆசை.எங்க வீட்டில cookபண்ணலாம்னா அம்மா சொல்லுவாங்க "கையில் சூடு பிடிக்கும்.அப்புறம் schoolக்கு பதில் சொல்ல முடியாதுன்னு".அம்மாக்கு அவங்கள விட நான் நல்லா cook பண்ணிடுவேன் என்று பொறாமை அப்படின்னு சொல்லிட்டு போயிட்டேன்.

விடுமுறையில்  பாட்டி வீட்டுக்கு போனபோது பாட்டியை கேட்டிருந்தேன் "பாட்டி எனக்கு cookபண்ண ஆசையா இருக்கு. அம்மா விடமாட்டேங்கிறாங்க.நீங்க விடுவீங்களா" அப்படின்னு.அப்போது எனக்கு பத்து வயது."இந்த வயதில் தான் நானும் cook பண்ணேன்.வா உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்" என்று பாட்டி தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

பாட்டி பொருட்களை எடுத்துட்டு வா,கழுவிட்டு வா என்று சொல்லிகிட்டு இருந்தாங்க."பாட்டி என்கிட்ட வேலை வாங்க கூடாது.cooking only தான் எனக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு பாட்டிகிட்ட சொல்லிட்டேன்.

பாட்டி வீட்டில் விறகு அடுப்பு இருக்கும்.விறகை cross பண்ணி வைக்கணும்.first சிறிய விறகுகளை வைத்து தீ மூட்டனும் என்று விறகு அடுப்பு எப்படி மூட்டுறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.தீ மூட்டி சோறு ஆக்குவதற்கு பானையில் தண்ணி வைத்து கொதிக்க விட சொன்னாங்க.அரிசியை எவ்வாறு களைந்தெடுப்பது என்றும்,சோறு வேந்துடுச்சா என கையில் எடுத்து பார்க்க சொன்னாங்க.அப்புறம் கஞ்சி வடிக்கிறது எப்படின்னு அதிலேயே வடிச்சு காமிச்சாங்க.வடித்த கஞ்சியில் உப்பு, தேங்காய் பால் விட்டு குடிக்க கொடுத்தாங்க.அந்த tasteக்கு எந்த சூப்பும் ஈடாகாது.

பாட்டி சொன்னாங்க first நீ உருளைக்கிழங்கு குழம்பும்,பருப்புக்கறியும் கத்துக்கோன்னு."நீங்க சொல்லி மட்டும் கொடுக்கணும்.கை வைக்க கூடாது என்று நான் சொல்லிட்டேன்.பாட்டி vegetables cut பண்றது சொல்லிக் கொடுத்தாங்க.நான் என்ன பண்ணுனேனா பாட்டி சொன்ன sizeஐ வச்சு வெஜிடேபிள் cutபண்ணிட்டு இருந்தேன்.அதைப் பார்த்து தாத்தா சொன்னாங்க "பார் என் பேர்த்தி எப்படி அளந்து அளந்து வெட்டுறா"அப்படின்னு.பாட்டி சிரிச்சுக்கிட்டே இப்படி அளந்து வெட்ட தேவையில்லமா.கண் மட்டத்துக்கு பார்த்து வெட்டினால் போதும் அப்படின்னு சொன்னாங்க.அன்று தான் நான் வெஜிடேபிள் வெட்ட கத்துக்கிட்டேன்.

பருப்புக்கறி வைக்கிறது சொல்லிக் கொடுத்தாங்க.எப்படி உப்பு கரெக்டா இருக்கு அப்படின்னு பார்க்கிறது,கரண்டியால் கறி எடுத்து கையில விட்டு சுவைத்துப் பார்க்கலாம் .இல்லன்னா smell பண்ணி பார்க்கலாம் அப்படின்னு சொன்னாங்க.எனக்கு பிடித்தது smell பண்ணி கரெக்ட்டா இருக்கான்னு பார்க்கிறது.அப்படியே உருளைக்கிழங்குக்கறி  வைக்கிறதும் சொல்லிக் கொடுத்தாங்க.

பாட்டி சொன்னாங்க "விறகு தாத்தா எடுத்து வச்சிருக்காங்க அதை எடுத்துட்டு வா" அப்படின்னு.நான் போய் பார்த்தேன்.அங்கே தாத்தா விறகு வெட்டிய கோடரி இருந்தது.தாத்தா பண்ணது போல நானும் விறகு வெட்ட கோடரி எடுத்தேன்.அந்தக் கோடரியின் பிடி என் கையில வந்து அடித்து விட்டது.ஐயோ அம்மானு கத்தினேன்.என்ன ஆச்சுன்னு கேட்டாங்க.எதுவும் இல்ல பாட்டி என்று சொல்லி கையை மறைச்சுகிட்டே போயிட்டேன்.அப்புறம் பார்த்தா என் சுட்டு விரல் நகம் black colourஆக வந்துடுச்சு.waterல கழுவி பார்த்தேன் போகல.தாத்தா வந்ததும் தாத்தா கிட்ட காமித்தேன்.தாத்தா என்ன ஆச்சுன்னு கேட்டாங்க. திட்டுவாங்கன்னு "என் shoeஎடுக்க போனேன்.stand கையில் விழுந்திருச்சு"அப்படின்னு சொன்னேன்.தாத்தா பாட்டிக்கு தான் திட்டு.

தாத்தா first நான் cookபண்ண உணவு சாப்பிட்டாங்க.ஆஹா "என் பேர்த்தி எவ்வளவு tasteஆ cook பண்ணி இருக்கா"அப்படின்னு சொன்னாங்க."உண்மையா சொல்றீங்களா தாத்தா"  என்று கேட்டேன்."பாட்டி,உங்க அம்மாவை விட நீ நல்லா cook பண்ற" என்று தாத்தா சொன்ன அந்த வார்த்தை தான் இன்று வரை என்னை cookingமேல ஆர்வத்தை காட்டிக்கிட்டு இருக்கு.அப்புறம் நான்,அப்பா,அம்மா,அண்ணா,பாட்டி எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டோம்.அண்ணா நீயா cook பண்ணா அப்படி என்று ஒரு கேள்வி.

எல்லோரும் ஒற்றுமையாக ஒன்று கூடி நான் சமைத்த முதல் உணவை சாப்பிட்டது எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்வு என்றும் மனதில் நினைவாக...

அழகிய நினைவுகளை பகிர்வதற்கு சந்தர்ப்பம் அளித்த NM teamக்கு நன்றிகள்.



Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 45
  • Total likes: 208
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
‎ஒரு உணவை பத்தி சொல்லணும் சொன்னா எப்படிங்க சொல்றது. குழந்தையா இருக்கும்போது ஒரு உணவு பிடிக்கும். சிறுமியாக மாறும்போது ஒரு உணவு பிடிக்கும். குமரியாகும்போது ஒரு உணவு பிடிக்கும். இதுல நான் எதை பத்தி பேசுறது.

எங்க அம்மா கைபக்குவத்துல சமையல் எல்லாமே சுவையா தான் இருக்கும். அதுலயும் உளுந்தஞ்சோறும் , நாட்டுக்கோழி கறியும் கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சின்ன வயசுல உளுந்தஞ்சோறு சாப்பிட சொன்னா வேணாம் வேணாம் என்று ஓடுவேன். ஆனா அந்த உளுந்தஞ்சோறையும் நான் ரசித்து சாப்பிடுற ஒரு நேரம் வந்துச்சு. என் கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட அத்தைமார் எல்லாரும் சேர்ந்து எனக்கு பொங்கி போட்டது உளுந்தஞ்சோறு தான். என் கூட சிறு வயதிலிருந்து ஓடியாடி விளையாடின அத்தை பசங்க அனைவரும் சேர்ந்து சுத்தி நின்று கிண்டல் பண்ண வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க சாப்பிட்ட சாப்பாடு அடடடடா அதன் ருசி சொல்ல வார்த்தையே இல்லை. அன்றிலிருந்து தான் உளுந்தஞ்சோறும், நாட்டுகோழி கறியும் என்னோட விருப்ப சாப்பாடு பட்டியலில் இடம் பிடித்தது.

அம்மாவிடம் கேட்டு செய்முறையை கற்றுக்கொண்டு இன்றுவரை என்னோட சமையலறையில் மாதத்தில் இருமுறையாவது உளுந்துஞ்சோறு இடம் பிடிக்கும். என்னோட பையன் கிட்ட பிரியாணி வேணுமா உளுந்தஞ்சோறு வேணுமானு கேட்டா உளுந்தஞ்சோறு வேணும்னு தான் சொல்லுவான். அந்த அளவுக்கு எங்க எல்லாருக்கும் பிடிக்கும்.

அடுத்ததா முந்திரிக்கொத்து. முந்திரிக்கொத்து செய்றதுல எங்க அம்மாவை அடிச்சுக்க வேற ஆளே கிடையாதுனு எங்க குடும்பத்திலேயே சொல்லுவாங்க. வேலை அதிகம் இழுக்குற பலகாரம் னு சொன்னா முந்திரிக்கொத்து தான்னு எங்க அம்மா சொல்லுவாங்க. சரியான பதத்தில் செய்யலைன்னா ரெண்டே நாள்ல கெட்டுப் போய்விடும். எங்க அம்மா செய்ற முந்திரிக்கொத்துக்கு  நான் அடிமைன்னே சொல்லுவேன். அவ்வளவு ருசியா இருக்கும். சின்ன வயசுல உருண்டை உருட்டறதுக்கு அம்மா கூப்பிட்டா டிமிக்கி கொடுத்துட்டு ஓடிடுவேன். அம்மாவே தனியா உருண்டை உருட்டி அதை நாலு நாள் வீட்டிலேயே வாட வைப்பாங்க. நான் அம்மாக்கு தெரியாம அதையும் அள்ளிட்டு ஓடுவேன். அஞ்சாவது நாளு பொறிச்சு தரும்போது அதை சாப்பிடுற ருசி இருக்கே அதெல்லாம் சாப்பிட்டவங்களுக்கு தான் தெரியும். இப்போ நானே என் வீட்ல தனியா முந்திரிக்கொத்து செய்து என் பையன் சாப்பிடும் போது அதை பார்த்து ரசிக்கிற சுகம் இருக்கே...

அம்மா கிட்ட இருந்து தான் பொண்ணுங்க சமையல் கத்துப்பாங்க. அன்று நான் அழுது அழுது கத்துக்கிட்டது எல்லாம் இன்று இங்கு பதிவாக பதியும்போது என் நினைவுகளை நானே மீட்டிப் பார்க்கும்போது அட இது எல்லாம் நான்தானா என்று எனக்கே ஆச்சரியமாக உள்ளது. புதிய புதிய தலைப்புகளை தந்து மனதில் புதைந்திருக்கும் நினைவுகளை வெளிய கொண்டுவர உதவும் ftc க்கு நன்றிகள் பல..

Offline Sethu

ஹாய் எஃப் டி சி உறவுகளே இன்றைக்கு நம்ம நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராமுக்கு வந்த தலைப்பு உணவு ஓர் நினைவு இந்த தலைப்பை பார்த்ததும் எனக்கு நினைவு வருவது என் அம்மா சமைக்கும் இட்லியும் துவரம் பருப்பு சட்னியும்.அப்புறம் அம்மா வைக்கும் மட்டன் சுக்கா இந்த ரெண்டு உணவுத்தான் உணவின் நினைவா நான் நினைக்கிறேன்.

முதல்ல நான் அம்மா வைக்கும் இட்லி,துவரம் பருப்பு சட்னி இதை பத்தி சொல்லுறேன். இட்லி எல்லார் வீட்டுலயும் செய்ற மாதிரி தான்.ஆனா அந்த பருப்பு சட்னி தான் எனக்கு மெயின் பிக்சர். அம்மா அவ்வளவு ருசியா செய்வாங்க. அதான் எங்க ஊர்ல பாம்பே சட்னி அப்படின்னு கூப்பிடுவாங்க. அந்த சட்னியை நினைக்கிறப்ப இன்னும் இப்பவும் என் நாக்குல எச்சில் ஊறுது.

அம்மாட்ட நான் கேட்டேன் அம்மா பாம்பே சட்னி எப்படி செய்வது என்று. அம்மா சொன்னாங்க 150 கிராம் துவர பருப்பு எடுத்துக்கோ,ஒரு அரை மூடி தேங்காய் நறுக்கிக்கோ ,துவரம் பருப்ப அரை மணி நேரம் ஊற வச்சுக்கோ, தேவையான அளவு மிளகாய் சேர்த்துக்கோ ,தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோ, இதை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அடிச்சுக்கணும். ஆட்டு உரல் இருந்தா இன்னும் நல்லா இருக்கும் அப்படின்னு  சொன்னாங்க. இவை அனைத்தையும் மை போல அரைக்க கூடாது. கொத்து கொத்தா அரைக்கணும்னு சொல்லுவாங்க .அப்புறம் ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு அந்த பச்சை வாசனை போற வரை கொதிக்க விடணும். அப்புறம் வெங்காயம் கருவேப்பிலை கடுகு எல்லாம் போட்டு தாளிச்சு இறக்கினால் பாம்பே சட்னி ரெடி அப்படின்னு சொன்னாங்க .இதை நினைக்கிறப்போ எனக்கு இப்பவும் பசி எடுக்குது.

இரண்டாவதாக அம்மா வைக்கும் மட்டன் சுக்கா .அம்மாவைக்கும் மட்டன் சுக்கா என்றால் காலையிலிருந்து வயிற்ற பட்டினி போட்டுக்குவேன். எப்படா மதியம் ஒரு மணி ஆகும்...அந்த மட்டன் சுக்காவை ஒரு பிடி பிடிக்கலாம் என்று நானும் என் தம்பியும் காத்துகிட்டு இருப்போம் .அம்மா சமையல் முடிச்சிட்டு சாப்பிட வாங்க தங்கங்களா என்று கூப்பிடுவாங்க.கூப்பிட்டதும் நானும் எனது தம்பியும் முதலில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அம்மா வைக்கும் அந்த மட்டன் சுக்கா அவ்வளவு சூப்பரா இருக்கும் .அம்மா ,அப்பா  எல்லாரும் சாப்பிட்ட பின்ன அந்த சுக்கா பாத்திரத்தில் கடைசியா ஓட்டிட்டு இருக்கும் குழம்புல கொஞ்சம் போல சாதத்தை போட்டு பிசைஞ்சு தருவாங்க அந்த உணவுக்கு ஈடு இணை வேறு உணவு இல்லை. அந்த உணவை வாங்குவதற்கு எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். இட்லி பாம்பே சட்னி சாதம் மட்டன் சுக்கா இதுவே என் மனதில் நினைத்திருக்கும் உணவு நன்றி வணக்கம்❤️

Offline MaiVizhi



‎எங்க வீட்டுல இருந்து நாலு வீடு தள்ளி தான் எங்க பாட்டி வீடு இருக்கு. எங்க அப்பா ஓட பேரண்ட்ஸ் அச்சம்மா, அச்சச்சா நு கூப்டுவோம்.. 

எங்க அக்கா சின்ன வயசுல இருந்தே அங்க வளர்ந்ததாலே அங்க ரொம்ப அட்டாச்டு. நான் அம்மா வீட்டு சைடு அம்மம்மா கூட தான் ரொம்ப அட்டாச். அதனாலேயே அச்சம்மா வீட்டுக்கு நான் போனா மட்டும் ஏதாச்சும் சண்டை போட்டு இல்லை திட்டு வாங்கிட்டு வருவேன். ஆனா அச்சம்மா செய்யற சாப்பாடு சாப்பிட மட்டும் வெட்கமே இல்லாம டைம்க்கு போயிடுவேன். அது என்னமோ தெரியலைங்க, எங்க அம்மா அரைச்சு கறி குழம்பு வச்சாலும் வராத டேஸ்ட் எங்க அச்சம்மா செய்யற வெறும் புளி சாருக்கு இருக்கும்.

‎வெறும் புளி சாறு.. பாலக்காடு ஓட ஒரு ஸ்பெஷல் தான் அதுவும். ஸ்கூல் லீவ்னாலே அச்சம்மா வீடு தான்.. தோட்டம் ஃபுல்லா சுத்தி காத்துல விழுந்த சின்ன தேங்காயில குச்சியில ஓட்டை போட்டு தண்ணி எல்லாம் குடிச்சு, ஆத்துல ஆட்டம் போட்டு லன்ச் டைம் ஆனதும் அச்சம்மா வீட்டுக்கு வந்துடுவோம். வீட்டுக்கு போறோம்னு மனசில்லாம சொன்னாலும் உடனே அச்சச்சா சொல்வாரு, வெயில் ஆயிடுச்சு இனி இங்கேயே சாப்பிடுங்கனு.. அச்சம்மா அது கேட்டதும் சாப்பிட கூப்பிடுவாங்க.. அவங்க ரெண்டு பேர் மட்டும் இருந்தாலும் எப்போதும் அந்த கிச்சன்ல அந்த பானை நிறைய சாப்பாடு இருக்கும்.. அவங்க அப்படிதான், வயலுக்கு போற யாரு சாப்பிடலை சொன்னாலும் கூப்ட்டு சாப்பாடு போடுவாங்க. நான் சாப்பிட்டதுல எப்பவும் ஆசைப்படுற அந்த சாப்பாடு வெறும் புளி சாறு தான்..

அது ஒன்னும் இல்லைங்க, தேங்காய் எண்ணெய் ஊத்தி கடுகு, காஞ்ச மிளகாய், கறிவேப்பிலை, சின்ன உள்ளி (வெங்காயம்) போட்டு தாளிச்சு, புளி உப்பு கரைச்சு ஊத்தி கொதிக்க வச்ச புளி சாறு.. எங்க வீட்டுல விளைஞ்ச நல்ல குத்தரி சாதம் சுட சுட அதுல புளி சாறு ஊத்தி.. தொட்டுக்க நெத்திலி கருவாடு, அதுவும் ஒன்னு முழுசா கிடக்குறது பெருசு, ஆனாலும் அந்த அரை கருவாடு வாசனையே முழு சாப்பாடு உள்ள போகும்.. சாறுல இருக்குற காஞ்ச மிளகாயை சாதத்துல பிழிஞ்சு, அதுல பச்சை மிளகாய் உப்பு போட்டு ஊற வச்ச மாங்காய் ஒரு பீஸ் வச்சு, கருவாடு கடிச்சு சாப்பிட்டா.. அய்யோ அந்த மொமெண்ட்ல சிக்கன், மட்டன் ஓட டேஸ்ட் கூட இத ஓவர் டேக் பண்ணிடும்ங்க. ஆனா அதுக்கப்புறம் எங்க அம்மாவே செய்ய சொல்லி சாப்பிட்டு இருக்கேன், நான் செஞ்சு சாப்பிட்டு இருக்கேன், எப்பவும் அந்த டேஸ்ட் எனக்கு கிடைச்சது இல்லை.

இப்போ அவங்க ரெண்டு பேரும் இல்லை, அந்த வீடும் இல்லை.. அந்த இடத்துக்கு போனா அவங்க சமையலும், பாசமும், அங்க நாங்க வளர்ந்த நாட்களும் அவ்வளவு அழகா கண் முன்னாடி வரும்.. அவங்க போனாலும் அவங்க போட்ட இந்த புளி சாறோட டேஸ்ட் எப்பவும் எனக்குள்ள இருக்கும்.



Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1296
  • Total likes: 4497
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஒரு உணவு... ஒரு நினைவு அருமையான தலைப்பு

நான் சிறுவயதில் பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்வது வாடிக்கை
அப்படி தான் என் அம்மா சைடு வீடு அப்பா சைடு வீடு ரெண்டு சைடும் உறவுகாரங்கனு வீடு எப்பவும் கலகலப்பா  இருக்கும்

ஏதாச்சும் விசேஷம்னா எங்க உறவுகாரங்களுக்கே தனியா ரெண்டு BUS தேவைப்படும் .அப்படி இருக்கும்.
பள்ளி விடுமுறைல கொஞ்ச நாள் அம்மாவீட்ல,கொஞ்ச நாள் அப்பா வீட்லனு போகும் .அதுல என் அப்பாவோட அப்பா என் தாத்தா வீட்டுக்கு போயிருந்தேன், அவரை பத்தி சொல்லனும்னா காலையில வேலைக்கு போவார் , ராத்திரி தான் வருவார் , அப்போ எல்லாம் தொலைபேசி, இல்லாததால் பகலில் ஆடிய ஆட்டத்தால் சாப்பிட்டு நல்லா சீக்கிரமே தூங்கிவிடுவோம்,

என் தாத்தா பழக்கம்  வரும்போது ஏதாச்சும் பலகாரம் வாங்கிட்டு வருவார், வீட்டில் உள்ள சிண்டுங்க முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் னு பிச்சி பிச்சி கொடுப்பார் , தூங்குற எங்களையும் விட மாட்டார் ...கொஞ்சம் இனிப்பு உதட்டில் பட்டு சுவை மூளைக்கு ஏறி தூக்கம் களைந்து , கண்விழித்து கை நீட்டி பார்க்கும்போது ,  எல்லாருக்கும் குடுத்து அது காலி ஆயிருக்கும் . ஒரு நாள் இல்ல எல்லா நாளும் இதே கதை தான் .. இருக்குறத எல்லாருக்கும் சமமாக பங்கிட்டு குடுக்கணும்னு அவர் கிட்ட நான் கத்துகிட்ட உணர்வு அது , அது என் அப்பாகிட்டையும் இருக்கு , ஒரு பர்பி மிட்டாய் வாங்கினா  கூட அதை வீட்டுக்கு கொண்டு வந்து அதை பிரிச்சி எங்களுக்கு குடுத்திட்டு தான் சாப்பிடுவார்

அதே போல உப்புமா பிடிக்காத எனக்கு என் அத்தை செய்யும் ரவை உப்புமாவின் வாசனையும் சுவையும் தட்ட கைல வெச்சிக்கிட்டு காத்திருப்போம் சாப்பிட ,  வருடங்கள் பல கடந்தும் அதன் மனமும் , சுவையும் இன்னும் மனசுல நிக்குதுங்க

அதே போல என் சித்தி பண்ற சிக்கன் கிரேவி சூப்பரா இருக்கும் , ஆனா இதுல என்ன சுவாரசியம்னா 
அவங்க சிக்கன் சாப்பிட மாட்டாங்க , ஆனா அவ்ளோ சுவையா இருக்கும் அவங்க சமையல் .

என் பாட்டி பண்ற துவையல்,  அம்மா ஊட்டி விடுற பழைய சோறுல கூட அவ்ளோ சுவை ஒளிந்திருக்கும் , ஏன் தெரியுமா? அதுல அவங்க அன்பை சேர்த்து ஊட்டி விடுவாங்க அதான் . எவ்ளோ லேட்டா நான் வீட்டுக்கு போனாலும் எனக்காக காத்திருப்பாங்க சாப்பிடாம மொத்த குடும்பமும்.  

அப்புறம் நம்ம socky கூட எப்பவும் சாப்பிடற பிரியாணி அது எங்களுக்கு உணர்வோடு கலந்த உணவாக மாறிடிச்சிங்க . அது இல்லாம எப்பவும் எங்க  அரட்டையே முடியாதுங்க ...

தினமும் நாம நெறைய உணவை சாப்பிடறோம் ஆனா மனசுல தங்குறது ஏதோ சிலது தான்
எங்கு அன்பு என்ற உணர்வோடு சமைக்கபடுதோ அதோட சுவை அலாதி தான் எப்பவும் நம்ம நினைவுகள்ல தங்கிவிடும்
என்ன நான் சொல்றது சரி தானே ?


 


***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline TiNu


நான் சுவைத்த முதல் உணவு




எனக்கு food allergy  சின்ன வயதில் இருந்தே இருக்கிறது. எல்லோரும் சாப்பிடற உணவு எல்லாம் என்னால எடுத்துக்க முடியாது.. எது சாப்பிட்டாலும் பயமா இருக்கும். இந்த உணவு நமக்கு செரிமானம் ஆகுமா.. இல்லை ஏதாவது விளைவு வருமான்னு யோசிச்சிட்டே தான் சாப்பிடுவேன்... இதனால் என்னவோ உணவுகளின் ருசி எதுவும் அவ்வளவாக தெரியாது.

ஒரு நாள் friends எல்லோரும்.. சாப்பாடு பற்றி பேசி கொண்டு இருந்தாங்க.. நான் எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தேன்.. அப்போ என் தோழி ஒருத்தி.. உனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்ட.. நீ பச்சரிசி சோறு தேங்காய் துவையல்ன்னு மட்டும் சொல்லி escape ஆகாத... அது சும்மாதான் சொல்லுறான்னு எனக்கு தெரியும்..  வேற சொல்லுன்னு.. கேட்டாள்  நான் பசிக்கும் போது என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்ன்னு சொன்னேன்.. வேற எதுவும் எனக்கு சொல்ல தெரியலை.. அப்புறம் அப்படியே விட்டுட்டாங்க..

எப்பவுமே நான் சாப்பிடும் போது.. எதையும் திரும்ப வாங்கி சாப்பிட மாட்டேன்.. முதல் தடவையா என்னோட plate ல என்ன வைக்கிறாங்களோ அதை அப்படியே சாப்பிட்டு முடிச்சிட்டு போயிருவேன்.. இதுக்கே என் தட்டில் மட்டும் கொஞ்சம் extra தான் போட்டு வைப்பார்கள்.. நான் திரும்ப எதுவும் கேட்க மாட்டேன்னு ...

நான் இப்படி சாப்பாட்டுல interest இல்லாமல் இருக்கேன்னு.. இதுக்கு  treatment  இருக்குதுன்னு தெரிஞ்சு என் frds என்னை  அங்கே கூட்டி போனாங்க.. treatment 3 sittings..nearly 8 months க்கு மேல treatment போய்கிட்டே இருந்தது.

ஒருநாள் என் roommate பொண்ணு ஒருத்தி, அவங்க ஊருல இருந்து ஹல்வா வாங்கி வந்திருந்தாங்க.. எனக்கும் கொடுத்தாள் .. நான் சாப்பிட்டேன்.. எனக்கு ஏதோ வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சேன்... என் முகம் மாறுவதை பார்த்துட்டு.. என்னன்னு கேட்டாங்க..

ஒன்னும் இல்லை.. இது ஏதோ வித்தியாசமா இருக்குதுன்னு சொன்னேன்.. அவங்களும் வாங்கி சாப்பிட்டுவிட்டு .. வழக்கம் போல இனிப்புதான்..  இதில் என்ன வித்தியாசம் இருக்குதுன்னு சொல்லி சிரிச்சாங்க... ஓ.. இது தான் இனிப்பான்னு தோணுச்சு.. என் கண்ணுல தண்ணி வந்துச்சு..  எப்பவுமே நான் smell, color, texture மட்டும் கவனிச்சு தான் சாப்பிடுவேன் .. 

அப்போ என் frd சொன்ன.. உனக்கு இப்போ taste தெரிய ஆரமிச்சுட்டுன்னு நினைக்கிறேன். வேற ஏதாவது சாப்பிடணும் போல இருக்கா?ன்னு கேட்டாள். பச்சரிசி சோறும்.. நல்ல எண்ணெய்விட்டு தேங்காய் துவையலும் தாரியான்னு.. கேட்டேன்.. எனக்கு food allergy சரியாகிட்டு  வருதுன்னு.. அவங்களுக்கு சந்தோசம் 

உடனே எனக்கு செஞ்சு கொடுத்தாங்க.. சோறு, தேங்காய் துவையல் சாப்பிட்டேன்.. எப்பவுமே, இது நல்ல இருக்கும்ன்னு ஒரு  imagination ல தான் சாப்பிடுவேன்.. ஆனால் அன்னிக்கு.. real taste feel பண்ணி சாப்பிட்டேன்.. எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை.. கண்ணுல தண்ணி எட்டி பார்க்க ஆரமிச்சிட்டு.. நல்ல taste ஆ  இருக்குதுன்னு சொன்னேன்..

என்னோட friends க்கு தான் செம happy..  இப்போ நான் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுறேன்.. ஆனால் சாப்பாட்டுவகைகளை .. பார்த்த வருகிற பயம் இன்னும் முழுசா போகலை..  அந்த பயமும் ஒரு நாள் மறைந்து போகும்ன்னு நம்பிக்கை இருக்கிறது..


Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 71
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அழகான தலைப்பு. அக்கா திருமணம் ஆகி ஒரு மாசம் கழிச்சு, மாமா மட்டும் ஒரு நாள் ஏதோ பொருள் கொடுக்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அப்போ அம்மா கடைக்கு போயிருந்தாங்க.

​மாமாவுக்கு கூல் டிரிங்க்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்காது. நான் மாமா கிட்ட போய், "மாமா, ஏதாவது சாப்பிடுறீங்களா?" அப்படின்னு கேட்க, மாமா "ஒரு பிளாக் டீ (Black Tea) சர்க்கரை இல்லாம தாடா... கொஞ்சம் இஞ்சி போட்டுக்கோ" அப்படின்னு சொன்னாங்க.

​நம்மளோ கிச்சன் பக்கம் போனதே இல்லை!😜 சரி, முயற்சி பண்ணுவோம்னு டீ தூளைத் தேடிப் பிடிச்சு, ரெண்டு கிளாஸ் தண்ணி ஊத்தி, நாலு ஸ்பூன் டீ தூளை அள்ளிப் போட்டு, ரெண்டு விரல் அளவுக்கு இஞ்சியையும் தட்டிப் போட்டேன். அது நல்லா கொதிக்க ஆரம்பிச்ச ரெண்டு நிமிஷத்துல அடுப்பை ஆஃப் பண்ணிட்டு, அதை வடிகட்டி மாமா கிட்ட கொண்டு போய் கொடுத்தேன்🤔😂

​மாமா அதைப் பார்த்துட்டு, "என்னம்மா... இவ்வளவு கருப்பா இருக்கு? டீ தூள் அதிகமா போட்டுட்டியா?" அப்படின்னு கேட்டுட்டே, என் மேல இருந்த நம்பிக்கையில ஒரு மடக்கு குடிச்சாங்க பாருங்க... அவ்வளவுதான்! 🤣🤣 அவங்க முகம் மாறினதை மறக்கவே முடியாது.

​சரியா அதே நேரத்துல கடைக்கு போன அம்மாவும் வர, மாமா உடனே, "அத்தை, உங்க பொண்ணு என்னைக் கொல்லப் பார்த்துட்டா!" அப்படின்னு சொன்னாங்க. அம்மா பதறிப்போய், "அவ கிச்சன் பக்கமே போனது இல்லையே மருமகனே! இருங்க, நான் போட்டுத் தாரேன்" அப்படின்னு சொல்லி, அம்மா வேற டீ போட்டுக் கொடுத்தாங்க.

​எனக்கு மானம், மரியாதை எல்லாம் போச்சு! அம்மா வேற, "இதுக்குத்தான் சமையல் கத்துக்கோன்னு சொன்னேன்" அப்படின்னு ஒரே திட்டு. சரி இனிமேல் விடக்கூடாதுன்னு, அடுத்த ரெண்டு மூணு நாள்ல மில்க் டீ, பிளாக் டீ, காபின்னு எல்லாமே போடக் கத்துக்கிட்டேன்.

​ஆனாலும், கிட்டத்தட்ட மூணு மாசம் வரைக்கும் மாமா கிட்ட எப்போ டீ வேணுமான்னு கேட்டாலும், "அய்யோ... வேண்டாம்மா!" அப்படின்னு சொல்லிட்டு ஓடிடுவாங்க😑😑 அப்புறம் ஒரு நாள், நான் ஆசையா பிளாக் டீ போட்டுக் கொடுக்கவும், அதைக் குடிச்சுட்டு "நல்லா இருக்கு"ன்னு சொன்னாங்க. அப்போதான் எனக்கு நிம்மதியே வந்துச்சு!🥰

​அதன் பிறகு, சின்ன அக்கா திருமணத்திற்கு அப்புறம்தான் நான் முழுசா சமையல் கத்துக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு நிறைய நிறைய சமையல் செய்யத் தெரிஞ்சு, பிரியாணி என்னோட 'சிக்னேச்சர் டிஷ்' (Signature Dish) ஆகுற அளவுக்கு வளர்ந்திருக்கேன்! இப்போ எல்லாரும் என் சமையலை "ரொம்ப நல்லா இருக்கு"ன்னு பாராட்டுற அளவுக்கு வந்திருக்கேன்! 🥰