சிந்தலாய் பெய்யும் தூறலைக் கண்டதும்,
சிறுபிள்ளையாய் மாறி துள்ளிக் குதித்தது மனது!
முழுமையாய் நனைந்து அதில் திளைத்திடவே ஆசை!!
மேலே பார்த்தால் அந்த கறுத்த மேகங்கள்,
ஒன்றோடு ஒன்று விளையாடி மகிழ்வது போல்!
பூமிக்கு குடை பிடிக்க மெல்ல நகர்ந்து வர,
பச்சைப்பசேல் என்ற புல்வெளியில்,
வண்ண பட்டாம்பூச்சியாய் நான் படுத்து,
இயற்கையின் மடியில் என்னை நானே தொலைத்தேன்!!
சிறு தூறல் சாரலோடு என்னை தீண்டி,
என்னை வருடிச் செல்வது போல் ஒரு சுகம்!
அம்மாடியோவ்!! அந்த மண் வாசனை தரும் நிறைவு!
மனதில் இருந்த அத்தனை பாரங்களும்,
அந்த மழைத்துளியோடு கரைந்து காணாமல் போனதே!!!