Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
மீன் சாப்பிட்டவுடன் இதை செய்தால், அவ்வளவு தான்....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: மீன் சாப்பிட்டவுடன் இதை செய்தால், அவ்வளவு தான்.... (Read 43 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227292
Total likes: 29048
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
மீன் சாப்பிட்டவுடன் இதை செய்தால், அவ்வளவு தான்....
«
on:
June 20, 2026, 07:35:44 PM »
பெரும்பாலும் அசைவ உணவு சாப்பிடும் போது, தயிர் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. மீனுக்கு மட்டுமில்லை எந்த வகையான அசைவ உணவாக இருப்பினும் தயிர் உண்பது தவிர்க்க வேண்டிய ஒன்றே.. அப்படி எடுத்துக்கொண்டால் செரிமான கோளாறு, தோல் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு போன்ற சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்படியென்றால் பிரியாணிக்கு தயிர் பச்சடி தானே காலம் காலமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது அதை உண்ணும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லையே என்ற சந்தேகம் எழாமல் இருக்காது. பிரியாணி என்பது தினமும் எடுத்துக்கொள்ளும் உணவல்ல, ஆதலால் நமது உடல் இந்த நிலையில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் சிதைவை சரிசெய்து விடுகிறது.
அதுமட்டுமின்றி பிரியாணிக்கு தயிர் பச்சடி உண்ணும் போது அதனுடன் வெங்காயமும் எடுத்துக்கொள்கிறோம். இந்த நிலையில் தயிரின் புளிப்பு மற்றும் வெங்காயத்தின் காரம் இரண்டுமே ஈடு செய்யப்படுகிறது. தயிரை காட்டிலும் வெங்காயமே அதிகமாக இடம் பெற்றிருக்கும். இதனால் பெரிய பாதிப்பு இருப்பதில்லை.
குறிப்பாக மீனுடன் தயிர் எடுத்துக்கொள்ளும் போது இரண்டுமே புரோட்டின் என்பதால் தற்காலிக செரிமான கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் பெரும்பாலும் மீனுடன் தயிர் எடுத்துக்கொள்ள வேண்டாம் என வீட்டு பெரியவர்கள் அறிவுறுத்துவது உண்டு. எப்போதாவது இப்படி உண்ணும் போதே அஜீரணம் ஏற்படுவதை உணரலாம். அடிக்கடி தொடர்ந்து உண்ணும் போது, மேற்கண்டவற்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
செரிமானக் கோளாறு:
தயிர் மற்றும் மீன் ஆகிய இரண்டும் புரதச் சத்துக்கள் நிறைந்தவை. எனவே, இவற்றை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்து அதிகமாகவோ சாப்பிடும்போது அஜீரணம், வயிறு உப்புசம் அல்லது வாயுத்தொல்லை ஏற்படலாம்.
ஒவ்வாமை:
உங்களுக்கு கடல் உணவுகள் அல்லது லாக்டோஸ் (பால் பொருட்கள்) ஒவ்வாமை இருந்தால், இந்த இணைப்பைத் தவிர்ப்பது நல்லது.
தோல் நிறமாற்றம்:
ஆயுர்வேதத்தில் மற்றும் சித்த மருத்துவத்தில் இந்த சேர்க்கை தவறானது எனக் கருதப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாகச் சாப்பிடுவதால் தோல் நோய்கள் வரும் என்பதற்கு வலுவான நவீன மருத்துவ ஆதாரங்கள் இல்லை.பல பாரம்பரிய சமையல் குறிப்புகளில் தயிர் அல்லது மோர் கொண்டு செய்யப்படும் மீன் குழம்புகள் உள்ளன.
மீன் உள்ளிட்ட கடல் உணவுகளைச் சரியாகச் சமைக்காவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில் தயிரும் எடுக்கும்போது, செரிமானம் இன்னும் மந்தமாகி, அசௌகர்யத்தைக் கொடுக்கலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம் என்பதற்காகவும் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இரவில் தயிர் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதும், அது ஏற்படுத்தும் மந்தத்தன்மையின் காரணமாகச் சொல்லப்பட்டதுதான். இரவில் எப்போதும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றே சொல்வோம்.
இரவில் தயிர் சாப்பிடுவதால், மந்தத்தன்மை கூடி, எதுக்களித்தல் பிரச்னையோ, ஏற்கெனவே சாப்பிட்ட பிற உணவுகள் சரியாக செரிக்காதது, அடுத்த நாள் வயிற்று உப்புசம் உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம். குளிர்காலத்தில் பொதுவாகவே இரவில் தயிர் உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம். அது லேசான குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பதுதான் காரணம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
மீன் சாப்பிட்டவுடன் இதை செய்தால், அவ்வளவு தான்....