வயசு சிறுசு... ஆனா அனுபவம் பெருசுனு சொல்லுவாங்க பெரியவங்க!
அவளுக்கு 15 வயசு தான் இருக்கும்.
Pinky face-ல வெள்ளை மனசு மாதிரி ஒரு அழகு.
அந்த அழகுல மயங்கி அவளை follow பண்ண ஆரம்பிச்ச கூட்டத்துல நானும் ஒருத்தன்.
உள்நாட்டை தாண்டி வெளிநாடு வரைக்கும் அவளுக்கு ரசிகர்கள்.
யாரோ gossip பேச வருவாங்க, யாரோ நண்பர்களை தேடி வருவாங்க,
யாரோ சும்மா எட்டிப் பார்ப்பாங்க. ஆனா வந்தவங்க நிறைய பேர், திரும்பிப் போகாம தங்கியவங்களும் நிறைய பேர்.
அவளுக்கு கவிதை பிடிக்கும்னு கேட்டு,
பள்ளிக்கூட தமிழை மறக்காம சுவிட்சர்லாந்துல இருந்தே
ஒரு கவிதை எழுதி அனுப்பினேன்.
பாவி... அதை publish பண்ணி “நாலு பேராவது பாராட்டுறாங்க”ன்னு
எனக்கே confidence ஏத்திட்டா.
அடுத்தது பாடல், lyrics, fun, jokesன்னு impress பண்ண முயற்சி.
ஆனா கடைசில கிடைச்சது காதலி இல்ல...
தங்கச்சிகள், அண்ணன்கள், மச்சிகள், உயிர் நண்பர்கள். (Indha Vachuko Twist Moment)
அவளோட Daddy யும் வேற லெவல்.
வீடு கூப்பிடு பாயாசம் கொடுக்குறாரோ இல்லையோ
தேவைப்பட்ட நேரத்துல password கொடுத்து எல்லாரையும் கூட்டி,
அன்பா கண்டிச்சு, பொறுப்பைக் கற்றுக்கொடுத்து வழி காட்டுற மனுஷன்.
ஒருநாள் “அவர்தான் Gab”ன்னு சொன்னதும் கொஞ்சம் ஆடிப் போயிட்டேன்.
“அடடா... நம்மள குட்டி மச்சான்னு கூப்பிட்டு இவ்வளவு நாள் பேசினதே இவருதானா?”ன்னு
ஒரு பக்கம் பயமும், இன்னொரு பக்கம் மரியாதையும்.
அந்த நாள்ல இருந்து character ஐயும், வார்த்தைகளையும் கொஞ்சம் கவனமா handle பண்ண ஆரம்பிச்சேன்.
சில நேரம் “ரொம்ப நேரம் இங்க செலவழிக்கிறேனோ?”ன்னு தோணியிருக்குது.
ஆனா கூட்டி கழிச்சு பார்த்தா, இழந்ததைவிட சம்பாதிச்சது தான் அதிகம்.
Keyboard தட்டல்களில் ஆரம்பிச்ச பயணம், கைதட்டல்கள் வரைக்கும் வந்திருக்கு.
Audio editing, online radio, writing, hosting, friendships
எல்லாமே இந்தப் பயணத்தோட அழகான பரிசுகள்.
ஒரு காலத்துல தொலைக்காட்சி, வானொலியில் வரும்
பிரபலங்களைத்தான் முன்னுதாரணமா பார்த்தேன்.
ஆனா இங்க வந்ததுக்கப்புறம் சாதாரண மனிதர்களோட குரலும்,
அவர்களோட திறமைகளும் தான் என்னை அதிகமா ஈர்த்தது.
இங்க நான் கேட்ட சில RJ களின் குரல், சில பேச்சாளர்களின் பேச்சு,
சில எழுத்தாளர்களின் எழுத்து, சில கவிஞர்களின் வரிகள்,
சில பாடகர்களின் பாடல்கள்
இவை எல்லாமே “திறமைக்கு மேடை கிடைச்சா சாதாரணவங்களும் சாதனையாளர்களாகலாம்”ன்னு எனக்குக் கற்றுக்கொடுத்த முன்னுதாரணங்கள்.
HTML, CSS, JavaScript, Linux, Binary numbers ஐ வைத்து இயங்குற இணையம், மனித உணர்வுகளையும் இவ்வளவு ஆழமா இணைக்க முடியும் என்பதற்கு
என் வாழ்க்கை on FTCயே சாட்சி.
இன்று இந்த 15 வயது இளம்பெண்ணைப் பற்றி இவ்வளவு பாசமா எழுதுறதுக்குக் காரணம், அவள் ஒருத்தி மட்டுமல்ல; ஆயிரம் நட்புகளையும், எண்ணற்ற நினைவுகளையும், பல திறமைகளையும் ஒன்றாக இணைத்த ஒரு உலகம்.
அந்த இளம்பெண்ணின் பெயர் "Friends Tamil Chat"
இணையத்தில் தொடங்கி இதயங்களில் வாழும் இந்த உறவு
இன்னும் பல ஆண்டுகள் தொடரட்டும்.
பகை, மனஸ்தாபம், குழுவாதம் எல்லாத்தையும் மறந்து மீண்டும் ஒன்றாக வருவோம்.
-FTC நண்பர்களாக... நண்பர்களால்... நண்பர்களுக்காக!-