Author Topic: *எல்லாம் அதுவாகவே சரியாகும்*  (Read 115 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1303
  • Total likes: 1160
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
*எல்லாம் அதுவாகவே சரியாகும்*

எல்லாம் அதுவாகவே சரியாகும். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதுவும் ஒரு பிரபஞ்ச ரகசியமே.

எப்படி ?

எந்த ஒரு நிகழ்வும் இங்கு நிலைத்து நிற்பதில்லை என்பது நம் எல்லோருக்கும்
தெரியும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

ஆனால், நாம் தான் சில நல்ல, அல்லது கெட்ட நிகழ்வுகளையோ, பொருட்களையோ, நபர்களையோ பிடித்து வைத்துக்கொண்டு, புலம்பி அமைதி இழந்து திரிகின்றோம்.

இது எல்லாமே நமது எண்ணப்பதிவுகள் மட்டுமே என்பதை தெளிவாகஉணர்ந்து கொள்வோம்.

ஒருவரைப்பற்றி தப்பான அபிப்ராயம் வச்சிருப்போம். அந்த நிமிடத்தில் அவர் அப்படி இருந்திருக்கலாம்.

ஆனால், அடுத்த நொடியே அவர் தவற்றை உணர்ந்து திருந்தியும் இருப்பார்.ஆனால், நாம் தான் நமது மனதில் "அவர் தப்பானவர் தான் என  எண்ணத்தில் பதிந்து கொண்டு, அவரைப் பார்க்கும் போதெல்லாம் எரிந்து பேசியும், வம்பு இழுத்துக் கொண்டும், மனதில் வன்மம் கொண்டும் திரிவோம்.

இதில் கூடுதலாக  நல்லவருக்கு காலமில்லை என்று காலத்தை வேறு திட்டுவோம்.

நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். காலம்  எனும் கடவுள், பேராற்றல் எல்லாவற்றையும் மிகத்துல்லிதமாக செய்பவர் என்பதை.

அதனால், தேவையற்ற எந்த ஒரு எண்ணப்பதிவையும் மனதில் வைக்காமல் இருக்கத்தான் இந்த பிரபஞ்ச ரகசியம்.

எல்லாம் அதுவாகவே சரியாகும்
என்பதை நன்கு மனதில் பதிவிடுங்கள்.
ஆழ் மனதில் பதிய வேண்டும்.

எந்த ஒரு பிரச்சனையும், நோயும்,
வறுமையும் கூட தானே சரியாகும்
என்பதை முதலில் நம்ப வேண்டும்.

எல்லாம் அதுவாகவே சரியாகும் என்கிற போதே அது எப்படி ?அப்புறம் நாம எதுக்கு இருக்கோம் ?இப்படி பல கேள்விகள்
நம்மை குழப்பும்.

ஆனாலும், மனதிற்குள் ஆழமாக பதிவு செய்து கொள்ளுங்கள். எல்லாம் அதுவாகவே சரியாகும்.எல்லாம் தானாகவே சரியாகும் என்ற affirmation நேர்மறை எண்ணத்தை.

உதாரணத்திற்கு, உடலுக்கு காய்ச்சல் வந்துவிட்டால்,  நிச்சயமாக உடல் தானே தன்னை சரி செய்து கொள்ளும் என்ற ரகசியம் தெரிந்தவர்கள் உணவை நிறுத்தி, ஓய்வெடுத்து ஓரேநாளில் சரியாகி விடுவார்கள்.

ஆனால், அந்த ரகசியம் தெரியாத பலரும், அய்யோ, காய்ச்சலேன்னு பயந்து, பதறி, மருந்து, மாத்திரைன்னு முழுங்கி, இரண்டு நாளில் அதுவே, தானாக சரியாகும் காய்ச்சலை ஒருவாரத்திற்கு இழுத்து கஷ்டப்படுவார்கள்.

அப்படி எல்லாம் எதற்காகவும் பதறவேண்டாம்.

அதற்காகத் தான் இந்த மாபெரும் ரகசியமான  எல்லாம் அதுவாகவே சரியாகும் என்ற தாரக மந்திரம்.

இங்கு நடப்பது எல்லாம் தானே தான் நடந்து கொண்டிருக்கிறது, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் என்பது தானே
மாபெரும் உண்மை.

எல்லாம் தானே நடக்கும் என்றால்,
மனம், எண்ணம் இதெல்லாம் எதற்கு ?
என்ற கேள்வி தோன்றும்!

உதாரணத்திற்கு, மிகப்பெரிய சொத்து தகராறு உங்கள் குடும்பத்தில் வருகிறது எனில், அதனை சண்டை, சச்சரவு என ஆக்கிக் கொண்டே போனால் சின்ன பிரச்சனை பெரிதாகி நிற்கும்.

ஆனால், கொஞ்சம் பொறுமையாக இருந்தால், எல்லோருக்குமே மனமாற்றம் என்பது தானே நிகழும்.  புரிதல் வரும். யாருக்கேனும் தேவை வரும். அப்போது மாற்றங்கள் தானே நிகழும். அந்த பிரச்சனை செய்த உறவே, தானே வந்து நிற்கும்.
எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

இப்படித் தான் நாம் கொஞ்சம் மட்டுமே அமைதியும், பொறுமையும் கொண்டு எந்த ஒரு நிலையிலும் எல்லாம் அதுவாகவே சரியாகும் என மனதிற்குள் கூறிக்கொண்டே இருந்தால் போதும்.

எல்லா மாற்றங்களும், தேவைகளும் தானே இயல்பாக நடக்கும் அதிசயம் புரியும்.

ஒவ்வொரு பிரச்சனைகளும் தானே காணாமல் போகும்.

சண்டை சச்சரவுகள் வரும்போதெல்லாம், தயவுசெய்து எதிர்த்து நின்று பேச்சுக்களை வளர்க்காமல் ஒதுங்கி விடுங்கள்.

நாம் சகித்துக் கொண்டு போவதால் கோழையல்ல .விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே நல்லா இருப்பாங்கன்னு அர்த்தம்.

எது நடந்த போதும் மனதிற்குள் இந்த எண்ணத்தை ஆழமாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் அதுவாகவே சரியாகும் என.

ஆழ் மனதில் பதிந்த இந்த எண்ணம் பிரபஞ்சமெல்லாம் பரவி, எது சரியோ, அதற்கு சரியான நபரையோ, சூழ்நிலையையோ ஏற்படுத்தி, என்ன நடக்க வேண்டுமோ அதை சரியாக நிகழ்த்தும்.