Author Topic: பிரியாவிடை  (Read 1120 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 1554
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
பிரியாவிடை
« on: May 24, 2026, 09:03:06 AM »
           



ஏன் புறந்தள்ளினாய் என்னை...
பத்தில் ஒன்றாக கூட அல்ல
ஆயிரத்தில் ஒன்றாக கூட
நினையாதது ஏனோ?
சோர்ந்து வாடிய தருணங்களில்
இருகரம் விரித்து அரவணைத்தாய்...
இன்று நான் யாரென்றே
அறியாமல் போனாய்...
சிறுபிள்ளைத்தனம் கொண்ட என்னை
ஏன் அறியாமல் போனாய்?
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்
நேசிக்கும் ஒவ்வொன்றை இழக்கிறேன்...
இன்று உன்னை...
பயத்தால் இழக்கின்றேனா?
உணர்ச்சிவசத்தால் இழக்கின்றேனா?
இல்லை காயமடைதலால் இழக்கின்றேனா?
இல்லை அதிக நேசத்தால் இழக்கின்றேனா?
ஏதோ ஒன்று...
ஆனால் இனி நாம்
என்பது மட்டும் இல்லை..
சேர்ந்து பயணித்த பயணம்
இனி இல்லவே இல்லை..
சோர்ந்து வாடிய நேரங்களில்
இனி உன் தோள்கள்
எனக்காக இல்லவே இல்லை
தேடி நான் செல்ல வேண்டியதில்லை
ஏனென்றால் நான் இனி
உன் பயணத்திற்கு தேவையுமில்லை
தேவையற்ற இடத்தில் இருக்கவும் மனமில்லை
உன் கைக்கோர்த்த தருணத்திற்கு நன்றி
தேற்றிய தாய்மடிக்காக நன்றி
கண்ணீரை துடைத்த அன்பிற்கு
சொல்லில் அடங்கா நன்றி... 💔
« Last Edit: May 26, 2026, 01:33:55 AM by Yazhini »

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 172
  • Total likes: 510
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
Re: பிரியாவிடை
« Reply #1 on: July 05, 2026, 07:17:53 PM »
நேசித்தவரின் பிரிவை விட, அவரிடம் சொல்ல முடியாத வார்த்தைகள்தான் அதிகம் வலிக்கும். அந்த உணர்வை அழகாக எழுதியிருக்கிறீர்கள். மனதைத் தொட்ட பதிவு.