Author Topic: திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கை  (Read 1490 times)

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
மாரடைப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, திடீரென்று தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் கஷ்டம் தான்.
அந்நேரத்தில் நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள், திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது, நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமும் போதும், அதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக் கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும்.

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும், பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.