நீண்ட நாட்களுக்கு பிறகு
கண்டேன் உன்னை...
தினமும் பார்த்து கொண்டிருக்கும் போது
இவ்வளவு பிணைப்பு வரும்
என்று உணரவில்லை...
சிறிது கால பிரிவு
ஒன்றாக பயணித்த காலத்தை
நினைவூட்ட மனம் கனத்தது...
இனி என்று காண்பேன்...
இன்னும் நீளுமோ இப்பிரிவு...
ஏன் இந்த பிணைப்பு
எதனால் இந்த பிரிவு...
என்று பலபல சிந்தனைகள்...
யாரால் உருவாக்கப் பட்டாயோ...
எதனால் உருவாக்கப் பட்டாயோ...
வர்த்தக ரீதிக்காக மட்டுமா...
தனி மனிதனின் விருப்பத்திற்காகவா..
பல உணர்வுகளின் கலவைக்காகவா...
வெளிப்பாடுக்காகவா... நானறியேன் ஆனால்
என்னுள் என்னை
மீட்டெடுத்தாய்...
புதிதான மாற்றம் தந்தாய்
பற்பல நற்சிந்தனைகளைப் போதித்தாய்..
உரியவரின் உழைப்பே...
பல்லாண்டு பொக்கிஷமே...
பலரின் உணர்வே...
இனி தங்குதடையின்றி இயங்கிடுவாய்...
இணைப்பிரியாமல் இருந்திடுவாய் ❤️❤️❤️