Author Topic: யாரறிவாரோ???  (Read 43 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 344
  • Total likes: 1438
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
யாரறிவாரோ???
« on: April 30, 2026, 08:07:15 AM »
                                 



யாரறிவாரோ???

மெழுகால் ஆன மனம்...
மேலே பார்வைக்கு மட்டும்
கடினமான இரும்பு கவசம்....
கல்நெஞ்சகாரி என்ற வசையும் புகழாரமே...
தேவையில்லாத சிந்தனை அக்னி
ஏனோ மெழுகை உருக்க தொடங்க
இரும்பு கவசம் தாண்டியும்
கசியும் கண்ணீர் துளிகள்...
அது கண்ணீர் துளிகளா???
இல்லை அமில துளிகளா???
மெழுகை விட உருகி
கரைந்து போகின்றது கவசம்...
அடுத்து மெழுகு இருந்த தடம்கூட
இல்லாமல் போக கூடுமோ...
யாரறிவாரோ??? விதியா??? மதியா???
யார் கைகளில் இப்பதுமை???
« Last Edit: April 30, 2026, 08:25:10 AM by Yazhini »