Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-008 (சின்ன பொய்.. பெரிய கலவரம்' or சம்பவம்)  (Read 121 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-008

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

''சின்ன பொய்.. பெரிய கலவரம்' or சம்பவம்'”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline Rahmathulla



திமிருக்கு கிடைத்த பரிசு பளார்.. பளார்..பளார்...

என் அம்மாவுடைய சித்தப்பாக்கு உடம்பு சரியில்லை...

என் குடும்பத்தினர் அனைவரும் ஊருக்கு சென்றோம்...

ஊருக்கு  போகும் போதே என் மனதில் சிந்தனை ஓடுகிறது..

விஜய் அண்ணா நடித்தThe Greatest of All Time
(G.O.A.T)  movie release ஆக போற time...September 5th,, 2024

என்னடா நமக்கு  நமக்கு வந்த சோதனையா..

இந்த மனுஷன் போயிட்டா. I mean death.. ஆகிட்டா movie ய.. மிஸ் பண்ணுவோமே... என்று சிந்தனையுடன்.. ஊருக்கு போறேன்..

வேணாம் இப்போ பிளான் பண்ண கூடாது ஊருல அந்த டைம் யோசிப்போம் னு..

கார்ல எங்க அண்ணாட்ட டேய் கார் அ குடு  நான் ஓட்டுறேன் சொல்லி
கார் அ நான் வாங்கி ஓட்டிட்டு போனேன்...

என் சொந்த ஊருக்கு  எல்லாரும் வண்தோம்

கொஞ்சம் நேரம் நான் தூங்கிகிட்டு வரேன்...

நீங்க எல்லாரும் frush up ஆகிட்டு தாத்தாவ பார்க்க போங்கனு சொன்னேன் எங்க அம்மா ட்ட ...

அம்மா ஓகே நீ ரெஸ்ட் எடுத்துட்டு வா சொன்னாங்க..

நானும் ரெஸ்ட் எடுத்துட்டு 
தாத்தாவ பார்க்க போனேன்..

தாத்தா hospital la இருக்கார்
hospital போயி தாத்தாவ பார்த்துட்டு நலம் விசாரித்தேன்.. என் சின்னமா ட்ட ..

பேசிட்டு வெளியே வந்து உறவினர்கள் அனைவரும்  சந்தித்து பேசினேன்.

டாக்டர்...
தாத்தாவ வீட்டுக்கு கூப்பிட்டு போங்க.. அவருக்கு வயசாச்சு இன்னும் ஓர் இரு நாள் தான் இருப்பார்.. என டாக்டர் சொல்ல

உடனே எங்க மாமா அவர வீட்டுக்கு கூப்பிடு போலாம் சொல்லி வீட்டுக்கும் வந்தாச்சு..

எனக்கு நண்பர்கள் சொல்லணும் னா..
என் மாமா பசங்க &சித்தப்பா பசங்க தான்...

தாத்தாவ  பார்க்க பசங்களும் வந்துதிருந்தார்கள்..
ஏண் ட மாமா பையன் கேட்குறான் night(G.O.A.T) movie release da. என்ன பண்ண போறன்னு கேட்க

அதான் ஒன்னும் புரியல டா மச்சான் ஆல்ரெடி சென்னை ல போட்ட டிக்கெட் க்கு.. வேற ஒருத்தனை join பண்ணிக்க சொல்லிட்டேன் நான் ஊருக்கு போறேன் சொல்லிட்டேன்..

இங்க இப்போ தாத்தா இருக்க நிலைமை ல நான் movie ku போனேன்
என்ன அவ்ளோ தான்.. சும்மா விட மாட்டாங்க..

பேசிட்டு இருக்கப்ப இன்னொரு மச்சான்
இல்லை night எப்டி யாச்சும் movie ku போலாம்.. வேற ஐடியா ஏதாச்சும் பண்ணலாம் சொல்லி பேசியாச்சு..

Evening டைம் டிக்கெட் யும் ரெடி ஆச்சு..

 என் அம்மா கிட்ட போனேன்.. அம்மா... அம்மா... அம்மா...சொல்றேன் ..

அம்மா வேகமா என்ன டா இத்தனை அம்மா சொல்லுற னு கேட்க..
 
நான் சொன்னேன் அம்மா இங்க என் frnd  fayaz bike ல கீழ விழுந்துட்டான்..

அவனை போயி பார்த்துட்டு வரேன் அம்மா சொல்லிட்டு அந்த place a விட்டு உடனே escape ஆனேன்...

பசங்களோட movie ku போறது எவ்வளவு மனசு சந்தோசமா இருக்கும்.. இருந்துச்சு...

Movie முடுஞ்சு வீட்டுக்கு வந்த போ தான் ஆப்பு தாத்தா வீட்டு வாசல் படியில் உக்கார்ந்திருக்கு...

எனக்கு ஒன்னும் புரியல இவன் fayaz தாத்தாவ  பார்க்க வந்தான் போல இங்கயே இருக்கான்..

எங்க அம்மாக்கு என் மேல சரியான கோபம்.. என் அண்ணா வந்து  என் மேல கை வைக்க கூடாதுனு ..

வேகமா என்னிடம் எதுவும் கேட்கல  அத்தனை பேரு முன்னாடியும் பளார்... பளார்... பளார்... பளார்... பளார் னு கன்னத்துல அடி இடி மாதிரி விழுந்தது..

நல்ல வேலை எங்க அண்ணா ட்ட அடி வாங்காம தப்பிச்சேன்..

என்னை நியாய படுத்தவும் முடியாது
இது என்னுடைய திமிரு but vijay அண்ணா movie um பார்க்காமல் இருக்க முடியல...

அதற்கு அப்றம் தாத்தா after 7months ku அப்றம் தான் தாத்தா மௌத் (death) ஆனார்

இனி வரும் காலங்களில் ரஹ்மத்துல்லா நல்ல பையன் ah இருக்க &வாழ  ftc nanbargal எனக்காக எனக்காக துஆ செய்யுங்கள் (வேண்டி கொள்ளுங்கள் )

       TQ
ப்ரியமுடன்
ரஹ்மத்துல்லா

Offline MaiVizhi



‎நம்ம படிக்கிற டைம்ல வாரத்துக்கு 5 நாள் ஸ்கூல் போறதே பெருசு, இதுல 5-வது ஸ்டாண்டர்ட்ல இருந்தே டியூஷன் சேர்த்து மார்னிங் 7-க்கெல்லாம் வீட்ட விட்டு துரத்திடுறாங்க. அன்னைக்கு ஒரு மண்டே, 2 டேஸ் லீவ் முடிஞ்சு லேஸியா எழுந்து டியூஷன் கிளம்புனேன். ஸ்கூல் தாண்டி தான் டியூஷன் சென்டர். ஸ்கூல் வந்ததும் "ஒரு நாள் தானே லீவ் போடுவோம்"னு நேரா கிரவுண்டுக்கு போயி, ஊறுகாய் பாக்கெட் வச்சு நானும் பிரெண்டும் சீனியர்ஸோட பாஸ்கட்பால் பிராக்டிஸ் பார்த்துட்டு ஜாலியா இருந்தோம்.
‎மறுநாள் டியூஷன் போனப்போ மிஸ் கேட்டாங்க "நேத்து ஏன் வரல?"னு. சரி ஏதாச்சும் சொல்லி சமாளிப்போம், எப்பவும் எல்லாரும் பாட்டி இறந்துட்டாங்க, தாத்தா இறந்துட்டாங்கன்னு பொய் சொல்லுவாங்க, நாம டிஃபரண்டா சொல்லுவோம்னு 10 வருஷம் முன்னாடி இறந்த, நான் பார்த்தது கூட இல்லாத என் பெரியப்பா நேத்துதான் இறந்துட்டாருன்னு பிட் போட்டேன்.
‎அறியா வயசு, டெத் ஆகி மறுநாளே எப்படி ஸ்கூல்னு சந்தேகப்பட்ட மிஸ், அதே சென்டர்ல டியூஷன் படிக்கிற என் இன்னொரு பெரியப்பா பொண்ணைக் கூப்டு "ஏன் இவ டெத் சொல்றா உண்மையா?"னு கேட்க, அதுக்கு என் அக்கா "அய்யோ என் அப்பாதான் அவ பெரியப்பா, அவரு நல்லாத்தான் இருக்காரு, இவ பொய் சொல்றா"னு ஒரே போடா போட்டுட்டா. அவளுக்கு என் மேல என்ன கடுப்போ...
‎அவ்வளவுதான் சொல்லி முடிஞ்சது, அப்புறம் நானே சொல்லிட்டேன் நான் சொன்னது ஏற்கனவே இறந்த பெரியப்பான்னு. பொய்க்கு 2 அடி, லீவுக்கு 2 அடின்னு பிரெண்ட்ஸ் சிரிச்சதும் நினைச்சு உக்காந்து இருந்தேன். அப்போதான் எங்க மிஸ் என் மேல இருக்குற கொள்ளை பாசத்துல எங்க அப்பாவைக் கூப்டு வர சொல்லிட்டாங்க. அவரும் வந்தாரு, டீச்சர் அட்வைஸ் பண்ணி கூட அனுப்புனாரு. எங்க அம்மா வீட்டுல தொடப்பக்கட்டையோட வெயிட்டிங்னு தெரிஞ்சோ என்னமோ எங்க அப்பா என்னைத் திட்டக்கூட இல்ல.
‎இப்போ நினைச்சா சிரிப்பு வந்தாலும் அன்னைக்கு அப்பா பைக்ல போறப்போ, அம்மா மாரியம்மா மாரி வாசல்ல என்னை வரவேற்க நிக்கிறதை நினைச்சு, பேசாம வண்டில இருந்து குதிச்சிடலாமா? இல்ல இல்ல வலிக்கும்... பேசாம மூவில தலைகாணி வச்சு அமுக்குனா செத்து போற மாதிரி நாம மூச்சை ஹோல்ட் பண்ணி செத்து போயிடலாம்னு மூச்சைப் பிடிச்சு உக்காந்தேன் ஒரு 20 நிமிஷம். அதுக்குள்ள வீடே வந்துட்டேன், ஆனா சாகுற மாதிரி தெரியல.
‎சரி இன்னைக்கு அம்மா கையிலதான் நம்ம உசுரு போகணும்னு இருக்குனு மனசைக் கல்லாக்கிக்கிட்டு போனேன். வீடு சுத்தி அடி வாங்குனதும், அப்புறம் எங்க அக்கா பொய் சொல்லி பெரியப்பா, தாத்தா, பாட்டினு அட்வைஸ் மழை கொட்டி அசிங்கப்படுத்தது எல்லாம் ஒரு பெரிய சம்பவமாவே மாறிடுச்சு. ஒரு லீவுக்கு பொய் சொல்லப்போயி... ஆனா பொய்னு சொல்ல முடியாது, 10 வருஷம் முன்னாடி இறந்த பெரியப்பாவ நேத்துனு டேட் மட்டும் தானே மாத்தி சொன்னேன்! ஆனா அதுக்குப் போய் கலவரமே ஆயிப்போச்சு.
‎ஆனாலும் இப்பவும் ஆபீஸ் லீவுக்கு குட்டி குட்டி பொய் சொல்லிட்டு தான் இருக்கேன், அப்போ எல்லாம் இந்த இன்சிடென்ட் சின்ன ஸ்மைலோட என் முன்னாடி வந்து போகத்தான் செய்யுது.






Offline Thenmozhi

  • Full Member
  • *
  • Posts: 117
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நான் என் வாழ்வில் சிறு சிறு பொய்கள் சொல்லி இருக்கலாம்.ஆனால் எந்த சம்பவமும் நிகழ்ந்ததில்லை.நான் ஏன் பொய் சொல்லப் போறதில்லை என்றால் சிரித்து மாட்டி விடுவேன்.

நான் ftc வந்தது எங்க குடும்பத்துக்கு தெரியாது.ftc வரும்போது நினைக்கவில்லை இவ்வளவு காலம் நான் இருப்பேன் என்று.ftcஇல்  நிகழும் நிகழ்வுகள் என்னை போக விடாமல் தடுத்து விட்டது.

என் மொபைல் பாவனையும் அதிகரித்தது.எனக்கு கிடைக்கும் free time எல்லாம் ftcக்கு ஓடி வருவேன்.அத்தருணங்களில் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்களுக்கு அளவே இல்லை."எப்ப பாரு மொபைல் தான்.work இல் தான் mobile என்று பார்த்தா வீட்டிலும் mobile தான்.சீக்கிரம் கண்ணுக்கு கண்ணாடி போட வேண்டி வரும் "என்று.

என்னோட program போகும்போது அம்மாவ கேட்க வைக்கணும் என்று ஆசை.but அவங்க chat என்று சொன்னால் பயப்படுவாங்க. அதனால் சொல்லாமல் மறைத்தது ஒரு பொய்.sometimes ஏதும் காமெடி வந்தா சிரிச்சுக்கிட்டு chat பண்ணுவேன்.அம்மா கேட்பாங்க "என்ன உன்பாட்டுக்கு சிரிக்கிறாய்"என்று. உடனே சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு காமெடி பார்த்தேன் என்று பொய் சொல்லுவேன்.இப்படி சொல்லும்போது மனசுக்கு உறுத்தலாக இருக்கும்.என்ன பண்ணுவது உண்மை சொன்னால் அம்மா விடமாட்டாங்க.இந்த வயசுல தானே இப்படி எல்லாம் அனுபவிக்க முடியும்.

அம்மாவுக்கு ஏதாவது help பண்ணும்போது ftc fm கேட்டுக்கிட்டு பண்ணுவேன்.நடுவுல promo வரும் போது volume கம்மி பண்ணி விடுவேன்.ftc program timeகு ஏற்ப usual work  plan பண்ணுவேன்.birthday wish work place இல் தான் mostly record பண்ணுவேன்.vip boy birthday wish home இல் record பண்ணும் போது அம்மா கேட்டுடாங்க.யாருக்கு இன்னைக்கு birthday என்று கேட்க,யாருக்கும் இல்லையே?என்று சிரித்துகிட்டே சொன்னேன்.அம்மா vip boy என்று சொல்ல,ஐயோ மாட்டிவிட்டேனே...
என்ன சொல்வதென்று தெரியாமல் "அது song என்று அம்மாகிட்ட சொல்லி vip song பாடிக்கிட்டே escaped.

program script write பண்ணா mostly மறைத்து வைப்பேன்.தீபாவளி பட்டிமன்றத்திற்கு எழுதின scriptஇனை  work போற அவசரத்தில் table மேல் வைத்துவிட்டு சென்று விட்டேன்.work finish பண்ணி வீடு திரும்பியதும் அம்மா கேட்ட முதல் கேள்வி " என்ன எல்லாம் பண்ணிகிட்டு இருக்கா" என்று.நான் திகைத்தேன் எதுவும் புரியாமல். "நான் அப்படி என்ன பண்ணேன்" என்று மறுகேள்வி நான் கேட்க, "என்ன எழுதி வைச்சிருக்கா? ஏதோ சமூக ஊடகம் பற்றி மைவிழிக்கு எழுதி வைச்சிருக்கா?யாரு மைவிழி? என்று.மாட்டிகிட்டியே பங்கு என்று என் மனதில்... உண்மை சொன்னா program பண்ண முடியாது.அம்மா கண்ணைப் பார்த்தால் உண்மையை உளறிடுவேன் என்று தலையை குனிந்தவாறே "அதுவா online topic வந்தது.விருப்பமானவங்க write பண்ணலாம் என்று.தமிழில் எழுதி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.அதுதான் write பண்ணேன்"என்று சொல்லி சமாளித்து விட்டேன்.

இப்படி மாட்டிக்கிட்டு முழித்த அன்று பொய் சொல்லி விட்டேன் என்று என்னால் தூங்க முடியவில்லை.இருந்தும் என் மனதை தேற்றிக்கிட்டேன்.நான் எந்த தப்பும் பண்ணவில்லையே.தமிழை நேசித்ததால் தானே பொய் சொன்னேன் என்று ஆறுதல் சொல்லி அமைதி ஆனேன்.

"rest எடுக்கப் போறேன் என்று சொல்லிவிட்டு வந்து mobile பார்த்துகிட்டு இருக்கிறியே " அம்மா கேட்க ftc program கேட்கிறேன் என்று சொல்ல முடியாம songs கேட்டு தூங்குறேன் என்று சொல்லுவேன்.

சில சந்தர்ப்பங்கள் தான் நம்மை பொய் சொல்ல வைக்கின்றன.இப்பகூட இந்த காமெடிய நினைத்து சிரித்துக்கொண்டு எழுதிட்டு இருக்கேன்.ftcக்கு வந்து வீட்டில் இப்படியான பொய்கள் சொல்லி மாட்டிக்கிட்ட சம்பவங்களை நினைவுகூற சந்தர்ப்பம் வழங்கிய நெஞ்சம் மறப்பதில்லை teamக்கு நன்றிகள்.

Offline TiNu

இது சின்ன பொய்யா பெரிய பொய்யா தெரியாது. ஆனால் அதனால் வந்த பாதிப்பு மிக பெரியதாக இருந்தது.

என்  ஹாஸ்டல்ல 15 to 20 பேர் இருந்திருப்போம். அதில் வேலைக்கு போறவங்க படிக்க போறவங்க எல்லோரும் உண்டு.

ஒரு நாள்.. என் பக்கத்து அறை பெண் nancy.. உனக்குதான் call வந்திருக்கு..   இந்த பேசுன்னு அவள் மொபைலை  என்னிடம் கொடுத்தாள். எப்பவுமே எனக்கு யாரும் call பண்ணி எல்லாம் பேசவே மாட்டங்களேன்னு..  சந்தேகத்தோடு வாங்கி பேசினேன்..

மொபைலை  வாங்கிட்டு.. நீங்க யாருன்னு  கேட்டேன். அவர் என்னமோ ரொம்ப தெரிந்தவர் போல பேசினார். நான் திரும்ப திரும்ப கேட்டேன் நீங்க யாரு?... எனக்கு உங்களை தெரியலைன்னு.. அவர் என்னை விடவே இல்லை.. நேற்று வரைக்கும் நல்ல பேசின... இன்னிக்கு ஏன் தெரியாது போல பேசுற ன்னு கோபமா பேசினார் .

நானும் nancy-இடம் ... இது யாருன்னு எனக்கு தெரியாதுன்னு .. மொபைல திருப்பி கொடுத்தேன்.. அவளோ.. hey அந்த person  night fulla  call பண்ணி,.. பேசு பேசுன்னு  உயிர் எடுத்தார்... அப்புறம் நான் அவர்கிட்டே.. உங்களுக்கு யார்கிட்டே பேசணும்ன்னு கேட்டேன்... அப்போதான் நீ tinu தானே.. உன்கிட்டே தான் பேசணும்ன்னு சொல்லி... உன்னை பற்றி எல்லாமே தெளிவா  சொன்னார்.... நீ ஏன் என் மொபைல் நம்பரை.. அவரிடம் கொடுத்தேன்னு என்னை திட்டினாள். நானோ எனக்கு அப்படி யாரையும் தெரியாது.. நான் உன் நம்பர் யாருக்கும் கொடுக்கவும் இல்லைன்னு சொன்னேன்.. இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் சண்டையே வந்து விட்டது...

நான் ரொம்பவே பயந்துட்டேன். நம்ம யாருக்கும் நம்ம details எல்லாம் சொல்ல மாட்டோமே .. இது யாரா  இருக்கும்ன்னு தலை குழப்பமா இருந்தது. அப்புறம் மொபைல் ல என்னோட roommate கிட்டே கொடுத்துட்டேன்.. இது யாருன்னே.. எனக்கு தெரியலை.. ஆனால் என் detail தெளிவா சொல்லுறாரு.. but நான் இவர் கூட பேசினதே இல்லைன்னு சொன்னேன்.

அவள் மொபைல் வாங்கி பேச தொடங்கினாள்.. அந்த பையனிடம் பொறுமையாக பேசி கொஞ்சம்... கொஞ்சமாக எல்லா விவரமும் கேட்டு தெரிந்துகொண்டாள். அதுக்கு அப்புறம் அந்த பையனிடம் கொஞ்சம் wait பண்ணுங்க என் friend கிட்டே பேசிட்டு பேச சொல்லுறேன்னு சொல்லி வச்சுட்டா.

அப்புறம் roommate என்னை கேட்டா.. நீ... எனக்கு தெரியாமல் "...." app use பண்ணுறியான்ன்னு கேட்டாள். நான் திருதிருன்னு முழிச்சுட்டு இருந்தேன் . i know... intha app use பண்ணுற அளவுக்கு... நீ எல்லாம் வளரவே இல்ல.. நான் nancy கிட்டே பேசுகிறேன்.. நீ அமைதியா இருன்னு சொல்லிட்டு போய்ட்டா..

nancy.. tinu க்கு வந்த call இது இல்லை. இந்த மகேஷ், வேறு யார்கூடவோ  "..." app ல பேசி இருக்காங்க.. அப்படி பேசும் போது tinu name ஆ use பண்ணி பேசி இருக்காங்க.. நம்பர் கேட்க்கும் போது உங்க நம்பர் share பண்ணி இருக்காங்க.. அந்த app use பண்ணுறவங்க யாருன்னு உங்களுக்கு  தெரியுமா?

இந்த app என்னோட roommate jesi தான் use பண்ணுறதை  பார்த்து இருக்கிறேன்.. இருங்க sister நானே கேட்கிறேன்.. அப்போ தூங்கிட்டு இருந்த jesi எழுப்பி கேட்டாள்.. அவள் முதலில் மழுப்பினாலும் என்னோட roommate மற்றும் nancy மிரட்டி கேட்கவும் ஒத்துக்கொண்டாள்.

அதன் பிறகு ஹாஸ்டலில் இருந்த எல்லோரும் சேர்ந்து jesi திட்டினாங்க.. நீ யார் கூட பேசினாலும்.. உன்னோட பெயர் மற்றும் மொபைல் நம்பர் கொடுத்து பேசு... வேற யாரையும் இப்படி மாட்டிவிடாதே.. அதன் பிறகு அவள் ஹாஸ்டல் காலி பண்ணிட்டு போய்ட்டா..

அந்த பெண் சொன்னது பெரிய பொய்யா சின்ன பொய்யா தெரியலை.. இதில் பாதித்தது.. நானும் nancy-யும் தான்...
« Last Edit: Today at 01:08:16 PM by TiNu »