Author Topic: ஏக்கம்!!  (Read 593 times)

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 63
  • Total likes: 313
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
ஏக்கம்!!
« on: April 01, 2026, 10:57:02 AM »
ஏக்கம் என்பது..நீ
என்னைத் தேடும் ஒரு நொடி!!


அன்று...
அடி பட்டால் அழ
அம்மாவின் மடி இருந்தது!
இன்று...
மனம் பட்ட காயங்களை
மறக்க யாராவது
தலை கோதி, "நான் இருக்கிறேன்"
என்று சொல்ல மாட்டார்களா?
என்கிற குழந்தைத்தனமான ஏக்கம்!!



பேசும் வார்த்தைகளை விட,
உடைய போகும் விம்மல்களை
மறைக்கும் புன்னகையை
கண்டுபிடிக்கும் ஒரு இதயம் போதும்!



நிழல் தேடும் பறவைக்கு
வானமே சொந்தமானாலும்...
சிறகு ஒடுங்கி சாய
ஓர் அன்பு தோள் தேடும்
ஏக்கமது..இன்று ஏனோ திக்கற்றவளாய்!!