Author Topic: எல்லை அறிந்த அழகு  (Read 31 times)

Offline Luminous

எல்லை அறிந்த அழகு
« on: March 08, 2026, 09:53:07 AM »
பெண்ணே…
அனைவரிடமும் இனிமையாக பழகு,
ஆனால் உன் எல்லையை அறிந்து பழகு.
உன் சிரிப்பு இயல்பானது,
உன் வார்த்தைகள் அன்பானது.
ஆனால் எதிரில் நிற்கும் மனம்
அதை வேறு அர்த்தமாகப் படிக்கலாம்.

நீ சாதாரணமாக காட்டும் நட்பு
ஒருவரின் மனதில் காதலாக மலரலாம்.
பிறகு அது உண்மை அல்ல என்று தெரிந்தால்
அந்த மலரும் அமைதியாக உதிர்ந்து போகலாம்.

ஒரு பெண் ஏமாறும்போது
அவள் மனம் எவ்வளவு வலிக்கிறதோ,
அதே வலி
ஒரு ஆண் மனதையும் காயப்படுத்தும்.

ஆகவே பெண்ணே…
பேசும் வார்த்தையிலும்,
பழகும் பாசத்திலும்
உன் எல்லையை மெதுவாக காக்க கற்றுக்கொள்.

அது உன்னை பாதுகாக்கும் கவசம்,
உன்னை நேசிப்பவர்களின்
மரியாதையை காக்கும் ஒளி.

எல்லை அறிந்த அழகில் தான்
ஒரு பெண்ணின் பெருமை மலர்கிறது.
🌸 மகளிர் தின நல்வாழ்த்துகள் 🌸

LUMINOUS 😇💜💙💚💛🧚‍♀️

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1276
  • Total likes: 4391
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: எல்லை அறிந்த அழகு
« Reply #1 on: March 09, 2026, 05:51:10 PM »
Luminous sis

அழகான கவிதை
அருமையான கருத்து

மகளிர் தின வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "