Author Topic: 🌹Aththaiku pirandhavalae🌹  (Read 3 times)

Offline Jithika

🌹Aththaiku pirandhavalae🌹
« on: Today at 05:23:26 AM »


பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : அத்தைக்கு
பிறந்தவளே ஆளாகி
நின்றவளே பருவம்
சுமந்து வரும் பாவாடை
தாமரையே

ஆண் : தட்டாம்பூச்சி
பிடித்தவள் தாவணிக்கு
வந்ததெப்போ மூன்றாம்
பிறையே நீ முழு நிலவா
ஆனதெப்போ மெளனத்தில்
நீ இருந்தா யாரை தான்
கேட்பதெப்போ ஓ…….

ஆண் : { ஆத்தங்கரை
மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே } (2)

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா

ஆண் : தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன
விட்டு போகாது அட
ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது

பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : ………………………

பெண் : மாமனே உன்னை
தாங்காம மத்தியில்
சோறும் பொங்காம பாவி
நான் பருத்தி மாரா போனேனே

பெண் : காகம் தான்
கத்தி போனாலும்
கதவு தான் சத்தம்
போட்டாலும் உன்
முகம் பாக்க ஓடி
வந்தேனே

பெண் : ஒத்தையில்
ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர்
சொன்னேனே ஒத்தையில்
ஓடும் ரயில் ஓரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம்
போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே

பெண் : முத்து மாமா
என்னை விட்டு
போகாதே என் ஒத்த
உசுரு போனா மீண்டும்
வாராதே

ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : தாவணி
பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும்
சுகந்தானா பாறையில்
சின்ன பாதம் சுகந்தானா

ஆண் : தொட்ட பூ
எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள்
சுகந்தானா

ஆண் : { அயித்தயும்
மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா } (2)
அன்னமே உன்னையும்
என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகந்தானா

ஆண் : மாமன்
பொண்ணே மச்சம்
பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு
மயிலப் பசுவு தோதாச்சு

பெண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா

பெண் : உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது

ஆண் : ஆத்தங்கரை
மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில்
உறங்கும் கிளியே