Author Topic: நிலைத்த நெஞ்சின் நெறி  (Read 25 times)

Offline Luminous

நிலைத்த நெஞ்சின் நெறி
« on: February 21, 2026, 10:37:22 PM »
சூழல் பல மாறினும்
சொல்லின் செம்மை மாறாதிருத்தல்
அதுவே மனிதன் காக்க வேண்டிய
மிக உயர்ந்த காவல்💜
கூட்டம் பெருகின்
பலர் முகம் மலரும்🤎
தனிமை வரின்
அதே முகம் திசை மாறும்.💙
அது உலகின் இயல்பு
அதை உணராத மனமே
துன்பம் கொள்ளும்.
நேற்றின் நட்பு
இன்றின் நிலைமையால் சாய்ந்திடின்,
அது நட்பு அன்று
நேரத்தின் நிழல்.💛
எந்நேரமும்
ஒரே மனம் கொண்டிருத்தல்
அரிய செயல்
ஆனால் அதுவே அறம்.🧡
நிலவு மேகத்தால் மறைந்தாலும்
அதன் ஒளி மாறாது💚
அதைப் போல
சூழ்நிலை மாறினாலும்
நம் இயல்பு மாறாதிருப்பதே
உயர்ந்த தத்துவம்.💙
ஏனெனில்
உண்மை என்பது
காலத்தோடு பயணித்தாலும்
நேரத்தோடு மாறாத ஒன்று.💯💐🕊🧘‍♀️🍭👍luminous

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1277
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
Re: நிலைத்த நெஞ்சின் நெறி
« Reply #1 on: Today at 11:05:34 AM »
அருமையான கவிதை லூமினஸ். உண்மையை உரக்க சொல்லும் வரிகள். எந்நேரமும் ஒரே மனம் கொண்டிருத்தல் அரிய செயல்
ஆனால் அதுவே அறம் 💜✨🍀