Author Topic: புரியாத புதிர்!!  (Read 59 times)

Offline Shreya

புரியாத புதிர்!!
« on: January 14, 2026, 03:05:53 AM »

​தொலைந்த உன்னை மீட்டெடுக்க
எத்தனை முறையோ போராடிவிட்டேன்...
செய்த தவறுக்கு
மன்னிப்பும் கேட்டுவிட்டேன்...

​ஆனால் உன்னிடமோ...
எந்த சலனமும் இல்லாத
மௌனம் மட்டுமே!!

​வெறுப்பா...விலகலா?
அல்லது வெறும் வெறுமையா?
உன் மௌனத்தின் மொழி புரியாமல்
நான் திணறுகிறேன்...

​உன் மௌனம்...
நம் உறவின் முற்றுப்புள்ளியா?
அல்லது வெறும் இடைவேளையா?

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1241
  • Total likes: 4254
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: புரியாத புதிர்!!
« Reply #1 on: Today at 12:00:35 PM »
சில உறவுகள் முற்றுப்புள்ளியாக இருந்தாலும்
நினைவுகளில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்
 வாழ்நாள் உள்ளவரை

தொடர்ந்து எழுதுங்கள்  :)
 

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "