Author Topic: வரம்!!  (Read 578 times)

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 55
  • Total likes: 284
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
வரம்!!
« on: January 07, 2026, 01:00:26 AM »
விழியோரம் நதிபெருக, விதியோரம்
வழி தொலைய.. அவள் நிழலோடும்
பேசத் துணையின்றி நின்றிருந்தாள்..!!

​அவள் முன் தோன்றிய இறைவன், என்ன வரம்
வேண்டும் கேள் என.. பேதையோ
கண்ணீரைத் துடைக்காமல்
கைகூப்பி வேண்டினாள்..

​அழுது தீர்க்கவே இந்த பிறவியோ??
ஆயிரம் சொந்தம் இருந்தாலும்,
யாரும் எனக்கில்லை என்ற இந்த
வெறுமை..

​மனமெல்லாம் ரணமாகி போனபின்
வரம் ஏனோ???
வாழ மனமில்லை இவ்வுலகில்,
"என் ரணங்கள் ஆற.. ஒரு நீண்ட துயில் போதும்"🙏