« on: December 26, 2025, 10:28:52 PM »
காலம் என்னும் சிற்பியிடம்
சிறுக சிறுக செதுக்க படுகிறோம்...
அன்பினால் மட்டுமல்ல
அழியாத காயங்களாலும்.
அன்பின்பால் பெற்ற இனிமையான
நினைவுகளை விட...
பிரிவினால் உண்டான வடுக்களுக்கு
வலிமை அதிகம்...
மீண்டும் மீண்டேழ துணிகையில்
உள்ளத்தின் ஈர சுவடுகளோ
வறண்டு சிதைந்து போகின்றது
தன்னிலை மறந்து தவிக்கின்றது.
« Last Edit: December 26, 2025, 10:42:57 PM by Yazhini »

Logged