நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகள் பேசும் இடம்
என்ற அந்த அழைப்பு வந்த கணமே,
என் உள்ளத்தின் ஆழத்தில் உறங்கியிருந்த
ஒரு நினைவு
மெல்ல கண் திறந்தது.
இதோ… இதுவே சரி,
என் வாழ்க்கையின் ஒரு சிறு சாளரம்
இதன் வழியே சொல்லலாம் என்று
இதயம் தீர்மானித்தது.
ஆனால் காலம் மட்டும்
என் தீர்மானத்தைவிட
வேகமாய் நகர்ந்தது.
ஆர்வம் நெஞ்சை நிரப்பியது,
ஆனால் விரல்களின் வேகம்
அந்த உணர்வைத் தொடர்ந்து
ஓட முடியாமல் தளர்ந்தது.
எண்ணங்கள் சொற்களாக
வடிவெடுக்கும் முன்னரே,
ஆறு கதைகள்
ஒலியாக மாறி
காற்றில் கலந்துவிட்டன.
நான் ஏழாவது…
மேடை ஏறாத ஒரு கதை,
ஒலிக்கப்படாத ஒரு நினைவு.
ஆனால் என் நெஞ்சத்தில்
அது முழுமையாய்
வாழ்ந்துகொண்டிருந்தது.
அப்போதுதான் உணர்ந்தேன்.
நினைவுகள் பேச
வெளிப்புற ஒலிகள் அவசியமில்லை.
அவை உள்ளத்தில்
வேர் ஊன்றினால்,
மறப்பின் எல்லையை
என்றும் கடக்காது.
FM வாசிக்காத அந்த குரல்
ஒரு நாளும் மங்கவில்லை.
அது இன்று வரை
என் நெஞ்சத்தின் ஓரத்தில்
மௌனமாய்,
ஆனால் மிக அழகாய்
பேசிக்கொண்டே தான் இருக்கிறது.
LUMINOUS 😇💜💛🧡💚