Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
ரோஜா மலர்களின் மருத்துவ குணங்கள்...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ரோஜா மலர்களின் மருத்துவ குணங்கள்... (Read 14 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226206
Total likes: 28573
Total likes: 28573
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ரோஜா மலர்களின் மருத்துவ குணங்கள்...
«
on:
November 25, 2025, 10:17:04 AM »
35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.
ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப் படுகின்றது.ரோஜாப் பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம். இதனைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும், அத்துடன் அழகான உடல் அமைப்பையும் பெறலாம். அத்துடன் குருதி சுத்தமடைந்து தோலின் நிறம் பளபளப்புடன் விளங்கும். ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம். இதை அருந்தினால் மூலச்சூடுஇ மலச்சிக்கல் குடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும்
ரோஜாப்பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும்.
மலமிளக்கியாக செயல்படும் ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும். இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும். பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் சேர்க்க க்கூடாது.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காய வைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன.
ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.
குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.
களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்
ரோஜா இதழ்களைக் கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக் கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும். உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும். எந்த பிரச்சனையால் சீழ் வந்தாலும் நின்றுவிடும். காதில் என்ன காரணத்தால் வலி குத்தல் இருந்தாலும் அபினியைச்சுட்டு சாம்பலாகச் செய்து அந்தச்சாம்பலை இரண்டு அரிசி அளவில் எடுத்து ரோஜா பூவினால் தயாரிக்கப்பட்ட தைலத்துடன் கலந்து இலேசாகச் சூடு செய்து இரண்டிரண்டு சொட்டுகள் வீதம் காதில் விட்டு வர வேண்டும்.
பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.
ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு காரணமின்றி அடிக்கடி தும்மல் தோன்றும். இதற்கு மேற்கண்ட முறையில் நல்ல குணம் பெறலாம்.
வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.
ரோஜா பூக்களில் இருந்து ‘அத்தர்’ எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. தாகம், ஒக்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணப்படுத்தவும், மலமிளக்கவும் ரோஜா பூக்கள் பயன்படுகின்றன.
ரோஜா இதழ்கள் 50 எண்ணிக்கையில் சேகரித்து அரை லிட்டர் வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த தண்ணீரில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாக வரும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் 25 மில்லி பன்னீர் சேர்த்து 3 வேளையாக குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகி வரும்.
10 கிராம் எடையில் ரோஜா இதழ்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடி கட்டி குடி நீராக்கி, சீனி சேர்த்து குடித்தால் பித்த நோய் கட்டுப்படும். இந்த குடிநீரால் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகி வரும்.
ரோஜா குல்கந்து அற்புத மருந்து பொருள். ரோஜா இதழ்களுடன் இரு மடங்கு எடையில் கற்கண்டு சேர்த்து பிசைந்து, சிறிது தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்தால் குல்கந்து ஆகிவிடும். இதை காலை, மாலையில் நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வெள்ளைபடுதல் ஆகியவை குணமாகும். ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக இரு வேளை சாப்பிட்டு வந்தால் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை வலுப்பெறும். சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும். மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
ரோஜா மலர்களின் மருத்துவ குணங்கள்...