Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
அறிவியல் சொல்லும் ஆன்மிகம்..
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அறிவியல் சொல்லும் ஆன்மிகம்.. (Read 5 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226165
Total likes: 28569
Total likes: 28569
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
அறிவியல் சொல்லும் ஆன்மிகம்..
«
on:
Today
at 09:01:56 AM »
காலம்தொட்டு நம் தமிழர் மரபில் கோவில் கட்டி கும்பிட்டு வருவது வழக்கம். மன்னர்களும் மாமனிதர்களும் அந்தக் காலத்திலேயே பிரம்மாண்ட கோவில்களைக் கட்டி வழிபட்டு வந்தனர். ‘அவன் சாமி கும்பிடுறதால தாண்டா அவன் உடம்பும் வாழ்க்கையும் ஆரோக்கியமா இருக்கு’ என பேசிக் கொள்வார்கள். உண்மையாகவே நாம் கோவிலுக்குப் போகும்போது நம் மனதிலும் உடலிலும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த புத்துணர்ச்சி எப்படி நம் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கிறது… இதோ ஓர் அறிவியல் பூர்வமான அலசல்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் அந்தக் காலத்திலேயே கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான். இதன் குறிப்பு. கோயில்களில் ஒரு அபரிமிதமான காந்த சக்தியும், நேர்மறை ஆற்றலும் அதிகம் கொண்டிருக்கும். வட துருவமும் தென் துருவமும் இணையும் அந்த சிறிய இடத்தில் தான் கடவுளின் சிலை வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்ப கிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
மூலஸ்தானத்தில் சிலைக்கு கீழே செப்புத் தகடுகளை வைத்து பதிக்கப்பட்டிருக்கும். இந்த செப்புத் தகடுகள் அந்த காந்த ஆற்றலை ஈர்த்து வெளியே கொண்டு வரும் ஆற்றலை உடையது. அந்த மூலஸ்தானத்தில் மூன்று பக்கமும் சிலைக்கு நெருக்கமாக சுவரை எழுப்பி, ஒரு பக்கம் மட்டும் பக்தர்கள் உள்ளே வந்து கடவுளை வணங்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒரு பக்கம் திறந்திருக்கும் வழியின் மூலமாகத்தான் அந்த காந்த ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. அது மட்டுமின்றி கோவிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த காந்த ஆற்றல் கோவில் கருவறையின் இடமிருந்து வலமாக பாய்கிறது. அந்தச் சுற்றுப் பாதையில் நாம் மூலஸ்தானத்தை சுற்றும்போது காந்த ஆற்றலும் நம் உடலை முழுமையாக வந்தடைகிறது. காந்த ஆற்றலும் நேர்மறை ஆற்றலும் நம் உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒருவித சக்தியை கொடுக்கிறது. கோவிலின் கருவறையில் எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். மேலும் கோவில் விக்கிரகத்திற்கு பின் புறமும் ஒரு விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது விக்கிரகத்திற்கு பின்புறம் மின்சார விளக்குகளையே எரிய விடுகிறார்கள். விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளி, காந்த ஆற்றலை உந்தி வெளியே தள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது. அது போக மந்திரம் சொல்லும் போது மணியடிப்பதும், அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த ஆற்றலை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரி விதமான காந்த ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம், கற்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 அறையில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மட்டும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொண்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடத்தில் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த ஆற்றலை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கற்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் பாத்திரத்தில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு உடலில் எந்த நோயும் ஏற்படுவதில்லை என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான். வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்தப் படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல ஆற்றல்களை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை பற்றி கொள்ளுமாம். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜியும் வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும்போது ஒரு உற்சாகம் கிடைக்கிறது. அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி. அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளிப் பிரகாரத்தை காக்கும் இன்னொரு பாதுகாப்பான். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால், மின்னலால் ஏற்படும் மின் அழுத்தத்தை நியூட்ரல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
அறிவியல் சொல்லும் ஆன்மிகம்..