Author Topic: ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள  (Read 166 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226453
  • Total likes: 28876
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகளை தெரிந்துகொள்ள இந்த பதிவை பார்க்கலாம்.

ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. இதனாலேயே சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர். உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிளை எப்படித்தான் சாப்பிடுவது? தெரிந்து கொள்ள மேலும் படிங்க...

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.

ஆப்பிளில் இத்தகைய எண்ணற்ற ஆரோக்கியங்களை கொண்டுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம். இதனால் கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.இருப்பினும் அவ்வாறு மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில டிப்ஸுகளும் உண்டு.

அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால் மெழுகு மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும்.