நாட்கள் நகர நகர..
மனதில் சிறு கலக்கம்..
மனதில் நிறைந்திருக்கும்...
என்னை உணர்ந்திருக்கும்...
என்னவன்...என்னை அறிந்தவன்...
அவனிடம் இந்த பேதை மனதின்..
அற்ப எதிர்பார்ப்புக்கள் ...
எல்லை கடந்து ...அனைத்தும் மறந்து
போகிறதோ ...??
புத்திக்கு எட்டிய இவ்விஷயம்..
மனதிற்கு எட்ட மறுக்கிறதே...
மனதில் அவன் குடியுள்ளதாலோ ??