Author Topic: சின்னி...  (Read 8 times)

Offline MysteRy

சின்னி...
« on: Today at 08:51:22 AM »

இதன் இலை, கிழங்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் இலைக்கு வண்டு கடி நஞ்சு நீக்குதல், இடுமருந்தை முறித்தல், ஓடுகின்ற வாத நோயை போக்குதல், மந்தம்
அனைத்தும் குணமாக்கும் தன்மைக் கொண்டது.

வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை நாட்களில் உடலில் தடிப்பு ஏற்படும். அரிப்பும் இருக்கும். அவர்களுக்கு சின்னி இலையை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, பத்து மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை, மாலை இரு வேளை கொடுத்து வந்தால் குணமாகும். மருந்து
சாப்பிடும் நாட்களில் பத்தியமாக உப்பு, புளி நீக்கவேண்டும்.

இடு மருந்து என்று சொல்கின்ற வசிய மருந்து உண்டவர்கள் தனது சுய சிந்தனையை இழந்துக் காணப்படுவார்கள். இவர்களுக்கு சின்னி இலைச்சாறு அத்துடன் தண்ணீர் கலந்து 50-மி.லி கொடுத்தால் வாந்தி ஏற்படும். அப்போது அதனுடன் வசிய மருந்தும் வந்து விழும். மேலும் அந்த மருந்து செரித்து இரத்தத்தில்
கலந்திருந்தால் மூன்று நாட்களுக்கு காலை வேலையில் மட்டும் கொடுத்து வந்தால் நஞ்சு முறிந்து பழைய நிலைக்கு வருவார்.

சின்னியின் கிழங்குப் பன்றிகறிக்கு நிகரான குளிர்ச்சிமிக்கது. இதை ஆவியில் வேகவைத்து மாலையில் உண்டு வந்தால் மூலம் குணமாகும். ரத்த கசிவு நிற்கும்.

மலச்சிக்கலுக்கு சின்னி இலைப்பொடி 5-கிராம், நிலாவரை 30-கிராம், கடுக்காய் 15-கிராம் எடுத்து அனைத்தையும் இடித்து சூரனம் ஆக்கி சலித்து இரவு
படுக்கப் போகும் முன் 2-கிராம் அளவு இளஞ்சூடான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் மலம்
எளிதாக வெளியேறும். இது ரோஸ்லோ என்ற பெயரில் சித்த மருந்தாக கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி 3-கிராம் அளவு நாள்தோறும் பயன்படுத்தலாம். இலையை அரைத்து தேள்கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் இறங்கும்.