Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
இயற்கை வயாகராவில் முதலிடம் பெறும் முருங்கை! 🌿🌿🌿🌿🌿
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இயற்கை வயாகராவில் முதலிடம் பெறும் முருங்கை! 🌿🌿🌿🌿🌿 (Read 2 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226052
Total likes: 28513
Total likes: 28513
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
இயற்கை வயாகராவில் முதலிடம் பெறும் முருங்கை! 🌿🌿🌿🌿🌿
«
on:
Today
at 08:27:26 AM »
அளவிட முடியாத மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் தாவரங்களை இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. மருத்துவ குணமிக்க தாவரத்தை உணவாக உட்கொள்ளும் முன்னோர்களின் உணவுபழக்கத்தை நாமும் கடைப்பிடித்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.
தாவரம் முழுவதும் மருத்துவ குணமே என்று சொல்லக்கூடிய வகையான தாவரங்களை விரல்விட்டு எண்ணி விட லாம். அவற்றிலும் முக்கியமானது என்றால் முருங்கை. இவற்றில் 90 க்கும் அதிகமான சத்துகளும், அதிக மருத்துவ குணங்களும் இருப்பதாக ஆய்வுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. முருங்கை மரத்தில் வேர், இலை, முருங்கை காய், முருங்கை காம்புகள், பூ, பட்டை அனைத்துமே அதீத மருத்துவ குணங்களைக் கொண்டது.
ஆயுர்வேத மருத்துவம் முருங்கையைப் பற்றி குறிப்பிடும் போது இது 300 விதமான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுவதாக கூறுகிறது.
கீரைகளில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டியது என்று அறிவுறுத்துபவர்கள் முருங்கைக்கீரையைத் தவறாமல் சொல்வார்கள். மற்ற கீரைகளை விட இதில் அதிக அளவு புரதமும் சத்துகளும் அடங்கியிருக்கின்றன.
^
முருங்கையில் இருக்கும் சத்துகள்:
உடலுக்கு தேவையான முக்கிய் அமினோ அமிலங்கள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. மற்ற உணவுகளைவிட இதில்
25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. மேலும் வைட்டமின் பி, பி2, சி, புரதம், நார்ச்சத்து, கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதிகம் விலை கொடுத்து வாங்காமல் இயற்கையிலேயே இந்த சத்துகள் முருங்கைக்கீரையில் நிறைந்திருக்கின்றன.
இரத்தம் சீராக இல்லாமல் இருப்பதால் தான் அதிக குறைபாட்டை சந்தித்துவருகிறோம். இதைச் சரிசெய்ய மாத்திரைகளை விட அருமருந்தாக இருக்கிறது முருங்கை.
முருங்கை என்னென்ன நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா?
#ஹீமோகுளோபின்:
இரத்த சோகை இன்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் போதுமான அளவு இரத் தம் இருப்பதில்லை. இது அளவில் அதிகம் குறையும் போது மட்டுமே பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக் கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.
குறிப்பாக பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இந்தப் பாதிப்பு உண்டு. இரத்த விருத்தி குறைந்திருப்பவர்கள் மட்டுமல்ல அனைவரும் பொதுவாக வாரத்தில் இரண்டு நாள்கள் இந்தக் கீரையை சாப்பிட்டால் இரத்தசோகை வராமல் தடுக்கலாம். அதிக அளவு இரும்புச்சத்து கொண்ட இந்த முருங்கையால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க தொடங்கும் என்பதை தொடர்ந்து பரிசோதனை செய்வதின் மூலம் நீங்கள் உணரலாம்.
^
#கருப்பை, ஆண்மையைப் பலப்படுத்தும் முருங்கை:
இன்று குழந்தைப் பேறு இயற்கையாக கிடைப்பதில் சிக்கல் என்னும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது. கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தவும் கருப்பையின் வளர்ச்சியைச் சீராக்க செய்வதிலும் முக் கிய பங்கு வகிக்கிறது முருங்கை.
விந்து எண்ணிக்கையில் குறைபாடு இருக்கும் ஆண்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது முருங்கை. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கசெய்கிறது. ஆண்களுக்கும் பெண்க ளுக்கும் குழந்தைப்பேறில் இருக்கும் சிக்கலைத் தீர்த்துவைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது முருங்கை இலை, முருங்கைப்பூ, முருங்கைக்காய்.
^
#தாய்ப்பால் சுரக்க முருங்கை:
பிரசவித்த தாய்மார்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் இல்லாமல் இருந்தால் முருங்கைக்கீரையை அடிக் கடி உணவில் சேர்த்துவரலாம். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. மேலும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்க்கும், குழந்தைக்குமான நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துகிறது.
^
#மலச்சிக்கல் சிறுநீரகப் பிரச்னை குணமாக:
முருங்கைக் காய் வயிற்றுப்புண், கண் சம்பந்தமான நோய், சிறுநீரகப் பிரச்னை போன்றவற்றைக் குணப் படுத்துகிறது. ம்ேலும் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிப்பதிலும் தொண்டை புண், வயிற்றுப்புண் போன் றவை தீவிரமாகமலும் இருக்க முருங்கைக்காய் உதவுகிறது.
இந்தக்கீரையில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். மலச்சிக்கல் பிரச்னைகளால் பாதிப்படைந்தவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
^
#கால்சியம் குறைபாட்டை போக்கும்:
எலும்பு வலுவாகவும் பற்கள் உறுதியாகவும் இருக்க கால்சியம் பற்றாக்குறையின்றி இருக்க வேண்டும். முருங்கை இலையில் கால்சியமும் மெக்னீசியம் சத்துகளும் அதிகமாக இருப்பதால் இவை பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவூட்டும். குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே இதைக் கொடுத்துவந்தால் கால்சியம் பற்றாக்குறையின்றி வளர்வார்கள்.
^
#இதய செயல்பாடும், வாயுத்தொல்லையையும் நீக்கும்:
இதயத்துக்கு வலுவூட்டும் என்பதோடு இதயத்தைச் சீராக செயல்படவும் வைக்கும்.இதய சம்பந்தமான நோய் கள் நெருங்க கூடாது என்று நினைப்பவர்கள் வாரம் இருமுறை முருங்கையை சேர்த்துகொள்வது நல்லது.
வாயுக்கோளாறால் அவதிப்படுபவர்கள் இந்தக்கீரையை சாப்பிடலாம்.
வாயுத்தொல்லையை அண்டவிடாமல் செய்வதோடு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சளித் தொல்லை பிரச்சனைகளுக்கும் முருங்கை நல்ல மருந்தாக இருக்கும். இவையெல்லாம் தவிர உடல் எடையைக் குறைப்பதிலும், முதுமையைத் தடுப்பதிலும், சருமத்துக்கு அழகூட்டு வதிலும், கண்பார்வை பலமடையவும், மூட்டு வலி குறையவும், கூந்தல் வளர்ச்சிக்கும் என்று பல மருத்துவ குணநலன்களைக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
முருங்கைபூ, காய், இலையை எப்படி எடுத்து கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை பார்க்கலாமா?
^
#கண்களுக்கு குளிர்ச்சி தரும்:
கண்களுக்கு வேலை கொடுக்கும் பணி இன்று அதிகரித்துவிட்டது.இதனால் கண்களில் அதிகப்படியான உஷ்ணம் உண்டாகிறது. சுத்தம் செய்த முருங்கைப்பூ.நீரை கொதிக்க வைத்து சுத்தம் செய்த முருங்கைப் பூவை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் கண் குளிர்ச்சி அடையும்.
மாதவிடாய் பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள்முருங்கைப்பூவை துளி பசும்பால் விட்டு அரைத்து, நன் றாக காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து இனிப்புக்கு பனங் கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி னால் லேகியப்பதத்துக்கு வரும். இதை ஒரு டப்பாவில் வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்னை நீங்கும். கருப்பையையும் உறுதியாக்கும்.
முருங்கைப்பூவைச் சுத்தம் செய்து கஷாயமாக்கி குடித்து வந்தால் உடலில் வாதம் பித்தம் கபம் மூன்றின் செயல்பாடுகளும் சமமாக இருக்கும். முருங்கைப்பூ பொடி நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் அவற்றை யும் வாங்கி பயன்படுத்தலாம்.
^
#இயற்கை வயாகரா:
இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைந்த இருபாலருக்குமே இயற்கையான மருந்து முருங்கைப்பூ. முருங்கை இலை.
பசும்பாலுடன் முருங்கைப்பூ,பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி ஒரு மண்டலம் தொடர்ந்து அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் மீது நாட்டம் உண்டாகும். ஆண்மை பெருக்கும் வல்லமைக் கொண்டது முருங்கைப்பூ என்பதால் வயாகரா மாத்திரைகளைத் தேடி செல்ல வேண்டியதில்லை.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
இயற்கை வயாகராவில் முதலிடம் பெறும் முருங்கை! 🌿🌿🌿🌿🌿