Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உல்லாச கப்பல்களில் செய்ய கூடாத விஷயங்கள்....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: உல்லாச கப்பல்களில் செய்ய கூடாத விஷயங்கள்.... (Read 52 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226068
Total likes: 28514
Total likes: 28514
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
உல்லாச கப்பல்களில் செய்ய கூடாத விஷயங்கள்....
«
on:
October 27, 2025, 07:48:03 AM »
உல்லாச கப்பல்களில் பயணிக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். நிலத்தில் நமக்கும் கிடைக்காத பல்வேறு தனித்துவமான அனுபவங்களை உல்லாச கப்பல்கள் நிச்சயமாக வழங்கும். ஆனால் நீங்கள் கவனமாக இருக்காவிட்டால், சுகமான நினைவுகளுக்கு பதிலாக, மோசமான அனுபவங்களுடன் உல்லாச கப்பலில் இருந்து திரும்பி வர வேண்டியிருக்கும்.
உல்லாச கப்பல்களில் பயணிக்கும்போது பலர் பல்வேறு தவறுகளை செய்கின்றனர். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். உல்லாச கப்பல்களில் இந்த தவறுகளை நீங்கள் செய்யாவிட்டால், வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைக்க கூடிய சுகமான அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.
தவறான உல்லாச கப்பலை தேர்வு செய்யாதீர்கள்:
விடுமுறை காலத்தை இன்பமாக கழிக்கவே உல்லாச கப்பல்களில் பலரும் பயணம் செய்கின்றனர். நீங்கள் இந்த விடுமுறை காலத்தில் என்ன விதமான அனுபவத்தை எதிர்பார்க்கிறீர்கள்? என்பதற்கு ஏற்ப உல்லாச கப்பலை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் உங்கள் விடுமுறை காலம் வீணாவதை யாராலும் தடுக்க முடியாது.
உதாரணத்திற்கு நீங்கள் குடும்பத்துடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், அதற்கு ஏற்ற உல்லாச கப்பலை தேர்வு செய்வது முக்கியம். பொதுவாக குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள், குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் நீங்கள் இரவு வாழ்க்கையையும், பொழுதுபோக்கையும் விரும்புபவர் என்றால், வயது வந்தவர்களுக்கான உல்லாச கப்பல்கள் ஏற்றதாக இருக்கும்.
எதிர்பார்ப்பிற்கு ஏற்ற உல்லாச கப்பலை தேர்வு செய்யாமல், மோசமான அனுபவத்தை பெறுபவர்கள் இங்கு ஏராளம். இதில் ஒருவராக நீங்கள் மாறக்கூடாது எனும் பட்சத்தில், எந்த உல்லாச கப்பல் நமக்கு ஏற்றது? எது சிறந்தது? என்பதை முடிவு செய்வதற்கு, கொஞ்ச நேரம் செலவிட்டு ஆராயுங்கள். அதன்பின் முன்பதிவு செய்யுங்கள்.
பயண திட்டத்தை பார்க்க மறந்தால், உல்லாச கப்பலை தவற விடக்கூடும்:
உல்லாச கப்பல்களின் பயண திட்டம் எந்த நேரத்திலும் மாற்றம் செய்யப்படலாம். எனவே பயண திட்டத்தை அவ்வப்போது பார்க்க மறந்தால், நீங்கள் உல்லாச கப்பலை தவற விட நேரிடலாம். தொலைக்காட்சி பிரபலம் மரியா கோன்ஸலஸ் ரோச்சும், அவரது கணவர் அலெஸாண்ட்ரோவும் சமீபத்தில் இதனை தெரிந்து கொண்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் இருவரும் உல்லாச கப்பலில் பயணம் செய்தனர். பஹாமஸில் இருந்தபோது, அவர்கள் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்கள் மட்டுமல்லாது இன்னும் நான்கு பயணிகளும் தாமதமாகதான் வந்து சேர்ந்தனர். இவர்கள் ஆறு பேரும் தாமதமாக வந்த சூழலில், உல்லாச கப்பல் புறப்பட்டு சென்று விட்டது.
ஆனால் மரியா கோன்ஸலஸ் ரோச், இது தன்னுடைய தவறுதான் என ஒப்புக்கொண்டார். அதாவது உல்லாச கப்பலின் பயண திட்டத்தை அவர் பார்க்கவில்லை. இது தொடர்பாக அவர் அந்த சமயத்தில் கூறியதாவது: எப்போதும் காலையில் பயண திட்டத்தை பார்த்து விடுவோம். ஆனால் அன்றைய தினம் நாங்கள் தவறு செய்து விட்டோம். செயலியை நாங்கள் சோதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அடிக்கடி கை கழுவுங்கள்:
உல்லாச கப்பல்களில் நோய் தொற்று மிகவும் வேகமாக பரவும். சில சமயங்களில் உல்லாச கப்பலில் உள்ள அனைவரும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கிருமி தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமென்றால், வெதுவெதுப்பான தண்ணீரில் சோப்பை கொண்டு குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்கு அடிக்கடி கை கழுவ வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்வை கூட இதற்கு உதாரணமாக கூறலாம். தற்போது கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் கப்பலில் பயணம் செய்த ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களை பல நாடுகள் கைவிட்டு விட்ட நிலையில், கியூபா அரவணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட பானங்களை கொண்டு செல்லாதீர்கள்:
பயணிகள் என்னென்ன பானங்களை கொண்டு வரலாம் மற்றும் கொண்டு வரக்கூடாது என்பது தொடர்பாக ஒவ்வொரு உல்லாச கப்பலுக்கும் ஒரு விதிமுறை உள்ளது. எனவே நீங்கள் பயணம் செய்யவுள்ள உல்லாச கப்பலின் விதிமுறையை தெளிவாக தெரிந்து வைத்து கொள்வது அவசியம். ஒரு சில உல்லாச கப்பல்கள், ஒயின், ஷாம்பெயின் மற்றும் பீர் ஆகியவற்றை கொண்டு வர பயணிகளை அனுமதிக்கின்றன.
அதே சமயம் இன்னும் ஒரு சில உல்லாச கப்பல்கள், ஒரு பாட்டில் ஒயின் கொண்டு வரலாம், இரண்டு பாட்டில் ஷாம்பெயின் கொண்டு வரலாம் என்பது போன்ற விதிமுறைகளை வைத்துள்ளன. எனவே நீங்கள் பயணம் செய்யவுள்ள உல்லாச கப்பலின் விதிமுறை என்ன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுங்கள்.
பாதுகாப்பு பயிற்சிகளை தவற விடாதீர்கள்:
உல்லாச கப்பலில் ஏறிய உடனே கொண்டாட்ட மன நிலை வந்து விடுவது இயல்புதான். அதற்காக பாதுகாப்பு பயிற்சிகளை தவற விடுவது தவறானது. பொதுவாக அவசர சூழல்களில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது தொடர்பாக உல்லாச கப்பல்களில், பயணிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். லைஃப் ஜாக்கெட்டை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் சொல்லி கொடுக்கப்படும்.
எனவே பாதுகாப்பு பயிற்சியை நீங்கள் தவற விட்டால், அவசர சூழல்களில் சிக்கலாகி விடும். எனவே இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள். உல்லாச கப்பல்களில் வழங்கப்படும் பாதுகாப்பு பயிற்சிகளில் கலந்து கொள்ள தவறும் நபர்களுக்கு, கடலோர காவல் படை அல்லது சம்பந்தப்பட்ட உள்ளூர் அரசாங்கத்தால் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது கூடுதல் தகவல்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உல்லாச கப்பல்களில் செய்ய கூடாத விஷயங்கள்....