Author Topic: பக்கவாதம்...  (Read 28 times)

Offline MysteRy

பக்கவாதம்...
« on: Today at 08:09:27 AM »

இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. நெஞ்சுவலி என்றால் உடனே மாரடைப்பு என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பின் தொடர்ந்து பரிசோதனை செய்து சிறிது நாள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள் பின் வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் பக்கவாதம் என்பது அவ்வாறு இல்லை. அதற்கு சிறிய அறிகுறி கூட கிடையாது. மூளையின் செயல்களில் ஒவ்வொன்றும் செயலிழக்கச் செயலிழக்க பக்கவாதத்தின் அறிகுறி வித்தியாசமாக இருக்கும்.. இப்பொழுது 30 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதை ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம். மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.

வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

பக்கவாதம் வகைகள் :
பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று Ischemic stroke என்பது. மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போய்க்கொண்டிருக்கும்.
மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது - Hemorrahagic Stroke. இந்த இரண்டு வகையான பக்கவாதத்திற்கும், வைத்தியங்கள் , காரணங்கள் எல்லாமே வித்தியாசப்படும்.

பக்கவாதம் அறிகுறிகள் :
நன்றாக இருப்பார்கள் திடீரென்று கை,கால் வராமல் போவது, ஒருபுறம் வாய் கோணலாகப் போவது, சிலருக்கு பேசுவதற்கு வார்த்தை வராது, ஒருசிலர் பேசுவார்கள் ஆனால் வாய் உளரும். ஒருசிலருக்கு இடது கையோ, வலது கையோ மறத்துப்போதல், இன்னும் சிலருக்கு நடை தடுமாறுதல், சிலருக்கு இரண்டிரண்டாகத் தெரிவது, தலைசுற்றுவது என இந்த மாதிரி மூளையில் எந்தப் பகுதியில் இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதோ? அதனுடைய செயல்கள் இழந்து போவதால் அறிகுறிகள் நிறைய வரும். முக்கியமாக மக்களுக்குத் திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் கை, கால் விளங்காமல் போவது, வாய் கோணித்துக்கொள்வது, பேச்சு வராமல் இருப்பது இந்த மூன்றும் முக்கியமான அறிகுறி. இந்த விதமான அறிகுறி இருந்தது என்றால் உடனே அதைப் பக்கவாதம் என்று தெரிந்து அருகாமையில் இருக்கிற பக்கவாதத்திற்கான மருத்துவ வசதி உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.