Author Topic: ஓயாமல் பெய்யும் மழை!  (Read 450 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1241
  • Total likes: 4254
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
ஓயாமல் பெய்யும் மழை!
« on: October 22, 2025, 12:54:57 PM »
அளவுகளும் ,
எல்லைகளும் கொண்ட
ஈர மண்ணில் முளைக்கும்
செடிகள் போல தான்
சில நேரங்களில்
அன்பு

நின்று பொழியும் ,
நிற்காத மழையை
சிலர் நேசமாக,
சிலர் துன்பமாக,
சிலர் சாபமாகவும்,
சிலர் ஆசீர்வாதமாகவும்,
சிலர் மோகமாகவும்,
சிலர் விதியின் விளையாட்டாகவும்
பல வடிவங்களில்
அப்படிதான் இந்த
அன்பும்

எடுத்து வைத்ததையும்,
எடுத்து கொடுத்ததையும்,
கணக்கு புத்தகத்தில் பதிவு செய்து
காலத்தின் ஏடுகளில்
நிரப்பி வருகிறோம்

வேலிகளும், வேட மாற்றங்களும்,
அளவீட்டின் கோடுகளும்,
மழையும், குளிரும், வெயிலும்,
காலமும் வண்ணமும் —
சில நேரங்களில்
பகிர முடியாத
உணர்ச்சிகள் தான் இந்த
அன்பு

அறிந்தும், சொல்லியும்,
அறியாமலே கரைந்தும்,
கரைந்து ஒன்றாகும்
அந்த அன்பு

அமைதியை உடைத்து
வீசிசெல்லும் குளிர்ந்த காற்று
என் கண்களிருந்து எட்டி பார்க்கும்
கண்ணீர் துளிகளை
அணைத்து செல்ல முயல்கிறது
இருளிலும் என் கண்ணீரை கண்டறிந்த
காற்று

வஞ்சகத்தின் வடுக்களை
மறக்க இருளை துணையாக்கி
காத்திருக்க ,
என் எண்ண ஓட்டங்களை போல
துணைக்கு நானுமிருக்கேன் என
ஓயாமல் பெய்யும்
மழை

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "