Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
குந்தாணி என்றால் என்ன?
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: குந்தாணி என்றால் என்ன? (Read 177 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226067
Total likes: 28513
Total likes: 28513
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
குந்தாணி என்றால் என்ன?
«
on:
October 19, 2025, 08:39:53 AM »
இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக மட்டுமே தெரியும் ஆனால்…
குந்தாணி - என்றால் வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர்… என அகராதிகள் கூறுகின்றன.
உ லக்கை கொண்டு உரலை குத்தும் (இடிக்கும்) பொழுது தவச (தானிய) மணிகள் வெளியே சிதறாமல் பாதுகாக்கும் வாயகன்ற - புடைப்பான அமைப்புக்கு குந்தாணி என்று பெயர்.
குத்துதல் = உலக்கையாற் கூலத்தைத் துவைத்து, இடித்து நொறுக்குதல்.
மேல்பகுதியில் வாய் அகன்றும் கீழ்பகுதியில் உரலுடன் பொருந்துமாறு ஒடுங்கி - புடைப்பான வளையம் போன்ற வடிவத்தில் உரலைச் சுற்றி ஒரு தடுப்பைப் போல பயன்படுகிறது - குந்தாணி.
முற்காலத்தில் உரல்கள், குந்தாணி ஆகியவை கருங்கற்களால் செய்யப்பட்டது. உலக்கைகள் மரத்தால் செய்யப்பட்டு இரு முனைகளிலும் பூண் போடப்பட்டிருக்கும். (உலக்கைப் பூண் என்பது மரத்துக்கு போடப்படும் இரும்புக் கவசம்) .
பிற்காலத்தில் வேம்பு, பாலை போன்ற மரத்தில் செய்யப்பட்ட உரல் களும் வழக்கில் இருந்தன.
உரல், உலக்கை, குந்தாணி மூன்றும் ஒரே தொகுப்பைச் சேர்ந்த கருவிகள்.
துக்கடா :
இடை சுருங்கி இருக்கவேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் - 'குதிர் போல இருக்கிறாள், குந்தாணி போல் இருக்கிறாள்' ... என்று உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம். இது ஒரு நையாண்டி வழக்கு.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
குந்தாணி என்றால் என்ன?