Author Topic: உங்களுக்கெல்லாம் ஜாதகம் பார்ப்பதற்கு முன் ஒரு புல் போட்டால் தான் சரியா வரும்...  (Read 38 times)

Offline MysteRy


ஒரு அம்மிணி ஜாதக ஆலோசனைக்கு கேட்டு அப்பாய்ண்மெண்ட்டும் வாங்கி அந்த தேதியில் போனும் செய்தார்.

"என்னம்மா பிரச்சனை? எது சம்பந்தமா ஆலோசனை?"

"டிவோர்ஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன் சார், எடுத்த முடிவு சரியான்னு மண்டைக்குள்ள ஒரு கேள்வி ஓடிட்டே இருக்கு. அதுக்குத்தான் கன்சல்டிங்"

"இருங்கம்மா, ஜாதகத்தை பார்த்துடறேன்.."

"சார், ஒரு நிமிஷம்... கல்யாணம் பண்ணின அப்புறம் பொண்டாட்டி முக்கியமா? அப்பா அம்மா முக்கியமா?"

"யாரோட அப்பா அம்மாம்மா?"

"அவரோட அப்பாம்மா"

"முக்கியம்தான்.."

"அப்ப பொண்டாட்டி முக்கியமில்ல ?"

"பொண்டாட்டியும் முக்கியம்தாம்மா.."

"பொண்டாட்டிதான் முக்கியம். அத மொதல்ல புரிஞ்சிக்குங்க "

கன்சல்டிங் எனக்கா? அவருக்கா? அவர் என்னிடம் ஆலோசனைக்கு வந்திருக்கிறாரா? நான் ஆலோசனைக்கு அவருக்கு போன் செய்திருக்கிறேனா... ஒரே குழப்பமாக இருந்தது எனக்கு...

"புரிஞ்சிக்கிட்டேன்ம்மா.."

"அப்படி இருக்கப்போ, சும்மா சும்மா அப்பா அம்மாவாவை பார்க்கப்போறேன். கேக்கப்போறேன். நோக்கப்போறேன்னு வாரா வாரம் அவங்க வீட்டுக்கு நொட்டிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்??"

"இதை அவர்ட்டயே கேட்டிருக்கலாமேம்மா ?"

"கேட்டேன்.. கேட்டதுனாலதான் மாசம் ஒருக்கா மட்டும் போறேன்னு ஒத்துக்கிட்டாரு. ஆனாலும் அவரு அப்பப்ப நடுவுல போய் பார்த்துட்டுதான் வருவாரு சார் "

"அது எப்டி ஒங்களுக்கு தெரியும்?"

"அவங்கம்மா சுட்ட போளியை கடைல வாங்கிட்டு வந்தேன்னு சொல்லி என்கிட்டயே குடுப்பாரு. எனக்கு எகிறுமா எகிறாதா ?"

(ஏண்டா இவ்ளோ அப்பாவியா இருப்பீங்க? ஒரு ரகஸியத்தை ஒழுங்கா மெயிண்டெய்ன் பண்ண முடியாதாடா ஒங்களால? போளியாடா முக்கியம்?)

"நான் என்ன டிரெஸ் பண்ணனும்னு நான்தான் முடிவு பண்ணனும்... அவன் அதை சொல்லலாமா??"

"......"

"என்ன சார் பதிலே சொல்ல மாட்றீங்க??"

"ஆங்.. அது கரெக்ட்டுதான்.. ஒங்க ட்ரெஸ்ஸு, ஒங்க முடிவு.. அது நல்லாருக்கா இல்லியான்னு சொல்றது மட்டும்தான அவங்க வேலை.."

"நல்லாருக்குன்னு மட்டும்தான் சார் சொல்லனும். பொண்டாட்டியை புரிஞ்சிக்கனும் முதல்ல"

"ஓ.. என்ன காரணம்னு ஜாதகத்தை பார்த்துடலாமாம்மா?"

"இருங்க, நான் வீட்டுக்கு வர்ற நேரத்தை யார் முடிவு பண்ணனும் ?"

"யாரு பண்ணனும் ?"

"நான் முடிவு பண்ணனும், இல்ல என் கம்பெனி சுவிச்சுவேஷன் முடிவு பண்ணனும். இல்லன்னா என் சுவிச்சுவேஷன் முடிவு பண்ணனும். தாலிங்கற ஸ்விட்ச்சை கைல வெச்சுக்கிட்டு அவன் முடிவு பண்ணலாமா?"

"என்ன வேலை பாக்கறீங்கம்மா !?"

"ஆர்.ஜே வா இருக்கேன் "

"ஓ.. ஜாதகத்தை பார்த்துடலாமாம்மா.."

"இருங்க.. இப்ப குழந்தை பெத்துக்கறதுல வரலாம் சார். இதை யார் முடிவு பண்ணனும்?"

"...."

"சார்..??"

"லைன்லதாம்மா இருக்கேன்.."

"யார் சார் முடிவு பண்ணனும் ?"

"நீங்க ரெண்டு பேரும்தாம்மா.."

"அப்ப அதுக்கு நடுவுல அவங்கம்மா வந்து ஒடனே பெத்துக்குங்கன்னு எதுக்கு சொல்லனும்?"

"பேரன் பேத்தியை பாக்கலாங்கற ஆசைதாம்மா.."

"பெக்கறது நானா அவங்களா ??"

(ஷ்ஷ்ஸோ.. எனக்கு இன்னிக்கு ஏதாவது சந்திராஷ்ட்டமமான்னு தெரியலையே.. ) "லைன்ல இரும்மா கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கறேன்.."

"குடிச்சிட்டீங்களா? யாரு பெத்துக்கறது?"

"நீங்கதாம்மா பெத்துக்கனும்"

"இப்டி இருக்கப்போ எல்லாமே அவங்க சவுகரியத்துக்கே நடந்துக்கனும்ன்னா எனக்கு எதுக்கு இந்த லைஃப்??"

"......"

"இதைப்பத்தி டெய்லி நாலு மணி நேரம் பேசுனாலும் என் புருஷன் வாயைவே திறக்க மாட்டேங்குறான். இன்னும் கொஞ்சம் பேசுனா வெளிய போய்ட்டு அடுத்த நாள்தான் வீட்டுக்கு வரான். அதனாலதான் டிவோர்ஸ் முடிவுக்கு வந்திருக்கேன். நான் டிவோர்ஸ் முடிவுக்கு வந்தது சரிதான சார்"

"முடிவுக்கு வந்ததெல்லாம் பத்தாதும்மா.. பண்ணிறனும். அதுக்கு மேலயாவது உன் புருஷனும் அவங்க குடும்பமும் நல்லாருக்கட்டும்.."

"அப்ப நானு?"

"ஒனக்கென்னம்மா புண்ணியவதி.. ஒனக்கென்ன குறை வந்து வந்துறப்போவுது. ஒன் மனசு போல வாழுவம்மா.."

"கரெக்ட் சார். நான் நாளைக்கு ஜாதக கன்சல்டிங் பார்த்துக்கறேன்.. இப்ப போனை வெக்கிறேன்."

🥺🥺🥺