நேற்று இரவு திடீர் என்று ஒரு கனவு
காலம் காலமாய் காதலிக்கும்
பல விஷயம் வாய்க்கவில்லை கனவில் வர
அரிதாய் ,புதியதாய் ஆனாலும் சிறிதே சிறிதாய்
கனவில் சிலரின் வரவு ...
" தேன் நிலவு " நாட்டினில் இருந்து
ஒரு பிறை நிலவு ,அழகிய தரை நிலவு
வந்திருந்தால் எனை தேடி,
நான் இருக்கும் இடம் தனை தேடி
தரை நிலவு தனியாய் வந்ததா ?
இல்லை
தனக்கு துணையாய் ,இணைக்கு இணையாய்
துணைக்கா இல்லை பிணைக்கா ?
என தெளிவாய் தெரியாதபடி
கிட்டத்தட்ட ஒரு பிணையாய்
திசைகள் எட்டும் ஆசையாய் ஓசையாய்
நிறைந்த இசையோடு ஆசையை ஆசையாய் காண
ஓசைபடாமல் வந்திருந்தன நேச புறாக்கள் ..
அருகருகே இருந்தாலும் என்றுமே இணையாத
இரு தண்டவாளங்களாய் இருவர் இனைந்து
இதோ இந்த ஓட்டை ரயிலினை காண
பேரூந்தில் பயணிக்கின்றோம் அருகருகே அமர்ந்து
ஏதேதோ பேசிகொண்டே எங்கெங்கோ செல்கின்றோம்
ஒரு கட்டத்தில் ,இக்கட்டான ஒரு நிலையில்
நேச புறாக்களை நெசமாய் காணலை ....
தேடிதிரிந்தவனாய் தேடி திரிகையில்
தூக்கமும் திரிந்தது .கனவும் கலைந்தது .....