Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
இயற்கை மருத்துவம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இயற்கை மருத்துவம் (Read 5 times)
RajKumar
SUPER HERO Member
Posts: 1135
Total likes: 962
Total likes: 962
Karma: +0/-0
Gender:
hi i am Just New to this forum
இயற்கை மருத்துவம்
«
on:
Today
at 12:26:01 PM »
1) சீயக்காய், தேய்த்து குளிக்க சொன்னது கூந்தல் வளர அல்ல, ஈரு/பேன்/கொசுவை ஒழிக்க..!!!
2) தினமும் குளிக்க சொல்வது உடல் சுத்தத்திற்காக அல்ல, கெட்ட ஆவீயை (உடல் சூட்டை) தனிக்க...!!!
3) பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வது...!!!மஞ்சள் ஒரு கிருமி நாசினி, பெண்களின் முகத்தில் எளிதில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, தோள் வரண்டு கடினமாகுதல் போன்றவையை ஒழிக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு...,மஞ்சள் ஒரு மிகப்பெரிய மருத்துவம்...!!!
4) கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஒரு கொத்து வேப்பிலையை வைக்க சொல்வது...!!! பேய்/பிசாசு அண்டாமல் இருக்க அல்ல...!!! பொதுவாக சாதாரண பெண்களைவிட கர்ப்பிணி பெண்களின் உடல் சூடு அதிகளவில் வெளிப்படும், வேப்பிலையின் மருத்துவம் அறிந்த நாம் அவற்றை சாமி என்றும் வணங்குகின்றோம்...!!!
5) சாணி தெளித்து அரிசி மாவில் கோலம் இடுதல், சாணியை கரைத்து அடுப்பு புடையை பூசுதல், வீட்டு தூண்களில் மஞ்சள் குங்குமம் பூசுதல், வீட்டின் வாசற்படி கொல்லையில் வேப்பமரம், துளசி செடி வைத்தல், கதவு கைப்பிடிகளில் மஞ்சள் கொண்டு பொட்டு வைத்தல்...!!! போன்றவை எல்லாம் சாமி அல்ல... இவையாவும் தமிழரின் அறிவியல் மருத்துவமே... சில படித்த முட்டாள்கள் இவற்றை மூடநம்பிக்கை என்றும் அறிவில்லாத்தனம் என்றும் புறக்கணித்து ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து திரிகிறார்கள்...!!!
6) தண்ணீர் அதிகம் குடிக்க சொல்வது தாகம் தீர அல்ல, உடலின் 75% தண்ணீர் இருக்கிறது தண்ணீர் உடலுறுப்புகளை சுத்தம் செய்கிறது, அதிகாலையில் பழைய சோறு நீர் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது ஆயுள் அதிகரிக்கும் என்று வெள்ளைக்காரன் இப்போது விளம்பரம் செய்கிறான்...!!!
7) தரையில் சம்மணம் போட்டு சாப்பிட சொல்வது கேவலம் அல்ல...!!!
தரையில் அமருவது ஒருவகை யோகாசனம், முதுகெலும்பு நேர்கொண்டு வயிறு விரிய உதவிடும் ஆதலால் நீங்கள் சாப்பிடும் உணவு திகட்டாது உணவின் ருசி மூலைக்கு சென்று அதை நம்மை உணர வைக்கிறது,
குச்சிப்பாய்/கோரப்பாயில் படுத்துறங்க சொல்வது...!!!பாய் உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது, கல்வி கற்கும் சிறு பிள்ளைகள் பாயில் உறங்குவது இளம் வயது கூன்முதுகுவிளாது, கர்ப்பிணி பெண்கள் பாயில் படுத்துறங்குவது இடுப்பு எலும்பு விரிந்து சுகபிரசவத்திற்கு உதவிடுகிறது, ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது குஷன் பெட், பஞ்சு மெத்தை யாவும் குச்சிப்பாய்கு ஈடாகாது,
9) பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள், அடுப்பு சாம்பல் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள்/தேரைகள் வாழ்ந்தன, வீட்டினுள் தவளை வந்தால் அதை கொல்லவேண்டாம் பிடித்து வெளியே விட்டுவிடு என பெரியோர்கள் சொல்வார்கள் அது ஏன் தெரியுமா???
தவளை மனிதனின் மருத்துவன், ஒரு தவளை ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை உண்டு மனிதனை காலரா/டெங்கு/காய்ச்சல், போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றும், ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் புதர்கள், குட்டை, குளங்கள், காடு, கரைகளை எல்லாம் நாம் ஒழிக்க .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை...
10) உலகிலேயே மட்டமான சமையல் எண்ணெய் எது தெரியுமா???
"சூரியகாந்தி எண்ணெய்தான், டிவி,யில் மணிக்கொரு முறை விளம்பரம் போட்டு நம்மை முட்டாளாக்கிவிட்டனர், "சூரியகாந்தி" எண்ணெய்யில் எந்த புரத நார் சத்துக்களும் கிடையாது,
11) வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலிக்கு கடலை/நல்லெண்ணையே ஊர வைத்த வெள்ளை துணியை கொண்டு வலிக்கும் அந்த இடத்தில் கட்டிக்கொள்வார்கள் அது ஏன் தெரியுமா???
12) கைக்குழந்தை அதிகமாக அழும்போது அதன் தொப்பிளில் நாளு சொட்டு நல்லெண்ணை விடுவார்கள் அது ஏன் தெரியுமா???
13) நெஞ்சு சளி அதிகமாக இருக்கிறது என்றால் கர்பூரத்தை சூடு ஆக்கி வெற்றிலையில் தடவி நெஞ்சில் வைப்பார்கள் அது ஏன் தெரியுமா???
இவையெல்லாம் மருத்துவம் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டவை... சிலர் இவற்றை சாமி என்பார்கள்... அதாவது நல்லது செய்பவை யாவும் சாமி என்று பொருள்...
இயற்கையை மறந்து செயற்கையாய் கொசுவர்த்தி Allout எனில் வாங்கி... மஞ்சள்காமாலை, காலரா, டெங்கு காய்ச்சல்... போன்ற நோய்களை மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
நாம் இயற்கையை அழித்தல் இயற்கை நம்மை அழித்துவிடு...
இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே...
இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை மிஷின் வாழ்க்கை மனிதனை கொன்றழிக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
இயற்கை மருத்துவம்