Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உலகம் சபிக்கும் உன்னத கண்டுபிடிப்பு - ரிமோட் கண்ட்ரோல்...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: உலகம் சபிக்கும் உன்னத கண்டுபிடிப்பு - ரிமோட் கண்ட்ரோல்... (Read 14 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225494
Total likes: 28424
Total likes: 28424
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
உலகம் சபிக்கும் உன்னத கண்டுபிடிப்பு - ரிமோட் கண்ட்ரோல்...
«
on:
October 10, 2025, 08:20:39 AM »
இறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய 93வது வயதில் இயற்கை எய்திய ராபர்ட் ஆட்லரை விமர்சனத்தின் சாயல் இல்லாமல் குறிப்பிட முடியாது.
இன்னும் சிலரோ சபித்தபடியே தான் அவரைப்பற்றி பேசுவார்கள். ஆனாலும் அந்த சபித்தல் கூட ஒருவித பாராட்டாகவே அமைவதை மறுப்பதற்கில்லை. வெறுப்பாக இல்லாமல் அவரது கண்டுபிடிப்பின் தாக்கத்தை அங்கீகரிக்கக்கூடிய சான்றிதழாகவே இத்தகைய சபித்தலையும் கருத வேண்டியிருக்கிறது.
ஆட்லரைப்பற்றி சொல்லாமல் அவரது கண்டுபிடிப்பை குறிப்பிட்டு விட்டால், இந்த பீடிகைக்கான அவசியம் உடனே புரிந்துவிடும். ஆட்லர் புகழ்பெற்ற கண்டு பிடிப்பாளர் என்று சொல்ல முடியா விட்டாலும் அவருடைய கண்டு பிடிப்பு மிகவும் புகழ் பெற்றது. நம் ஒவ்வொருவர் கையிலும் இருப்பது. வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மனதுக்குள் இருக்கும் மந்திரக் கோலாகவே நாம் நினைத்துக் கொண்டிருப்பது.
வெவ்வேறு உலகத்தில் நினைத்த மாத்திரத்தில் சஞ்சரிப் பது போல விரும்பியவுடன் சானல் விட்டு சானல் தாவ வழி செய்யும் ரிடோட் கண்ட்ரோல் தான் அந்த கண்டுபிடிப்பு. ஜெனித் எலக்ட்ரானிக் கார்ப்பரே ஷன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1956ம் ஆண்டு ஆட்லர் ரிமோட் கண்ட் ரோலை உலகுக்கு அறிமுகம் செய்து டிவி நிகழ்ச்சிகளை இஷ்டம்போல மாற்றிக்கொள்வ தற்கான வழியையும் காண்பித்து வைத்தார். பௌதீகத்தில் இளம் வயதிலேயே டாக்டர் பட்டம் பெற்ற ஆட்லர், மிகுந்த ஈடு பாட்டோடு அறிவி யல் சார்ந்த ஆய்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவர். அதன் பலன்தான் இந்த கண்டுபிடிப்பு.
கர்ணனோடு பிறந்த கவச குண்டலம் போல டிவியுடன் உடன் பிறந்ததாகவே ரிமோட் கண்ட்ரோல் மாறி விட்டது. ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் டிவி பார்ப்பது இன்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சாமானியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்று ஜனநாயக பாதுகாவலர்கள் எல்லாம் வாய் கிழிய பேசுவார்கள் அல்லவா, அதனை உள்ளபடியே சாதித்துக் காட்டியது ரிமோட் கண்ட்ரோல்தான். பிடிக்காத சானலை மாற்றுவது, விளம்பரங்கள் வலை வீசும் போது தப்பித்து வேறு சேனலுக்கு ஓடுவது என உட் கார்ந்த இடத்திலிருந்தே சானல் விட்டு சானல் மாறும் சுதந் திரத்தை ரிமோட் கண்ட்ரோல் வழங்கி இருக்கிறது. இந்த சுதந்திரத்தின் காரணமாக குடும்ப உறுப்பினர்களிடையே கட்டிப்பிடித்து சண்டை போடாத குறையாக மோதல் ஏற்பட்டிருப்ப தும் ஏற்கனவே சோம்பேறிகளான நம்மை சோபாக்களிலேயே கட்டிப்போட்டிருப்பதும் இதன் பாதகமான பக்க விளைவுகளாக அமைந்து விட்டன. இடியட்பாக்ஸ் என்று இகழப்படும் டிவி முன்பாக சாய்ந்து கிடக்கும் சோம்பல் மனிதர்களான கவுச் பொட்டேட்டோ (தமிழில் சொல்வதானால், சோபா உருளைக் கிழங்கு சிந்தனையோ, செயலோ இல்லாமல் சோபாவிலேயே உரைந்து கிடக்கும் மனிதர்களுக்கு இந்த பட்டம் பொருத்தமானது தானே) மாந்தர்களை உருவாக்கி சமூகத்தை சீரழித்து விட்டதாகவும் ரிமோட் கண்ட்ரோலை பழிக்கலாம்.
அந்த காரணத்துக்காகவே அதனை கண்டுபிடித்த பிரம்மாவான ராபர்ட் ஆட்லரையும் இகழலாம். இங்கே இரண்டு ஸ்வாரசியமான விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஆட்லர் இந்த இகழ்ச்சிகளை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ரிமோட் கண்ட்ரோல் பற்றி உலகம் என்ன நினைத்தாலும் சரி ஆட்லர் அதனைப் பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் நம் கவனத்துக்கு உரியவை. ஆட்லரின் எண்ணங்களையும், ரிமோட் கண்ட்ரோல் பின்னே உள்ள சுவாரசியமான கதையையும் ரிமோட் கண்ட்ரோலை கண்டு பிடித்ததற்காக குற்ற உணர்வு வாட்டியதில்லையா என அவரிடம் கேட்கப்பட்ட நேரங்களில் அவர் சிரித்தபடி இதென்ன மடத்தனமான கேள்வி. உட்கார்ந்த இடத்திலிருந்து விரும்பிய வகையில் டிவி பார்ப்பதற்கான வழியை கண்டுபிடித்திருக்கிறேன். அதில் என்ன வருத்தம் என்று பதில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஆட்லர், புத்தகம் படிப்பதில் பேரார்வம் கொண்ட புத்தகப்புழு. கடைசி வரை டிவி நிகழ்ச்சிகளைஅதிகம் பார்க்காத புத்தகப்பிரியராகவே அவர் இருந்ததாக ஆட்லரின் மனைவி குறிப்பிடுகிறார். இரண்டாவது விஷயம், தன்னை ஒரு பிறவி கண்டுபிடிப்பாளனாக கருதிய அவர், ரிமோட் கண்ட்ரோலை தன்னுடைய மிகச்சிறந்த படைப்பாக ஒருபோதும் கருதியதில்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்கு வதற்கான ஆய்வில் முழு ஆர்வத் தோடு ஈடுபட்ட ஆட்லர், ரிமோட் கண்ட்ரோலை மற்றுமொரு கண்டு பிடிப்பாக பார்த்தார்.
எப்படி பார்த்தாலும், ரிமோட் கண்ட்ரோலின் வரலாறு கொஞ்சம் சுவாரசியமானது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருக்கும் பொருளை இயக்கும் முறையானது, முதலில் ராணுவத்தில்தான் பயன்படுத்தப்பட்டது. உலகப்போர் காலத்தில் இத்தகைய சேவைக்கு தேவை இருந்தது.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, ராணுவம் அல்லாத துறைகளி லும் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கலாயினர். 1950களில் தொலைக்காட்சியை இயக்க இந்த முறை பயன்படுமா? என முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக முதன் முதலில் உருவாக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் ஒரு சூட்கேஸ் அளவுக்கு இருந்தது என்பதை இப்போது கற்பனை செய்து பார்க்க முடியாது. அது மட்டுமல்ல, அந்த சூட்கேசுடன் தொலைக் காட்சி பெட்டிக்கு இணைக்கப் பட்டிருந்த ஒயர் மூலமே அதனை இயக்க முடிந்தது. இந்த முறையை பலர் வரவேற்றாலும், அடிக்கடி தடுக்கி விழ வேண்டியிருக்கிறது என்று குறை கூறினர். ஒயரிலிருந்து விடுவித்து ஒயர்லஸ் மூலமாக இயங்கும் பிளாஷ் மேட்டிக் என்னும் ரிமோட் கண்ட்ரோலை யூஜின் பாலி என்பவர் 1955ம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்த பாலி வேறு யாரும் அல்ல, ஆட்லரின் சகாதான். இவரோடு இணைந்து ரிமோட் கண்ட்ரோலை கண்டு பிடித்தவர் என்று ஆட்லர் குறிப்பிடப்படுகிறார். காரணம், இவர் உருவாக்கிய பிளாஷ்மேட்டிக் ரிமோட் கண்ட்ரோலில் இருந்த குறைகளையெல்லாம் களைந்து தற்போதைய ரிமோட் கண்ட்ரோலின் முன்வடிவத்துக்கு வித்திட்ட மாய கோலை வடிவமைத்ததுதான் ஆட்லரின் சிறப்பு. பாலியின் கண்டுபிடிப்பு போட்டோ எலக்ட்ரிக் செல்களின் அடிப்படை யில் இயங்கியது. இதன் காரணமாக சூரிய ஒளியும் அதன் செயல்பாட்டில் குறுக்கிட்டது. எனவே ரிமோட்டை இயக்க தகுந்த மாற்று வழி தேவைப்பட்டது. இந்த நிலையில் தான் ஆட்லர் பல்வேறு முறைகளை பரிசோதித்து விட்ட அல்ட்ரா சானிக் ஒலிகள் மூலம் இயங்கும் ரிமோட் கண்ட்ரோலை கண்டுபிடித்துக் கொடுத்தார்.
இந்த ரிமோட் கண்ட்ரோலில் பட்டனை அழுத்தியதுமே அதில் உள்ள சின்னஞ்சிறு சுத்தியல் முரசு அடிப்பது போல அலுமினிய முரசுகளின் மீது மோதி, ஒலிகளை உண்டாக்குகிறது. இந்த ஒலி விரைந்து சென்று டிவியில் உள்ள விசைகள் மீது பதிந்து அதனை இயக்குகிறது. அல்ட்ரா சானிக் அலைவரிசையை சேர்ந்தது என்பதால் இந்த ஒலிகள் நம் காதில் விழுவதில்லை. ஆட்லரின் ரிமோட் கண்ட்ரோலில் மற்றொரு சுவாரசியமான விஷயம். அதில் பேட்டரி கிடையாது. பின்னர் உருவான ரிமோட் கண்ட்ரோல்கள் தான் பேட்டரியால் இயங்கத் தொடங்கின.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உலகம் சபிக்கும் உன்னத கண்டுபிடிப்பு - ரிமோட் கண்ட்ரோல்...