Author Topic: அத்தி மரத்தின் மகிமைகள்...  (Read 39 times)

Offline MysteRy


நம்முடைய வரலாற்றில், கலாச்சாரத்தில் அத்தி மரத்திற்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அத்தி மரத்தில் செய்யப்பட்ட விஷ்ணு சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் 12 வருடத்திற்கு ஒருமுறை இழுப்பது என்பது உள்ளது. ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம்.

மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி. அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், 'கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும்' என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் இதுபோன்ற பழமொழி உண்டு. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.

கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும். இதுபோன்ற அமைப்புகள் உண்டு.

அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு.

அதன்பிறகு, அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.

அடுத்து, ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி. பூமிக்கு அடியில் நீரூற்று, நீரோடை குறைந்த அடிகளில் இருக்கும் என்ற ஐதீகமும் உண்டு. இதனை நாங்கள் பரிசோதித்தும் பார்த்திருக்கிறோம்.

அத்திப் பழத்தில் செய்த சிலவற்றை எல்லைத் தெய்வங்களுக்கு, சக்தி பீடங்கள் என்று சொல்வார்களே காஞ்சி காமாட்சி, ஆதிசங்கரர் செய்த சக்தி 108 சக்தி பீடங்களில் உள்ள அம்பாளுக்கு நெய் வேத்தியமாக அதனை பயன்படுத்துவார்கள். அத்தி பழத்தில் அடை மாதிரி தட்டி அதனை நெய் வேத்தியத்திற்குப் பயன்படுத்துவார்கள். இதுபோன்று அம்பாளுக்கு வைப்பதன் மூலம் நிறைய சக்தி கிடைக்கும் என்பது போன்றும் உண்டு.

அடுத்து, மதுரையில் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்களே, அது இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்தது. சரியானதா, தகுதியானதா, தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும், இல்லையென்றால் மூழ்கிவிடும். இதுபோன்ற தெய்வீகச் சக்தி உடையதும் இந்த அத்தி.

இதில் அத்திப்பூ பூப்பதே தெரியாது. அதனால் அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும். ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும். குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும்.

அதேபோல, அத்தி மரப்பலகையில் உட்கார்ந்து சில செயல்கள் செய்தால் அந்தச் செயல் நீடிக்கும். தோஷங்கள் நீங்குவதற்கு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள். அதைவிட அத்தி இலை கொடுத்தால் மிகவும் விசேஷம். எல்லா தோஷமும் நீங்கும். அத்திப் பழத்தைச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முடி வலுவடைந்து வளர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகளையும் நீக்கும். விட்டமின் ஏ, பி, சி, டி என்று எல்லாமே இருக்கிறது. அதனால் அத்தி மரம் என்பது அவ்வளவு விசேஷமான மரம்.

அதனால் அத்தி மரத்தை நட்டு, அதைப் பராமரித்து அதில் கிடைக்கக் கூடியதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு வந்தால் அது நல்லது. தவிர, தோஷ நிவர்த்தியாகவும் அது இருக்கிறது. கணவன், மனைவி பிரிந்தவர்களையும் அது சேர்க்கும். எல்லா வகையிலும் பலமானதாக இருக்கும். இதுபோன்ற அமைப்புகள் இதற்கு உண்டு. உடல்நலம் நன்றாக இருக்கவும், நீண்ட காலம் நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ்வதற்கு பழங்கள் போன்ற சத்துமிக்க இயற்கை உணவு வேறெதுவும் இருக்க முடியாது. எண்ணற்ற வகையான பழங்கள் விளைகின்ற நமது நாட்டில், சாப்பிடுபவர்களுக்கு பல விதமான உடல் நோய்கள் பாதிப்புகளை நீக்கும் ஒரு பழமாக "அத்திப்பழம்" இருக்கிறது. இந்த அத்திப்பழத்தை ஜூஸ் போட்டு அருந்தினாலும், உலரவைத்து வத்தல் பதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். அந்த அத்திப்பழத்தினால் கிடைக்கும் பலவகையான நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

அத்திப்பழத்தின் பலன்கள்:
------------------------------------

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் நல்லது.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.

பயன்கள்:
--------------

அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

அத்திப் பழத்தின் சத்துகள்:
------------------------------------

அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தியின் மருத்துவப் பயன்கள்:
-------------------------------------------

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம். அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

நீரழிவு குணமாகும்:
---------------------------

அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.

அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

மூலம்:
----------

மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் நூலாம் விரைவில் குணமாகும்.

எலும்புகளை வலிமையாக்கும்:
------------------------------------------

ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்.

இதய நோய்கள்:
----------------------

நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.

மலச்சிக்கல்:
-----------------

உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். மலச்சிக்கல் நீங்கும். 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாடம் தேவைப்படும் நார்ச்சத்துக்களின் அளவுகளில் 20 சதவீதத்தைத் தருகிறது. எனவே இவற்றை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும்.

கொலஸ்ட்ரால்:
---------------------

உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர். இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

உடல் எடை குறையும்:
----------------------------

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உணவில் இருக்கும் கொழுப்பு, உடலில் சேராமல் தடுக்கப்படுகிறது. அந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே அதை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது. அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் மட்டுமின்றி, கலோரிகள் குறைவு. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை ஸ்நாக்ஸாக உட்கொள்வது நல்லது.

இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம்:
--------------------------------------------------

அத்திப்பழம் மிகவும் சிறப்பான ஓர் பாலுணர்வைத் தூண்டும் பழம். மேலும் அத்திப்பழம் கருவுறும் திறன் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு காரணம், அதில் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

புற்று நோய்:
-----------------

அத்திபழங்கள் மற்ற எல்லா பாதிப்புகளையும் விட வயிற்றில் ஏற்படும் புண்கள், அமில சுரப்பு குறைபாடுகள் போன்ற்வற்றை சரி செய்வதில் சிறந்த செயலாற்றுகிறது. பெருங்குடலில் தங்கியிருக்கும் சில நச்சுக்களால் நாளளவில் பெருங்குடலில் புற்று நோய் ஏற்பட காரணம் ஆகிறது. அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகி, குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

இரத்த சோகை:
---------------------

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தின் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 2% கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

ரத்த அழுத்தம்:
--------------------

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் பல வகையான உப்புகள் கலந்திருக்கின்றன. அதில் சோடியம் உப்பின் அளவு அதிகமாகவும், பொட்டாசியம் உப்பின் அளவு குறைவாகவும் இருக்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரும் நபர்களுக்கு ரத்தத்தில் இந்த உப்புகளின் அளவு சமநிலை பெற்று ரத்த அழுத்தம் பாதிப்புகளை குறைகிறது.

உடல் பலம்:
----------------

உடலில் சிலருக்கு வலுவில்லாமல் இருப்பதால் எத்தகைய வேலைகளிலும் அதிக நேரம் ஈடுபட முடியாமல் போகிறது. உடல் பலம் பெற நினைப்பவர்கள் தினமும் இரவில் பசும்பாலில் சில காய்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்து காலையில் அப்பழங்களை சாப்பிட்டு அப்பாலை அருந்தினால் உடல் பலம் பெற தொடங்கும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகளும் நீங்கும்.

கல்லீரல்:
-------------

மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்க சில அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்த பின்பு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.

கண்பார்வை:
------------------

நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் அத்திப்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே அத்திப்பழங்களை வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.

அழகான சருமம்:
----------------------

தினமும் அத்திப்பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால், அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம்...