Author Topic: முருங்கை_விதைகள்_இருந்தால்_போதும்.... எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால்சியம் பிர  (Read 13 times)

Offline MysteRy


வயதாக ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனைகளும் வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எழுந்து நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள்.
முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எலும்பு தேய்மானமும், கால்சியம் பிரச்சனையும், மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.
இதனை தவிர்க்க முருங்கை விதைகளை பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.

தேவையான பொருட்கள்:

1. முருங்கை விதை- 5 g

2. நெய் 1 ஸ்பூன்

3. பால்- 1 டம்ளர்

4. நாட்டு சர்க்கரை

செய்முறை:

முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளிலிலோ அல்லது மிகவும் முற்றிய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துகொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
இத்துடன் ஒரு டம்ளர் அளவிற்கு பால் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

சத்து குறைபாட்டால் தலை சுற்றுதல், மற்றும் கண் பிரச்சனை, கண் மங்குதல் கால்சியம் குறைபாடு, மூட்டு வலி, எலும்பு பிரச்சனை, எலும்பு தேய்மானம், கால் வீக்கம், கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும். நரம்பு மண்டலத்தை வலுவாகி உடலை பலப்படுத்தும்...