Author Topic: உளுந்தின் மருத்துவபயன்கள்...  (Read 13 times)

Offline MysteRy


உடம்பை தெம்பாக வைக்க, உடல் சோர்வு நீங்க, இதை சாப்பிடுங்க!!!

உளுந்து மிகவும் முக்கியமான உணவு. பல்வேறு நோய்களை எதிர்க்கும் சக்தியை கொண்டது.

உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உளுந்து உணவை உட்கொள்ளுவதால் உடல் வலிமை பெறும்.

உளுந்து கஞ்சி சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும். நரம்புகளை வலிமையானதாக்கும்.

நமது உடல் அதிக சூடு ஏற்பட காரணம் அதிகமான வேலை, அதிக பயணங்கள் தான் காரணம். அதனால் நமது உடல் பயனற்று காணப்படும். முக்கியமாக சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் உடல் சோர்வு அடையும்.

உளுந்தை களி செய்தும் சாப்பிடலாம். உளுந்து, வெந்தயம், பச்சரிசி, பனை வெள்ளம் ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் உடலில் காணப்படும் சூடு நீங்கும்.

உளுந்துடன் தேன் கலந்து சாப்பிட நரம்பு தளர்வு நீங்கும்...
#fblifestyle #tamilfoods

ஆண்மை குறைவு உள்ளவர்கள் உளுந்து மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம். உடனே சரியாகும்...