Author Topic: மனித வயிறு எனும் மெஷின்...  (Read 349 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226455
  • Total likes: 28876
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மனித வயிறு எனும் மெஷின்...
« on: September 26, 2025, 07:46:34 AM »

நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை... ஆனால் நாம் அவசர அவசரமாக கொஞ்சம் கூட மெல்லாமல் முழுசு முழுசா முழுங்குற எல்லாத்தையும் இந்த வயிறு பெர்பக்ட்டா அரைச்சு வெளியே தள்ளுதே எப்படினு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா...?

உணவை ஜீரணம் செய்வதற்க்காகவே வயிற்றில் இயற்கையாகவே HCL ஆசிட் சுரக்கிறது. அந்த ஆசிடில ஒரு சேவிங் பிளேடை போட்டால் கூட அது கரைந்து போய்விடும். அந்த அளவுக்கு பவர் புல்லான ஆசிட் அது. வயிற்றில் சுரக்குற HCLலுக்கும் கெமிக்கல் லேப்ல இருக்குற HCLக்கும் ஒரே வேதியியல் வாய்ப்பாடு தான், ஒரே குறியீடு தான், ஒரே பண்புகள் தான். ஆனால் லேப்ல இருக்குற HCL ல்ல வயித்துகுள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகும்னு தெரியுமா?

வயிறு, குடல் பூரா வெந்து போய்டும். ஏன்னா வயித்துல சுரக்குறது Bio அமிலம்... லேப்ல தயாரிச்சது உயிர்ச்சத்து இல்லாத கெமிக்கல்.
இதே மாதிரி தான், உடம்புல விட்டமின் இல்ல, புரோட்டின் இல்ல, கால்சியம் இல்ல, மக்னீசியம் இல்ல. அப்படின்னாலும் அதை உணவு வழியா தான் உடம்புக்கு கொடுக்கனுமே தவிர, பன்னாட்டு மெடிக்கல் மாபியாக்கள் தயாரிக்கும் ஆய்வக மருந்து மாத்திரைகள் மூலமாக அல்ல. அப்படி லேபில் தயாரித்த மருந்து மாத்திரை தின்றால் என்ன ஆகும்னா... லேபில் தயாரிச்ச HCL ஆசிடை ஒரு ஊசி வழியா வயித்துக்குள்ள இன்ஜக்ட் செய்தால் என்ன ஆகுமோ அதே தான் ஆகும். ஆசிட் அதோட தீவிரத்தால உடனே குடலை வேக வைத்துவிடும்... இந்த மருந்து மாத்திரைகள் மெதுவாக , அலுங்காமல் குலுங்காமல் உங்கள் குடலை காலி பண்ணிடும். அப்பறம் ஒரு அஞ்சு ஆறு வருசம் கழிச்சு One Fine day உங்களுக்கு இத்தனை நாள் மருந்து மாத்திரை எழுதி கொடுத்த அதே டாக்டர் சொல்லுவாரு...

"தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டதால உங்க குடல் புண்ணாயிடுச்சு, ஒரு வேளை கேன்சரா கூட இருக்கலாம், எதுக்கும் ஒரு பயாப்சி பண்ணி சென்னை லேப்க்கு அனுப்பி செக் பண்ணிடலாம்னு"...

அப்பறம்...?

அப்பறம் என்ன?
அதே டாக்டர், கீமோ தெரபின்ற பேரில் மறுபடி உங்கட்ட காஸ்ட்லியான மருந்து மாத்திரைகள விற்க்க ஆரம்பிப்பாரு. இதுக்கு மேல என்ன நடக்கும்னு நான் சொல்ல முடியாது. நீங்களே யோசிச்சு பாருங்க. உங்க பக்கத்து வீட்டுல, சொந்த பந்தம் வீட்டுல இது நடக்குதா இல்லையா என்று கவனியுங்கள்.

மருந்து மாத்திரைகளை புறக்கணிங்கள்.. பசித்தால் மட்டும் உண்ணுங்கள். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துங்கள் (காய்ச்சல் சளி இருமல் தொந்தரவுகள் இருந்தால் மட்டுமே லேசான சூட்டில் வெந்நீர் அருந்த வேண்டும்)

உடலுக்கு தேவையான ஓய்வு அளியுங்கள். உறக்கம் வருகையில் உறங்குங்கள், குறிப்பாக இரவில் நீண்ட நேரம் விழித்து இருக்காதீர்கள். பழங்கள், காய்கறிகள், கீரைகள் நிறைய எடுத்து கொள்ளுங்கள்.
பழச்சாறு, சூப், தண்ணீர் நிறைய குடியுங்கள். நிதானமான மனநிலையில் உங்களை வைத்திருங்கள்.

நோய்கள் நிச்சயம் குணமாகும், உடல் கண்டிப்பாக மீண்டு வரும். அதற்கான சக்தி உடலுக்கு தரப்பட்டுள்ளது.
இது நம்புங்கள் நடக்கும் என்கிற பூச்சாண்டியெலாம் கிடையாது. நம்பிக்கையே இல்லாமல் மேலே சொன்னவற்றை பின்பற்றினாலும் குணமாதல் நிச்சயம். ஏனெனில் இந்த ஆங்கில வணிக மயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளின் வயது வெறும் 150 ஆண்டுகள் தான் ஆனால் மேலே சொன்ன முறைகளின் அடிப்படையில் தான் மனித சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக நோய்களிலிருந்து மீண்டு வாழ்ந்து வந்துள்ளது என்பதே இதற்கு சாட்சி.