Author Topic: ஹலோ நான் பாங்க் மேனேஜர் பேசறேன்..  (Read 256 times)

Offline MysteRy


வணக்கம் சார்..

வணக்கம் சார்... நீங்க என்ன பண்றீங்க?

விவசாயம்.

பேங்கிலே வரவு செலவு வைக்கறது உண்டா?

ஓ உண்டே...

உங்க கிட்டே ATM கார்டு இருக்கா?

என்னா மேனேஜர் நீங்க போங்க.. அது இல்லாமல் வரவு செலவு இந்த காலத்திலே பிச்சைகாரன்கூட செய்ய முடியறதில்லை..

அதை கையிலே எடுத்து வச்சிக்குங்க..

சரி எடுத்துட்டேன்.

அதிலே மேலே 16 நம்பர் பெரிய எழுத்திலே இருக்குமே? அதை சொல்லுங்க.

16 ம் நம்பரை காணும்ங்கோ?

16 ஆம் நம்பரில்லை, 16 இலக்க நம்பர்.

நம்பர்லே என்ன இலக்கணம் வரும் சாமி? நானும் ஏழாப்பு வரை படிச்சிருக்கோம்லே?

சரி கார்டு கையிலே இருக்கா?

இதிலே உள்ளே பஸ் டிக்கட் தான் இருக்குங்கோ.

கார்டுகுள்ளே எப்படி சார் பஸ் டிக்கட் வரும்?

இது ஏடிஎம் கார்டு கவருங்க.

ஏன் சார் என் வேலையெல்லாம் விட்டு போட்டு உங்க அக்கவுண்ட் பக்கத்தை கம்பியூட்டர்லே ஓபன் பண்ணி உட்காந்து இருக்கேன். நம்பர் சொல்லுன்னா கவர் தான் இருக்கு சொல்றீங்க?

அது வந்துங்க பெருமாள் தான் இந்த ஏடிஎம் விவகாரமெல்லாம் பார்ப்பான் அவன் தான் டவுனுக்கு எடுத்துட்டு போனான்.

பெருமாள் எங்கேங்க?

அவரு பெரிய படிப்பு படிக்கிறாருங்கோ. என் மவன் தான். பிளஸ் டூ டவுன்லே படிக்கிறாருங்க.

நீங்க எங்கே இருக்கீங்க?

நான் தோட்டத்திலே தண்ணி பாய்ச்சிட்டு இருக்கேன் சாமி.

பக்கத்திலே யாரும் இல்லையா?

எங்க வூட்டு எருமை மாடு இருக்குங்கோ. அது பால் சரியா கறக்க மாட்டுதுங்க . மாட்டாஸ்பத்திரி போகணுங்க.

ஏங்க நான் என்ன கேட்கறேன் நீங்க என்ன சொல்றீங்க?

சாமி நீங்க தானே கேட்டீங்க பக்கத்திலே யாருமில்லையான்னு ?

படிச்சு சொல்ல யாருமில்லையா கேட்டேன்.

ஏங்க நான் எவ்வளவு விவரமா பதில் சொல்றேன். அது மாதிரி நீங்க கேட்க வேண்டாமா? அடுத்து எருமை மாடு எத்தனாங்கிளாஸ் வரை படிச்சிருக்குன்னு வெவரங்கெட்ட தனமா கேள்வி கேட்காதீங்க.

டீக்கடை எவ்வளவு தூரத்திலே இருக்கு?

அது ரோட்டடியிலே இருக்கு. நானு தோட்டடத்திலேயே டீ போட்டு குடிச்சிருவேன். பெருமாள் தான் டவுன்லே இருந்து வரும் போது டீக்கடை டீ குடிப்பான்.

வரவு செலவு எவ்வளவு செய்வீங்க?

எவ்வளவு வருதோ அவ்வளவு செலவு செய்வேங்க. இப்போ லோன் போட்டிருக்கேன். உங்க பாங்கிலே தானுங்க. அதா சுதா அம்மா தான் எழுதி குடுத்துச்சே? அதை கேளுங்க.

சுதா இன்னிக்கு லீவு போல.. கவுண்ட்ர்லே இல்லை. அதனாலே நீங்க சொல்லுங்க.

நாங்க கவுண்டர் தான் சாமி.

ஏங்க நான் அதையா கேட்டேன்?

நான் எவ்வளவு வரவு செலவு பண்றேன்னு கேட்டீங்க.

அதைச் சொல்லாம வேற என்னமோ சொல்றீங்க?

என் நம்பரில்லாமல் கம்பியூட்டர்லே என் பக்கத்தை ஓபன் பண்ணி இருக்கீங்க அதிலே எவ்வளவு வரவு செலவு தெரியாதுங்களா?

இவ்வளவு வெவரமா பேசறீங்க 16 நம்பரை படிச்சு சொல்ல மாட்டேங்கறீங்க?

நீங்க தானே சொல்லி குடுத்தீங்க?

என்ன சொல்லி குடுத்தோம்?

களவாணி பயலுக போன் போட்டு உன் பேங்க ஏடிஎம் நம்பர் கேட்பான் சொல்லிடாதீங்கன்னு.

😳😳😳😳😳
ஆளை விட்றா சாமி...
🙏🙏🙏

Offline Vethanisha

😂😂 ithu konjam vithiyasama than irukkunga 😂

Offline MysteRy

Vethanisha Sistaa ahaan