முப்பருவங்களின் சங்கமம்
கட்டுப்பாடுகள் பல உண்டு..
சாது மத பேதம் அறியா நல்லுள்ளம் கொண்டு..
களைப்பின்றி ஓடி திரிந்தே,
கவலைகள் இன்றி கதைகள் பல பேசி,
வாழ்வின் சுமையறியாது புத்தக சுமை மட்டுமே அறிந்த ,
மழலை பருவம் கடந்தேன்..
காதல் கலந்த மனதும் உண்டு..
சமூகத்தின் மடமையை எதிர்க்கும் துணிவும் உண்டு ..
துடிப்பும் ,துள்ளலும் நிறைந்த..
ஆர்வமும் கனவுமே உருவான..
மழழை கோலம் களைந்து இளமை பூண்ட மங்கை பருவமும் கடந்தேன்..
இன்று இளமைக்கோலம் உதிர்ந்து போக...
சுருக்கம் கொண்ட கைகளும், பொக்கை வாய் சிரிப்பும்
முதுமையினை பறைசாற்ற..
நெஞ்சம் நிறைந்த அன்பின் வடிவமாக..
அமைதியும் அனுபவமும் உருவாக..
நீயின்றி துணையேது.. என தோள் சாயும் முதுமை பருவம் காண்கின்றேன்..
பருவங்கள் பல மாறலாம்..
கோலங்கள் பல காணலாம்..
இன்றைய பொழுதை ரசித்து வாழ்வதே..
மானிடராய் பிறந்ததின் அர்த்தமாகும் என உணர்கிறேன்..