Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா? (Read 3 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224752
Total likes: 28279
Total likes: 28279
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
«
on:
Today
at 08:19:50 AM »
நாம் ரயிலில் பயணிக்கும் போது ரயிலின் ஹாரன் சத்தம் நம் காதை பிளக்கும். இப்படியான ரயிலின் ஹாரன் சத்தத்திற்குப் பின்னால் உள்ள அர்த்தம் என்ன? மொத்தம் எத்தனை விதமான ஹாரன் சத்தங்கள் இருக்கிறது?
நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது ரயிலில் பயணித்திருப்போம் ரயில் பயணம் என்பது மிக வித்தியாசமான சுகமான அனுபவத்தைத் தரக்கூடியது. இதுவரை ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்ற ஒரு மனிதன் இருந்தால் அவர் துரதிருஷ்டசாலி தான். ரயில் பயணம் ஏழைக்கு ஏற்ற சுகமான பயணமாக இருக்கும். இந்த ரயிலைக் கண்டாலே ஒரு பிரம்மாண்டம் தான்.
மிகப்பெரிய இன்ஜின் நீளமான பெட்டிகள், அதிக சத்தம் என எல்லாமே பெரிதாக இருக்கும் இந்த ரயிலில் பிரம்மாண்டத்திற்குப் பஞ்சம் ஏது? இப்படிப்பட்ட ரயிலில் பயணிக்கப் பல விதிமுறைகள் உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி, ஏசி பெட்டிகள், எல்லாம் உள்ளன. இந்த ரயிலில் பயணிக்கும் போது நாம் நடுவில் உள்ள பெட்டியில் பயணிக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். காரணம் இறங்கும் இடத்திற்கு அருகில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே செல்லும் பாதை இருக்கும் அதே நேரம் இன்ஜினின் சத்தமும் இருக்காது.
இன்ஜினிற்கு பின்னால் உள்ள பெட்டியில் இருப்பவர்களுக்கு இன்ஜின் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். அடிக்கடி ரயில் டிரைவர்கள் ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ரயிலில் ஹாரன் அடிப்படி ரயில்வே டிராக்கில் இருக்கும் மனிதர்கள், விலங்குகள், தண்டவாளங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு ரயில் வருவதை எச்சரிக்க என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது தான் இல்லை. ரயில்வே ஓட்டுநர்கள் இந்த ஹாரனை தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். இதற்காக மொத்தம் 11 வகையான ஹாரன் சத்தங்கள் ஒரு ரயில் ஓட்டுநருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிய நேரத்தில் அவர் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாற இதைப் பயன்படுத்துவார் அந்த 11 ஹாரன் சத்தங்கள் என்ன? அது என்ன தகவலைச் சொல்கிறது?
11 வகை ஹாரன் என்றால் ஒவ்வொன்றும் வேறு வேறு சத்தம் என அர்த்தம் இல்லை ஒரே ஹாரனை அடிக்கும் முறையில் 11 விதம் இருக்கிறது. அதில் #முதல் விதம் ஒரு சிறிய ஹாரன் இதற்கு அர்த்தம் ரயிலை அதன் டிரைவர் பணிமனைக்குள் சுத்தம் செய்ய எடுத்து வருகிறார் அல்லது சுத்தம் செய்த பின்பு பணிமனையிலிருந்து எடுத்த செல்கிறார் என அர்த்தம்
#இரண்டாவது வகை இரண்டு முறை சிறிய ஹாரன் அடிப்பது. இந்த ஹாரனிற்கு அர்த்தம் ரயிலில் டிரைவர் ரயிலின் பின்னால் உள்ள கார்டிற்கு ரயில் கிளம்புவதற்கு சிக்னல் செய்கிறார் என அர்த்தம் பொதுவாக ரயில் ஒரு ஸ்டேஷனிலிருந்து கிளம்பும் போது இந்த ஹாரன் சத்தத்தை நீங்கள் கேட்கலாம்
அடுத்தது #மூன்று முறை சிறிய ஹாரன் அடிப்பது. இது மிக அரிதாகவே அடிக்கப்படும். இதற்கு அர்த்தம் ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இல்லை என பின்னால் இருக்கும் கார்டிற்கு சிக்னல் செய்வதாக அர்த்தம். இந்த சிக்னல் கிடைத்ததும் ரயிலில் பின்னால் உள்ள அட்டை தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த வேண்டும். இந்த வகை ஹாரன் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்டாலும் இது ஆபத்து என்பதை உணர்த்தும் சிக்னல்
அடுத்தது #நான்கு முறை சிறிய ஹாரன் அடிப்பது. இந்த ஹாரன் ரயில் நிற்கும் நிலையில் தான் அடிக்க வேண்டும். ரயில் ஏதாவது தொழிற்நுட்ப கோளாறு, அல்லது ஓடும் பாதையில் சிக்கல் ஏற்பட்டு அடுத்து ரயில் தன் பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் பின்னால் உள்ள கார்டிற்கு டிரைவர் 4 முறை ஹாரன் அடித்து தகவலைக் கொடுப்பார்
#ஐந்தாவது ஹாரன் வகை தொடர் ஹாரன் ரயில் ஒரு ரயில் நிலையத்தில் நிற்காமல் வேகமாகச் சென்றால் அந்த ரயில்நிலையத்தைக் கடக்கும் போது ரயிலில் தொடர் ஹாரன் அடிக்க வேண்டும். நீங்கள் ரயிலில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டால் நீங்கள் ஏதோ ரயில் ரயில் நிலையத்தை வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்
அடுத்தது #ஆறாவதாக ஒரு நீண்ட ஹாரன் ஒரு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலிக்கப்படும். இதற்கு அர்த்தம். இது பெரும்பாலும் ரயில் கிளம்பும் இடத்தில் அடிக்கப்படும் ரயில் ஒரு இடத்தில் நிறுத்தப்படும் போது இன்ஜின் மற்றும் கார்டு ஆகிய இருவரும் பிரேக் பிடித்திருப்பார்கள். ரயில் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு கார்டை அலார்ட் செய்து அந்த பிரேக்கை ரிலீஸ் செய்ய இந்த இன்ஜின் சிக்னல் செய்கிறது. இதை கேட்டதும் கார்டு பிரேக்கை விடுவிப்பார்
#ஏழாவதாக இரண்டு நீண்ட ஹாரன், இரண்டு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலிக்க வைக்கப்பட்டாலும் அது ரயில் அபாயத்தில் இருக்கிறது என அர்த்தம். ரயில் இன்ஜினில் ஏதோ பிரச்சனை காரணமாக ரயிலை இன்ஜினில் உள்ளவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த ஹாரன் ஒலிக்க வைக்கப்படும். உடனடியாக ரயிலில் பின் பெட்டியில் உள்ள கார்டு இன்ஜினின் கண்ட்ரோலை தான் எடுத்து ரயிலை நிறுத்த வேண்டும் என அர்த்தம்
#எட்டாவதாக இரண்டு பாஸ்களுடன் கூடிய இரண்டு ஹாரன். இதற்கு அர்த்தம் ரயில் ஒரு ரயில்வே கிராசிங்கை கடக்கப்போகிறது என அர்த்தம். இந்த ஹாரன் சத்தம் ரயில்வே கிராசிங்கில் ரயிலுக்காக காத்திருக்கும் மக்களுக்கு ரயில் வருகிறது என எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த ஹாரன் சத்தம் எழுப்படுகிறது.
#ஒன்பதாவதாக இரண்டு நீண்ட ஹாரன் ஒரு சிறிய ஹாரன் சத்தம் அடுத்தடுத்து ஒலிக்க வைக்கப்பட்டால் அதற்கு ரயிலின் டிரைவர் இன்ஜின் டிராக்கை மாற்றுகிறார். என அர்த்தம் பெரும்பாலும் ரயில் நிலையங்களுக்கும் ரயில் நுழையும் போது இந்த வகையான ஹாரன் ஒலிக்க வைக்கப்படும்.
#பத்தாவதாக இரண்டு சிறிய ஹாரன் ஒரு நீண்ட ஹாரன் ஒலிக்க வைக்கப்பட்டால் அதற்கு இரண்டு அர்த்தம் இருக்கலாம். ஒன்று ரயிலில் உள்ள பயணி யாராவது அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் இந்த ஹாரன் ஒலிக்க வைக்கப்படும். அல்லது ரயிலின் பின்னாடி உள்ள கார்டு பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினாலும் இந்த ஹாரன் தான் ஒலிக்கப்படும். ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக உஷாராகி என்ன நடக்கிறது அறிந்து செயல்பட வேண்டும்.
#கடைசியான முறை 6 முறை சிறிய ஹாரன்களை அடிப்பது இது மிக மிக மிக அரிதான இடங்களில் தான் அடிக்கப்படும். ரயில் ஏதாவது ஆபத்தில் சிக்கிவிட்டால் இந்த ஹாரன் அடித்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதாவது ரயிலைத் தீவிரவாதிகள் கடத்திவிட்டாலோ, அல்லது ரயில் வழிப்பறி கொள்ளை கூட்டத்திடம் சிக்கிவிட்டாலோ, ரயிலை வன விலங்குகள் சுற்றிதாக்குதல் நடத்தத் துவங்கிவிட்டாலோ இவ்வாறான சிக்னல் கொடுக்கப்படும்.
இந்த ஹாரன் சிக்னல் முறை எல்லாம் ரயில்கள் ஓடத்துவங்கிய காலகட்டத்தில் விதிமுறைகளாக வகுத்து வைத்தனர். அப்பொழுது ரயிலின் இன்ஜினில் இருப்பவர்களுக்கும் பின்னால் இருக்கும் கார்டிற்கும் தொடர்பு இருக்காது. ஆனால் இன்று அப்படி அல்ல வயர்லெஸ் கம்யூனிகேஷன் வந்துவிட்டது. தற்போது தகவல்கள் உடனடியாக பறக்கின்றன. அதனால் இந்த ஹாரன் சிக்னல் எல்லாம் ஒரு கடமைக்கு தான் இருக்கிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?