காதல் மூன்று எழுத்து காவியம்
இதை பற்றி எழுதாத கவிகன் இல்லை
பாடாத பாடகன் இல்லை
வள்ளுவனும் இரண்டு அடிக்குள் காதலை
சொல்லி விட்டான் அழகாக
காக்கை குருவி கூட
காதலை பரிமாறி கொள்கிறது
மனிதன் மட்டும் இன்னும்
காதலை அரளி விதையாக எண்ணி
கசந்து கொண்டிருகிறான்
ஐந்து அறிவு ஜீவனுக்கும் காதல் புரிந்து விட்டது
ஆறு அறிவு மனிதனுக்கு மட்டும்
ஏனோ புரிந்த பாடில்லை
காதலும் காலம் காலமாக
மனிதனிடம் அகப்பட்டு
சித்திரவதை அனுபவிக்கறது
காதலை மீட்க
காதலால் இணைக்க பட்ட நாம்
முற்படுவோம் காதலனே