Author Topic: பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?  (Read 30 times)

Offline MysteRy


பச்சை மிளகாய் காரத்துக்கும், சுவையை அதிகப்படுத்துவதற்கும் மட்டுமே உபயோகப்படுகிறது என நம்மில் பலர் நினைக்கிறோம்.

ஆனால், பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.

ஜீரண சக்தி

பச்சை மிளகாயை மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதன் மூலம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

இரும்புச்சத்து

இதில் அடங்கியிருக்கும் வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவுவதோடு, அனீமியாவை எதிர்த்தும் போராடுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

எலும்பு பலமாகும்

பச்சை மிளகாயில் அதிகப்படியான வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு காயம் ஏற்ப்பட்டால் அதிக ரத்தம் வெளியேறாது. இதோடு எலும்புகளும் வலு பெறும்.

உடல் எடை

பச்சை மிளகாய் கொழுப்பை குறைக்கும். இதில் கலோரி இல்லை என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

இதயம்

பச்சை மிளகாயில் மினரல்ஸ், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இவை சீரான இதயத்துடிப்பிற்க்கும், ரத்த அழுத்தத்துக்கும் நலம் பெயர்க்கும்.