Author Topic: மண்ணீரல் பிரச்சனைகளை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள்..  (Read 90 times)

Offline MysteRy


நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செய்தால் தான், நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் நம்மில் பலருக்கு மண்ணீரல் என்ற உறுப்பு இருப்பதே தெரியாது. மண்ணீரல் என்பது கல்லீரலுக்கு அருகில் இருக்கும் உறுப்பாகும்.

இதன் முக்கிய பணி இரத்தத்தில் உள்ள முதிர்ந்த சிவப்பணுக்களைப் பிரித்து அழிக்கும். மேலும் இது தசைகளுக்கு வலிமையூட்டும், இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்க ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் மற்றும் இரத்த அளவைக் கட்டுப்படுத்தும்.

இந்த மண்ணீரலில் பிரச்சனைகள் ஏற்பட்டால், அது உடலின் செயல்பாடுகளைப் பாதித்து, கடுமையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இங்கு மண்ணீரல் பாதிக்கப்பட்டால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் மண்ணீரலில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் :-

மண்ணீரல் பாதிக்கப்பட்டால், பசியே எடுக்காது, களைப்பு, உதிரப்போக்கு கோளாறுகள் அல்லது மோசமான செரிமானம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.

இஞ்சி :-

இஞ்சி, உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தி, மண்ணீரல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே அடிக்கடி இஞ்சியை சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வாருங்கள்.

குடைமிளகாய் :-

குடைமிளகாய் மண்ணீரலில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும். உங்களுக்கு அடிவயிற்றிற்கு மேல் சிறிது வலி ஏற்பட்டால், குடைமிளகாயை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் மண்ணீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வைட்டமின் சி :-

வைட்டமின் சி ஒரு நேச்சுரல் ஆன்டி-ஆக்ஸிடன்ட். மேலும் வைட்டமின் சில ஒரு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரித்து, மண்ணீரல் சம்பந்தமான கோளாறுகளை எதிர்த்துப் போராடும். ஆகவே அடிக்கடி ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

செம்பருத்தி வேர் :-

செம்பருத்தி செடியின் வேர் பொடியுடன் சரிசம அளவில் கல் உப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை சிறு உருண்டைகளாகப் பிடித்து, வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை தினமும் இருவேளை உட்கொண்டு வர, மண்ணீரல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்..