Author Topic: அது போதும் ( இப்போதைக்கு ) எனக்கு !  (Read 700 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பள பளவென பல பதிப்புக்கள்
படைத்து பதித்து முடித்துவிட்டேன்

நான் பார்த்து பார்த்து
பதித்த பதிப்புக்களில்

தனிநபர் விருப்பத்திற்கிணங்க சில பதிப்பு
என் தனிப்பட்ட விருப்பத்திற்கிணங்க சில பதிப்பு .
என் பதிப்புக்களில் பெரும்பாலும் பாராட்டப்படுவதும்
பாராட்டு மழையில் எனை தெப்பமாய் நனையவைத்து
பூரித்திட வைப்பதும்
பொன் மனம் படைத்த பூமகள் அவளுக்காக
என் மனம், தன் மனம் மயங்கி
வகைவகையாய், வசமாய்,வாசமாய்
விருந்தாய்,வர்ணனையாய்,வசீகர
வரிகளில் வடித்து வைக்கப்பட்ட
விஷேஷ வரிகளின் தொகுப்பே !

தன் மென் நினைவால், பொன் நினைவால்
கற்பனை அருவியை, நயாகரா அருவியாய்
ஊற்ற செய்த என் காதல் சிட்டு குருவி நீ ...

என் பதிப்ப்புக்களை பலரும் போற்ற செய்திருக்கின்றேன்.
தடை போடவே முடியாத சீற்றத்தில் சிலரால்
தூற்றவும் செய்திருக்கின்றேன் .

தமிழை மூலமாய் கொண்டு வெறும்
சில வரிகளின் துணை கொண்டு
வார்த்தைகளை தோரணமாய்  கட்டி
வழிமுழுதும்  வர்ணனையால் வாசல் தெளித்து
வீண் விழா நடத்தும் வீணன் நீ ?
என ஏளனமாய் எனை நினைக்கலாம் ?

காய்ந்த மரம் என்றால் கல்லடி படுவது சகஜம் .
ஆனால்
காய்ந்து ,கனிந்து கனிவான என் மனம் சொல்லடி
படுவது தான் தீராத சோகம்
எது எப்படியோ ,யார் என்னை தடுத்தாலும்
நான் ஜுரம் வந்தே  படுத்தாலும்

உயிரினைமூலமாய் கொண்டு ,அவள்
நினைவின் துணையோடு , நரம்புகளை
தோரணமாய் கட்டி ,என் மொத்த ரத்தத்தால்
வாசல் தெளித்து ,விசேஷமாய் ,
விமரிசையாய்,விமர்சனமாய் விழா நடத்தவும்
நான் தயாராய் இருப்பவன் என அவள் அரிவாள் !
அது போதும் ( இப்போதைக்கு ) எனக்கு !

Offline supernatural

பொன் மனம் படைத்த பூமகள் அவளுக்காக
என் மனம், தன் மனம் மயங்கி
வகைவகையாய், வசமாய்,வாசமாய்
விருந்தாய்,வர்ணனையாய்,வசீகர
வரிகளில் வடித்து வைக்கப்பட்ட
விஷேஷ வரிகளின் தொகுப்பே !

poomagal aval ..ungal inimai  tamilaal ..vasikara varigalaal... vagai vagaiyaai..azagaai ..arumaiyaai.. varnikkapada perum baakiyam seithirukkavendumey kaviye!!

தன் மென் நினைவால், பொன் நினைவால்
கற்பனை அருவியை, நயாகரா அருவியாய்
ஊற்ற செய்த என் காதல் சிட்டு குருவி நீ ..

ungal sittukuruviyin  nenaivigalukku ithanai valimaiya???

காய்ந்த மரம் என்றால் கல்லடி படுவது சகஜம் .
ஆனால்
காய்ந்து ,கனிந்து கனிவான என் மனம் சொல்லடி
படுவது தான் தீராத சோகம்


kanivaana kaviyin manathai sollal adithavara??



உயிரினைமூலமாய் கொண்டு ,அவள்
நினைவின் துணையோடு , நரம்புகளை
தோரணமாய் கட்டி ,என் மொத்த ரத்தத்தால்
வாசல் தெளித்து ,விசேஷமாய் ,
விமரிசையாய்,விமர்சனமாய் விழா நடத்தவும்
நான் தயாராய் இருப்பவன் என அவள் அரிவாள் !
அது போதும் ( இப்போதைக்கு ) எனக்கு !

uyarvaana.. unnathamaana varigal...uyirl kalantha kaathalukku vaazthukkal!!!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!