என் ஆருயிர் அண்ணா!
அம்மாவின் அன்பும் ,அப்பாவின் பாதுகாப்பும் ஒன்றாக கிடைத்தது உன்னிடமே என் அருமை அண்ணா!
அவனியில் நான் உதித்த போது, என் பிஞ்சுக் கரம் பிடித்து,நான் இருக்கிறேன் உனக்கு வா வீட்டுக்கு போகலாம் என்று என்னை அழைத்துச் சென்றாய்!
அந்த பற்றிய கரம் விடாமல் இன்றுவரை பத்திராமாக பாத்துகிறாய் உன் குட்டிமா என்று!
பிறக்கும் முன்பு உன்னை தெரிந்திருந்தால், பிறக்கும் போது கூட அண்ணா என்று அழுதிருப்பேன்!
நம்ம அண்ணா தங்கை உறவு விலை மதிப்பற்ற பாசம்!
நம்ம பாசத்துக்கு நடுவில் எந்த உறவும் வர முடியாது, வரவும் நாங்கள் விட்டதில்லை!
நம்ம பற்றிய கரங்கள் யாராலும் அவிழ்த்து விட முடியாது!
எனக்குள் மிகப்பெரிய பெருமிதம் எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறாய் என்பதே!
எங்கள் உறவு இதயங்களால் இணைக்கப்பட்டது ,கைகளால் மட்டுமே அல்ல!
அழுதால் துடைக்கும் ,சிரித்தால் தட்டும்,செல்லமாய் குட்டும் பாசமான என் அண்ணா!
டேய் அண்ணா என்று அதட்டலுடன் ,அன்பாய் உன்னை அழைப்பேன்!
கடவுள் எனக்கு கொடுத்த வரம் நீ அண்ணா!
சண்டை போட்டாலும் அடுத்த கணமே சமாதானம் ஆகி ,ஒன்றாக சாப்பிட்டு அம்மாவையே என்னடா இது என்று மிரள வைத்திருக்கிறோம் அண்ணா!
கக்ஷ்டம் வந்து நான் துவளும் போதெல்லாம்,
நான் இருக்கேன் உனக்கு என்று சொல்லி ,என் கைகளைப் பிடித்து உன் தோள் சாய்த்தாய் அண்ணா!
அண்ணனுக்கு கண்ணீர் விடுபவள் தங்கை!
தங்கைக்காக உயிரை விடுபவன் அண்ணன்!
அண்ணா நீ மணம் முடித்து சென்றபோது ,என் கண்கள் கலங்கவில்லை,ஏன் தெரியுமா? நீ கரம் பற்றியது ஒரு கரம் என்னுடன்,மறு கரம் அண்ணியுடன்!
இந்த வரம் கிடைத்த நான் அதிக்ஷ்டசாலி!
நாங்கள் வேலைக்காக தொலைதூரத்தில் இப்போ இருக்கின்றோம்!
தொலைதூரத்தில் இருந்தாலும் ,நினைவெல்லாம் நீ அண்ணா!
உன் நினைவுகள் என்னை வாட்டும் போது ,நான் FTC போய் நண்பர்களுடன் உரையாடுகின்றேன்!
இந்த உலகில் அப்பாக்கு பின் நான் நம்பும் ஒரே ஆண் நீ தான் அண்ணா!
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம்ம பாசம் மாறாது அண்ணா!
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ,நீ தான் என் அண்ணாவாக வர வேண்டும் என வரம் கேட்பேன்!
நாங்கள் பற்றிய கரங்களை விட மாட்டோம் ,எதுக்காகவும் யாருக்காகவும்!
அண்ணா நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!
உன் அருமை குட்டிமா தேன்மொழி!