Author Topic: மதுவுக்கு அடிமையானவர்களா? இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிடுங்கள்  (Read 312 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226625
  • Total likes: 29008
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.
கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது.

இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும்.

முகத்திற்கு பொலிவையும், அழகையும் தந்து தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை பறந்துவிடும்.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும்.

வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது.

கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.