Author Topic: அன்பு என்ன செய்யும் ??  (Read 89 times)

Offline Madhurangi

அன்பு என்ன செய்யும் ??
« on: August 12, 2025, 04:26:03 PM »
அன்பு என்ன செய்யும் ??

நாத்திகனையும் முருகன் கோவில் ஏறி இறங்க  செய்யும்..

6 அடி மனிதனையும் baby  என கூப்பிட்டால், சொல்வதை செய்ய செய்யும்

பச்சைக்கும் நீலத்திற்கும் வித்தியாசம் அறியாதவனை  கூட bottle green with chilly red boarder saree  தேடி வாங்க வைக்கும்..

சமூக நலம் கூறும் ஸ்டேட்டஸ் வைப்பவனை .. love reelsaaga பார்த்து பார்த்து edit  , share  பண்ண செய்யும்..

அம்மாவோடு சேர்ந்து பாக்கியலட்சுமி பார்த்து ரசித்தவனை  .. korean series , BTS  விமர்சிக்க  செய்யும்..

MATCHING SHIRT போட செய்யும்..

தனி ROOM  கேட்டு அடம் பிடிக்க வைக்க செய்யும்..

தூக்கம் தொலைக்க செய்யும்..

பசி மறக்கச் செய்யும்

முன் கோவம் துறக்கச் செய்யும்..

முரடனின் பேச்சில் கூட இனிமை கூட்ட செய்யும்..

நான் எனும் கர்வம் அழிக்க செய்யும்..

இன்னொரு உயிருக்காய் வாழ செய்யும்..

அன்பின் வழியது உயிர்நிலை
[/size][/color]










Online joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1133
  • Total likes: 3811
  • Total likes: 3811
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அன்பு என்ன செய்யும் ??
« Reply #1 on: August 12, 2025, 06:09:18 PM »
அன்பு
அழ சொல்லி தரும்
பிறர் அழாமலிருக்க சொல்லித்தரும்
அஹிம்சை சொல்லித்தரும்
பிழைகளை மறைத்து அரவணைக்க சொல்லித்தரும்
நினைவுகளின் மடியில் உறங்க சொல்லித்தரும்
பிறர் இதயத்தின் ரகசியம் சொல்லித்தரும்

அழகான கவிதை Madhurangi
பலதும் கற்று தரும் அன்பு
அன்பை  விதைப்போம்


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "