நடுநிசியில் தேவைப்படா ஒளியாய்
மறைந்து போக ஆசை.
நெடுந்தூரம் பயணிக்கும் பிரயாணியின்
ஒளியாய் பயணிக்க ஆசை.
ஒரு சிறு குட்டைக்குள் அடைப்படாத
தெளிந்த நீரோடையாய் ஓட ஆசை.
முகமூடி அணியா உயிர்களுடன்
முகத்திரையின்றி மூச்சுவிட ஆசை.
முடிவடையா சில தேடல்களில்
முழுமையாய் மூழ்க ஆசை.
நிற்காமல் துரத்தும் நினைவுகளின்
எதிர்நின்று புன்னகைக்க ஆசை.
அல்லும்பகலும் துள்ளி குதிக்கும் அலைக்கடலுடன்
அமைதியில் உரையாட ஆசை.
வான்வீதியில் உலவும் மதியில்
மதியிழந்து மயங்க ஆசை.
யாரும் தேடா தொலைதூரம்
கொஞ்சம் தொலைந்து போகதான் ஆசை...