Author Topic: அவளுக்கு நன்றி !  (Read 596 times)

Online joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1208
  • Total likes: 4078
  • Total likes: 4078
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அவளுக்கு நன்றி !
« on: August 09, 2025, 12:48:28 PM »
வாழ்வில் சிலருக்கு
புன்னகை என்பது
இலையின் முனையில்
பனித்துளிமின்னுவது போல
சூரிய கதிர்கள் வரும் நேரம்
மாயமாகி விடும்

பெருந்துக்கங்கள் உள்ள உள்ளத்தில்.
புன்னகை என்பது
நாடகமாய்
இதழ்களில்
தங்கிவிடும்

நினைவில் இருக்கிறதா,
நாம் ஒருகாலையில்
நிறைய வாதமிட்டு பேசிக்கொண்டோம்
ஆனால்..
இன்று ஒரு வார்த்தை கூட
பேச முடியாத அளவுக்கு
நம்மிடம் தூரம்

இந்த உலகத்தில்
மிக அபாயகரமானது
எது என்றால் அது,
ஒருவரை பற்றிய நம் கொண்டாடல்…
மேலும் நம்மை
மிகவும் விரும்பும் அந்த நபர்
நம்மிடம் காட்டும் மௌனம்

எழுதிய முடியாத
ஒரு வலியாக
மனதில்
ஓர் ஓரத்தில்
தங்கி விடும் பாரம்
 
மனிதன் மனம் மாற
நொடிகள் மட்டும் போதும்,
என்று பல மனிதர்கள்
நிரூபித்துள்ளனர்.
நம் வாழ்வில்

இழந்தது அனைத்தும்
அவளுக்காகவே மட்டுமே இருந்தது
இன்று இழப்பதற்கு எதுவுமில்லை

மலர்ந்த பூ ஒர் நாள் வாடிவிடும்
அது விட்டு சென்ற வாசனை
நம் நினைவில் என்றும் இருக்கும்

நினைவுகளையேனும்
என்னிடம் விட்டுச்சென்ற
அவளுக்கு நன்றி


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Asthika

Re: அவளுக்கு நன்றி !
« Reply #1 on: August 09, 2025, 09:20:57 PM »
எழுதிய முடியாத
ஒரு வலியாக
மனதில்
ஓர் ஓரத்தில்
தங்கி விடும் பாரம்

Vidai puriyatha pudhir avargal nam meedhu velipaduthum mounam ..
Mounathiley ooraryiram vinakkal nammil

Arumaiyana velipaadu ungalin kavidhai 💫💫💫

Offline Yazhini

Re: அவளுக்கு நன்றி !
« Reply #2 on: August 11, 2025, 01:45:07 AM »
நினைவுகள் மட்டும் சிலரின் பரிசுகளாக நம்மிடம் தங்கி விடுகிறது....😊
நினைவுகள் அழகான சாபம் என்பதா? கொடிய பரிசு என்பதா?
எதுவாகினும் நினைவுகளில் நித்திரையும் தொலையதான் செய்கிறது...

அருமையான வரிகள் சகோ❤️

Online joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1208
  • Total likes: 4078
  • Total likes: 4078
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அவளுக்கு நன்றி !
« Reply #3 on: August 11, 2025, 11:52:22 AM »
Nandri  Asthika & Yazhini

ungal paraatukku

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "