Author Topic: வயதானவர்களுக்கான உணவுப்பட்டியல்...  (Read 277 times)

Offline MysteRy


வயதானவர்கள் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

1.ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

2.சர்க்கரை நோய் இருப்பவர்கள், கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்கு வகைகளைத் தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், ஓட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

3.உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சாத்துக்குடி, ஆரஞ்சு நல்லது. உப்பைக் குறைத்து, பொட்டாஷியம் சால்ட் வாங்கி உபயோகிக்கலாம். ஆனால், சிறுநீரகம் பழுதானவர்கள் பயன்படுத்தக் கூடாது.

4.எலும்புகள் வலுவிழந்து போகும் என்பதால், கண்டிப்பாக பால், தயிர் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

5.உலர் பழங்கள், கொட்டைகள் பாலில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

6.தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில் சிறிது சேர்க்கலாம். ஆனால், சூடுபடுத்தக் கூடாது.