உன்னைக் காணும் நொடியிலே
உலகம் முற்றும் மாயமாய் மரைந்தது...
ஒரு புன்னகை போதும் எனது இதயத்தை
புனிதமாய் மாற்றினாய்...
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
பாடலாய் கேட்கும் என் காதுகள்,
உன் பார்வை என்னைத் தேடி வந்தால்
நான் வாழ்வே மறந்து விழுந்துவிடுகிறேன்...
மழை துளி போல என் மனதைத் தழுவுகிறாய்,
மௌனத்தில் கூட காதல் சொல்லுகிறாய்...
என் உயிரின் ஒவ்வொரு ஓசையும்
நீ என்றே பாடுகிறது...
உன் பெயர் ஒரு கவிதை...
நீ என் வாழ்க்கையின் அழகான வரி!